ரவுடி கொலை வழக்கு :நான்கு பேர் சரண்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரவுடி கொலை வழக்கு :நான்கு பேர் சரண்

Added : ஜன 12, 2016

புழல்:முன்விரோதத்தால், ரவுடியை வெட்டி கொன்ற கும்பலை சேர்ந்த நால்வர், இரண்டு நீதிமன்றங்களில் சரண் அடைந்தனர். புழல், காவாங்கரை சங்கரலிங்கனார் தெருவில் வசித்தவன் சிவராஜ், 35; ரவுடி. கடந்த, 7ம் தேதி இரவு, 8:30 மணியளவில், காவாங்கரை மீன் மார்க்கெட் அருகில் உள்ள, 'டாஸ்மாக்' பாரில் மது குடித்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல், அவனை வெட்டிக் கொன்றது. புழல் போலீசார் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடினர். இந்த நிலையில், காவாங்கரை, சங்கரலிங்கனார் தெருவைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்ற நாய் ரமேஷ், 33, சிட்டால் என்ற மோகனசுந்தரம், 31 ஆகியோர், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்திலும், ரூபன், 28, பரந்தாமன், 26, ஆகியோர், பொன்னேரி நீதிமன்றத்திலும், நேற்று மாலை சரணடைந்தனர். இதில், ரமேஷ், ரூபன் ஆகியோர் அண்ணன் தம்பிகள். முன்விரோதம் காரணமாக, சிவராஜ் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களை, காவலில் எடுத்து விசாரிக்க, புழல் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X