சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய 100 திமிங்கிலங்கள் ; 20 இறந்தன

Updated : ஜன 12, 2016 | Added : ஜன 12, 2016 | கருத்துகள் (25)
Advertisement
திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய 100 திமிங்கலங்கள் ; 20 இறந்தன

தூத்துக்குடி : திருச்செந்தூர் கடல் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின .இவற்றை கடலுக்குள் கொண்டு செல்ல மீன்வள துறை மற்றும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.திருச்செந்தூர் அருகே ஆலந்தழை பகுதியில் நேற்று (11ம் தேதி) மாலை 100 சிறிய வகை திமிங்கிலங்கள் கரையில் விளையாடியது. ஆழ் கடல் பகுதியில் திசையறியாமல் கல்லாமொழி , சுனாமி குடியிருப்பு , மணப்பாடு 20 கி மீட்டர் தொலைவு வரை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியபடி இருந்தன , இப்பகுதி மீனவர்கள் கடலுக்குள் கொண்டு விட்டும் இவை மீண்டும் கரைக்கு வந்தன .ஆழமான பகுதிக்குள் கொண்டு விட்டால் தான் இவை மீண்டும் கரைக்கு வராமல் இருக்கும் .

திமிங்கிலங்களை இப்பபகுதி மீனவர்கள், வனத்துறையினர் உள்ளே அனுப்பியும் போக முடியவில்லை . இன்று காலையில் மீன்வளதுறை அதிகாரிகள் , மீன்வள கல்லூரி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர் . திமிங்கிலம் கரை ஒதுங்கியதன் காரணம் குறித்து கலெக்டர் ரவிக்குமார் , டிஜஜி அன்பு விசாரித்தனர்.

இந்த திமிங்கலங்கள் 10 அடி நீளம் வரை இருந்தது. இது ஒவ்வொன்றும் 200 கிலோ வரை இருக்கும். இது குறித்து மீனவர்கள் கூறுகையில்; இவை ஓங்கல்கள் என அழைப்போம் இது மீனவர்களின் நண்பர்கள் கடந்த 40 ஆண்டுகளில் இது போல் பார்த்ததில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். கடல் சூழல் மாற்றம் காரணமாக வந்ததா , அல்லது பெரும் திமிங்கலங்கள் தின்ன முயற்சித்த போது இவ்வாறு வந்திருக்கலாம் என்றும், பெருமடைக்காரல் என்ற மீன்கள் தங்களை காத்து கொள்ள ஒரு திரவத்தை சுரக்கும், இந்த திரவம் மயக்க நிலையை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது . திருச்செந்தூர் அருகே கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் இறந்தது இப்பகுதியில் சோக அலை ஏற்படுத்தியது.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஜன-201604:09:58 IST Report Abuse
Kasimani Baskaran கடற்ப்பரப்பிலும், பூமிக்குள்ளும் ஏற்ப்படும் மாற்றங்களை விலங்கினங்கள் மிக எளிதாக உணர்ந்துகொள்ளும் திறம்படைத்தவை... ஏதோ பேரிடர் வரப்போவதை காட்டுகிறதோ?
Rate this:
Share this comment
Cancel
abu lukmaan - trichy,இந்தியா
12-ஜன-201619:50:31 IST Report Abuse
abu  lukmaan ஜப்பான் திமிங்கல வேட்டையை ஆரம்பித்து விட்டது .அவர்கள் 50 டன் எடைக்கு மேல் உள்ள பெரிய திமின்களை தான் வேட்டை ஆடுவார்கள் .இந்த குட்டி திமிங்களின் தாய் களை வேட்டை ஆடி இருப்பார்கள் . குட்டிகளை வழி நடத்த ஆள் இல்லாதால் கரைக்கு வந்து இருக்கும் . ஆழ கடல் நில நடுக்கம் , அணுகுண்டு வெடிப்பு பரிசோதனை இவற்றின் காரணமாக வந்து இருக்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
12-ஜன-201619:41:01 IST Report Abuse
christ எல்லா கழிவுகளும் கடலில் கொட்டபடுகிறது அதன் விளைவாக கூட இருக்கலாம்
Rate this:
Share this comment
Parvi Seng - Pallipalayam,யூ.எஸ்.ஏ
13-ஜன-201603:38:08 IST Report Abuse
Parvi Sengமேலை நாடுகள் கழிவுகளை கடலில் கொட்டுவதில்லை. வளரும் நாடுகளும் உடனே இதை செய்யவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X