அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மகத்தான வெற்றி: ஜெ., சூளுரை

சென்னை:'சட்டசபை தேர்தலில், மகத்தான வெற்றி பெற, முழு ஈடுபாட்டோடு பணியாற்றுங்கள்' என, கட்சியினருக்கு, முதல்வர் ஜெயலலிதா கட்டளையிட்டார்.

அ.தி.மு.க.,வில், விழுப்புரம் தெற்கு, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், புதிதாக கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது; எம்.ஜி.ஆர்., சிலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் திறப்பு விழா, நேற்று நடந்தது.சென்னையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், கட்சி அலுவலகம் மற்றும் எம்.ஜி.ஆர்., சிலையை, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

மகத்தான வெற்றி: ஜெ., சூளுரை

அப்போது, அவர் பேசியதாவது:எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க., இன்னும் பல, 100 ஆண்டுகள், மக்கள் பணியாற்றப் போகிற இயக்கமாகத் திகழும். மக்களுக்காக, எம்.ஜி.ஆரால்

ஆரம்பிக்கப்பட்ட, அ.தி.மு.க.,வை என் உயிரினும் மேலாக மதித்து, கட்டிக் காத்து வருகிறேன். காலத்தின் தேவைக்கேற்ப, நவீனம் பெற வேண்டும் என பெருமுயற்சி எடுத்து, 1998ல் தலைமை அலுவலகத்தை புதுப்பித்தேன்.இது போலவே, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கும் படி, நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டேன். கோவை, விழுப்புரம் வடக்கு, தர்மபுரி, புதுச்சேரிஆகிய இடங்களில், கட்சி அலுவலகங்கள், சொந்த கட்டடத்தில் இயங்குகின்றன; புதிதாக, ஆறு மாவட்ட அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.புதிய ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக, இந்நிகழ்ச்சி நடைபெறுவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அடையப்போகும் மகத்தான வெற்றிக்கு, முன்னோடியாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.அத்தகைய வெற்றியை அடைய, நீங்கள் அனைவரும் முழு ஈடுபாட்டோடு, தேர்தல் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி ஆகியோர் நன்றி தெரிவித்து பேசினர்.

16 மாதத்துக்கு பின் கட்சி ஆபீஸ் வந்தார் ஜெ.,:

அ.தி.மு.க., தலைமைஅலுவலகத்திற்கு, 16 மாத இடைவெளிக்கு பிறகு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று, கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.முதல்வர்

Advertisement

ஜெயலலிதா, 2014 ஆகஸ்ட் மாதம், கட்சியின் பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். அதையொட்டி, ஆக., 29ம் தேதி, கட்சி அலுவலகத்திற்கு வந்து, தொண்டர்கள் மத்தியில் பேசினார்; அதன் பின், வரவில்லை. விழுப்புரம் தெற்கு, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள, அ.தி.மு.க., அலுவலகத்தை, வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைப்பதற்காக, நேற்று ஜெயலலிதா, சென்னை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள, கட்சி தலைமை அலுவலகம் வந்தார்.அவரை வரவேற்க வழிநெடுகிலும் பேனர்கள் வைத்திருந்தனர். காலை, 10:50 மணிக்கு வந்த முதல்வருக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, வரவேற்பு அளிக்கப்பட்டது. மகளிர் அணியினர், பூரண கும்பம் ஏந்தி வரவேற்றனர். நிகழ்ச்சி முடிந்து, 11:15 மணிக்கு, புறப்பட்டு சென்றார். அவரது வருகை ஒட்டி, கட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையில், காலை முதல் வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
14-ஜன-201618:59:15 IST Report Abuse

mindum vasanthamதி மு க(140) + தே மு தி க(60) + பா ஜ க(30) + சின்ன கட்சிகள் (4) என்று அமைந்தால் அல்ல தி மு க (145) + பா ம க (35) + பா ஜ க ( 28) + தா ம க (24 ) + சின்ன கட்சி (2 ) என அமைந்தால் தேர்தல் முடிவுகள் மாறும் .......... பா ஜ க அதரவு இருந்தால் தி மு க தேர்தல் தில்லு முல்லை முறியடித்து விடும் .......... ஆ தி மு க + கம்யூனிஸ்ட் + தா ம க + பா ம க என்று அமைத்தாலும் வெற்றி தான்

Rate this:
பிரபு - மதுரை,இந்தியா
14-ஜன-201616:16:55 IST Report Abuse

பிரபு23ம் புலிகேசியில் போருக்கு போகும் முன் வடிவேல் தன் படையினரை பார்த்து சூளுரை சொல்லுவார் "வெற்றிவேல்"....அட சொல்லுங்கப்பா "வீரவேல்" (ஒருத்தனும் சொல்ல மாட்டான்). அந்த காட்சி ஞாபகத்திற்கு வருகிறது.

Rate this:
IBRAHAM - RIYADH,சவுதி அரேபியா
14-ஜன-201616:13:03 IST Report Abuse

IBRAHAMஇவரல்லாம் கட்சிக்கு தலைவர்...மிக கேவலமான கட்சி....அகம்பாவத்தினால் அழிந்து போவார்.

Rate this:
மேலும் 71 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X