"கோவில் விழாவுக்கு அனுமதி கேட்ட இந்து அமைப்பினர், போலீஸ் கமிஷனரை அலற வச்சுட்டாங்க,'' என்றபடி, அன்றைய நாளிதழ்களை புரட்டினாள் சித்ரா.
""என்னாச்சுக்கா? விழாவுக்கு அனுமதி கேட்டா, கொடுக்க வேண்டியதுதானே. இதுல, அலறதுக்கு என்ன இருக்கு,'' என கேட்டாள் மித்ரா.
""இந்து மக்கள் கட்சி - அனுமன் சேனா அமைப்பு சார்பில், பிச்சம்பாளையத்தில் மகா பிரத்யங்ரா யாக வேள்வி நடந்துச்சு. போலீஸ் அனுமதி, பாதுகாப்பு கேட்டு, கமிஷனரை சந்திச்சிருக்காங்க. யாக வேள்வி பூஜைக்கு யானையை வரவழைக்க திட்டமிட்டிருக்கோம்னு சொன்னதும், கமிஷனர் ஆடிப்போயிட்டார். எவ்வளவு போலீஸ் வேணும்னு சொல்லுங்க; அனுப்பி வைக்கிறேன். போதாதுன்னா, "மிலிட்டரி' ஆட்களை கூட, ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி, அனுப்புறதுக்கு ஏற்பாடு செய்றேன். யானை, குதிரைக்கு அனுமதி கேக்காதீங்கன்னு சொல்லியிருக்காரு,'' என்றாள் சித்ரா.
""கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஐயப்பன் கோவில் ஊர்வலத்துக்கு வந்த யானை மிரண்டு, வீதி வீதியா சுத்துச்சே; அந்த பீதியில இருந்து, கமிஷனர் இன்னும் தெளியாம இருக்காரு போலிருக்கு,'' என்றாள் மித்ரா.
""நம்மூர்ல ரெண்டு அதிகாரிங்க, சொன்ன மாதிரி செஞ்சுட்டாங்க, தெரியுமா,'' என, புதிர் போட்டாள் சித்ரா.
""என்னக்கா, புதிர் போடுறீங்க. அப்படிப்பட்ட அதிகாரிங்க, நம்மூர்ல இருக்காங்களா? என்ன?'' என, துருவினாள் மித்ரா.
""ஒரு மாசத்துக்கு முன்னாடி, பள்ளிக்கூடத்துல இருந்து ஒரு மாணவியை, ஒருத்தன் கடத்திட்டு போயிட்டான். வழக்கை பதிவு செஞ்ச போலீஸ்காரங்க, "அசால்ட்டா' விட்டுட்டாங்க. மாணவியின் பெற்றோர், ஐகோர்ட் படியேறி, "ஆள் கொணர்வு' மனு தாக்கல் செய்து, உத்தரவு வாங்கியதும், போலீஸ்காரங்க ஸ்பெஷல் கவனம் எடுத்து விசாரிச்சாங்க. "டிரான்ஸ்பராகி' வேற ஊருக்கு போறதுக்குள்ள, மாணவியை மீட்டாகனும்னு கமிஷனர் சொல்லியிருக்காரு. இப்ப, "டிரான்ஸ்பர்' ஆர்டரும் வந்துருச்சு; மாணவியையும் மீட்டுட்டு வந்துட்டாங்க. அதைத்தான் சொன்னேன்,'' என்றாள் சித்ரா.
""இன்னொரு அதிகாரி யாருக்கா,'' என, மித்ரா கேட்க, ""நம்ம கலெக்டர்தான். புது கலெக்டர் ஆபீசுல, ஒரு நாளாவது ஒக்காரணும்னு ஆசைப்பட்டார்; அதே மாதிரி, ஆண்டிபாளையத்துல பொதுமக்களின் கரசேவையோடு உருவாக்குன பூங்காவை தெறந்து வைக்கணும்னு விரும்புனாரு. ரெண்டையுமே செஞ்சுட்டாரு. இப்ப, "டிரான்ஸ்பர்' ஆர்டருக்காக காத்துக்கிட்டு இருக்காரு,'' என்றாள் சித்ரா.
""அதெல்லாம் சரி, பூங்காவை யார் பராமரிக்கப் போறாங்க,'' என, இடைச்செறுகலாய் கேட்டாள் மித்ரா.
""பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்தான், பூங்கா இருக்கு. ஆனா, அவுங்க பராமரிச்சாங்கன்னா, கொஞ்ச நாள்ல பூங்கா கட்டாந்தரையா மாறிடும். அதனால, தன்னார்வ பொது நல அமைப்பினரிடம் ஒப்படைச்சா நல்லாருக்கும்,'' என்றாள் சித்ரா.
""அது சரி, டிரைவரை கட்டிப்போட்டுட்டு, வாடகை காரை கடத்திட்டு போன சம்பவத்துல, புகாரை வாங்காமல், போலீஸ்காரங்க அலைய விட்டுட்டாங்களாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""ஆமாப்பா, காரை வாடகைக்கு "புக்' செஞ்சது கோயமுத்தூர்ல; கடத்தல் ஆசாமிகள் கார்ல ஏறுனது கருமத்தம்பட்டியில; கார் பறிபோனது பெருந்துறையில. இதுல, நாங்க எப்படி வழக்கு பதியறதுன்னு, அவிநாசி போலீஸ்காரங்க "எஸ்கேப்' ஆக பார்த்திருக்காங்க. முக்கியமான கடத்தல் சம்பவம் நடந்துருக்கு; அவிநாசி போலீஸ்தான் விசாரிக்கணும்னு எஸ்.பி., உறுதியா சொல்லியிருக்காரு; அதனால, அவிநாசி போலீஸ்காரங்க, விசாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""ஓஹோ, அதனாலதான, சம்பவம் நடந்து ரெண்டு நாள் கழிச்சு, எப்.ஐ.ஆர். போட்டாங்களா,'' என, சொன்ன மித்ரா, ""தேர்தல் ஜூரம் ஆரம்பிச்சிடுச்சே; அரசியல் சங்கதி ஏதுமில்லையா?'' என, கேட்டாள்.
""இருக்கே, ஆளுங்கட்சியில ஓரங்கட்டப்பட்ட "மாஜி'யை தி.மு.க., பக்கமும், பா.ஜ., பக்கமும் இழுக்க காய் நகர்த்துறாங்க. எந்தப்பக்கம் போனாலும், சிட்டில இப்ப வி.ஐ.பி.,யா இருக்கறவரை எப்படியாவது தோற்கடிக்கணும்னு சபதம் செஞ்சிருக்காரு. இருந்தாலும், கடைசி நேரத்துல கட்சி தலைமையில இருந்து கூப்பிட்டு, சமரசம் செஞ்சா என்ன செய்றதுன்னு, குழப்பத்துல இருக்காரு. எதுவா இருந்தாலும், இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சிடும்,'' என்றாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE