'சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனம் ஆர்.டி.ஐ., வரம்பிற்குள் வராது'

Added : ஜன 12, 2016
Advertisement


புதுடில்லி,: 'சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் நியமன நடைமுறையை, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்குள், மத்திய அரசு கொண்டு வராது' என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
சுப்ரீம் கோர்ட் மற்றும், 24 ஐகோர்ட்களின், நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு போன்றவற்றை, ஆர்.டி.ஐ., அதிகார வரம்பிற்குள், மத்திய அரசு உட்படுத்தாது. ஆர்.டி.ஐ., வரம்பிற்குள் இவற்றை உட்படுத்தினால், பதவி கிடைக்காதவர்கள், எண்ணற்ற புகார்களை அளித்து, குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.
அதேசமயம், 'கொலீஜியம்' எனப்படும் நீதிபதிகள் குழு, நீதிபதிகள் நியமனத்துக்காக அளிக்கும் பரிந்துரைகளில், வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. கொலீஜியம் அளிக்கும் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு வந்தால், அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஷரத்தை, நீதிபதிகள் நியமன நடைமுறையில் சேர்ப்பது பற்றி, அரசு பரிசீலித்து வருகிறது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, சில நாட்களில், மத்திய அரசு அளிக்கவுள்ள வரைவுத் திட்டம் பற்றி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும், கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களும் இறுதி முடிவு எடுப்பர். அதன்படி, வருங்காலத்தில், நீதிபதிகள் நியமனங்கள் அமையும்.
இவ்வாறு அரசு வட்டாரங்கள் கூறின.

பரிந்துரைகள் ஏன்?
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிப்பதற்காக, என்.ஜே.ஏ.சி., எனப்படும், தேசிய நீதிபதிகள் நியமன கமிஷன் நியமிக்க, மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், என்.ஜே.ஏ.சி.,யை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இவ்விஷயத்தில், கொலீஜியம் முறையே தொடர வேண்டும் என்றும் கூறியது.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை, கொலீஜியம் முறைப்படி நியமிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பரிந்துரைகளை, 24 ஐகோர்ட்களின் தலைமை நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் கலந்தாலோசித்து அளிக்கும் பொறுப்பை, மத்திய சட்ட அமைச்சகத்திடம், சுப்ரீம் கோர்ட் ஒப்படைத்தது.
அதனால், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, இரண்டு திட்ட வரைவுகளை, சட்ட அமைச்சகம் தயாரித்து வருகிறது. இவற்றில் ஒன்று, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள் நியமனம் தொடர்பானது; மற்றொன்று, ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மற்றும் பிற நீதிபதிகள் சம்பந்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X