பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
நடத்துமா
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா தாக்குதல்
ராணுவ அமைச்சருக்கு ஆதரவான தளபதி கருத்தால் சந்தேகம்

புதுடில்லி:''பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், ராணுவம் எத்தகைய தாக்குதலை நடத்தவும் தயாராக உள்ளது,'' என, ராணுவ தலைமை தளபதி, தல்பீர் சிங் சுஹாக் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், 'பதன்கோட் தாக்குலில், நம்மை வேதனைப் படுத்தியோருக்கு, உரிய நேரத்தில், உரிய இடத்தில், அதே மாதிரியான வலியை, இந்தியா பரிசாக தரும்' என, தெரிவித்திருந்த நிலையில், ராணுவ தளபதி தல்பீர் சுஹாக்கின் பேச்சு, முக்கியத்துவம் பெற்றுள்ளது.பஞ்சாபின் பதன்கோட் நகரில் உள்ள விமானப்படை தளத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஸ் - இ - முஹமது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஏழு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்; ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் குரல்:

இந்த சம்பவத்தை தொடர்ந்து, 'இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதில் காலத்தை கழிக்காமல், நேரடியாக களத்தில் இறங்கி, பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்' என, நாடு முழுவதும் குரல் ஒலிக்கத் துவங்கிஉள்ளது. அதற்கேற்ப, மனோகர் பாரிக்கரும், தல்பீர் சுஹாக்கும் பேசியிருப்பது, இந்தியா, விரைவில் பயங்கரவாதிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.

நாடுகளின் போர்:

அவ்வாறு, இந்திய ராணுவமோ அல்லது விமானப் படையோ, பாகிஸ்தானுக்குள் நுழைந்து, பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினால், அது, இரு நாடுகள் இடையேயான போராகவும் மாறக் கூடும் என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
பதன்கோட் தாக்குதலில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், தேசிய புலனாய்வு அமைப்பின் கண்ணில் மண்ணைத் தூவி, விமான படை தளத்திற்குள் நுழைந்தது எப்படி என்பது தான், நம் முன் உள்ள கேள்வி; இது, கவலைக்குரியது. இதில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். காஷ்மீர் வழியாக நுழைய முடியாத பயங்கரவாதிகள், பஞ்சாப் எல்லை பாதுகாப்பில்

உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, தாக்குதல் நடத்தியுள்ளனர்.தல்பீர் சிங் சுஹாக், ராணுவ தலைமை தளபதி
அமெரிக்க வெளியுறவு கொள்கை, ஐ.எஸ்., மற்றும் அல் - குவைதா அச்சுறுத்தல்களை சமாளிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், அத்துடன் நாம் நின்று விட முடியாது. ஐ.எஸ்., இல்லையென்றாலும், மத்திய கிழக்கு, ஆப்கன், பாகிஸ்தான், மத்திய அமெரிக்காவின் சில பகுதிகள், ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில்காணப்படும் ஸ்திரமற்ற நிலை, பல ஆண்டுகள் நீடிக்கும். அவற்றில் சில, புதிய பயங்கரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பான நாடுகளாக மாறலாம். மற்றவை, உள்நாட்டுச் சண்டை, பஞ்சம், பெருகி வரும் அகதிகள் பிரச்னை ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். இந்த பிரச்னைகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும் என, உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. ஒபாமா, அமெரிக்க அதிபர், அந்நாட்டு பார்லிமென்டில் நிகழ்த்திய நிறைவு உரை

எங்கெங்கு பயங்கரவாத முகாம்கள் :


பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள, மன்ஷேரா, முசாபராபாத் ஆகிய இடங்களில், 17 பயிற்சி முகாம்களில், 1,150 பயங்கரவாதிகள் உள்ளனர். இது தவிர, எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், 23 இடங்களில், 325 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளனர்.


அணுகுண்டு எச்சரிக்கை:

இந்தியாவிடம், அணுகுண்டு தயாரிப்பதற்கான, 'புளுடோனியம்' வளம் அதிகம் இருந்தாலும், அதை விட ஆற்றல் மிக்க, செறிவூட்டப்பட்ட, 'யுரேனியம்' பாகிஸ்தானிடம் மிகுதியாக உள்ளது. அதனால், அடுத்த, 10 ஆண்டுகளில் இந்தியா, 120 அணுகுண்டுகளை தயாரித்தால், பாக்., 240 அணுகுண்டுகளை தயாரிக்க முடியும்.


Advertisement

இந்தியா - பாக்., போர்கள்:இந்தியா - பாக்., இடையே, நான்கு போர்கள் நடைபெற்றுள்ளன; அனைத்திலும், இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.
1947 அக்., - 1948, டிச., வரை: முதல் காஷ்மீர் போர் என, அழைக்கப்படுகிறது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங், ஜம்மு - காஷ்மீரை, இந்தியாவுடன் இணைத்து விடுவாரோ என்ற அச்சத்தில், பாக்., எல்லையோர பழங்குடிப் படையினர், காஷ்மீர் மீது படையெடுத்து, பல பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். உடனே, மன்னர் ஹரி சிங், இந்தியாவுடன், ஜம்மு - காஷ்மீரை இணைத்தார். இதையடுத்து, இந்திய ராணுவம், பாக்., பழங்குடியினர் மீது தாக்குதல் நடத்தியது; டிசம்பரில் போர் முடிவிற்கு வந்தது.
1965, ஆக., 23 - செப்., வரை: காஷ்மீரில், பாக்., ராணுவ ஊடுருவல் காரணமாக, இந்த போர் ஏற்பட்டது. 'ஆப்பரேஷன் ஜிப்ரால்டர்' என்ற பெயரில் பாக்., நடத்திய இந்த போரில், இரு தரப்பிலும், ஏராளமான உயிர் சேதம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், அதிக அளவில் பீரங்கிகள் இந்த போரில் தான் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கா - ரஷ்யா ஆகிய நாடுகள் சமரசம் செய்து, 17 நாள் போரை முடிவிற்கு கொண்டு வந்தன. இதையடுத்து, இந்தியா - பாக்., இடையே, தாஷ்கண்ட் ஒப்பந்தம் ஏற்பட்டது.
1971, டிச., 3 முதல் 16 வரை:இது, வங்கதேச விடுதலைப் போர் என அழைக்கப்படுகிறது. மேற்கு பாகிஸ்தான் படைகள், வங்கதேசம் என்றழைக்கப்படும், கிழக்கு பாகிஸ்தானில் புகுந்து, அராஜகத்தில் ஈடுபட்டதால், ஒரு கோடிக்கும் அதிகமானோர், இந்திய எல்லைக்குள் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, இப்போரில் இந்தியா குதித்து, பாகிஸ்தானிடம் இருந்து, வங்கதேசத்திற்கு விடுதலை பெற்றுத் தந்தது. இப்போரில், 90 ஆயிரம் பாக்., வீரர்கள், இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தனர். பாகிஸ்தான், இந்த போரில், 50 சதவீத கடற்படை, 33 சதவீத ராணுவப் படை, 25 சதவீத விமானப் படை ஆகியவற்றை இழந்தது.
1999, மே - ஜூலை:இது, கார்கில் போர் என, அழைக்கப்படுகிறது. பாக்., படைகள், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி, இந்தியாவின் கார்கில் பகுதியில் ஊடுருவி, பல பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டன. இந்திய படைகள், பாக்., படைகளை விரட்டியடித்து, பெரும்பான்மை பகுதிகளை கைப்பற்றின. இரண்டு மாதங்கள் நடந்த போரில், ஆக்கிரமித்திருந்த பகுதிகளை விட்டு, பாக்., வெளியேறியது.

Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - paris,பிரான்ஸ்
14-ஜன-201619:44:35 IST Report Abuse

babuபோர் என்றல் இரண்டு பக்கமும் இழப்புதான் . ஆனால் நம் பக்கம் இழப்பு இருக்க கூடாது . அதற்கு நாமும் இங்கு நடப்பது போல் பாகிஸ்தானில் ரா மற்றும் உளவு அமைப்பை வைத்து தாக்குதல் நடத்த வேண்டும் . போர் என்றல் நம்ப பக்கமும் இழப்பு இருக்கும் .

Rate this:
Kudandhaiyaar - kumbakonam,இந்தியா
14-ஜன-201615:46:25 IST Report Abuse

Kudandhaiyaarநாம் வெறும் வாய் பேச்சில் வீரரடி தான். எந்த ஒரு நாடும் இந்தியாவை எளிதில் வீழ்த்த முடியும். 50 ரூபாய் நோட் ஒன்றே போதும் என்பதை சமீபத்திய நிகழ்வு காண்பிக்கிறது. தயவு செய்து மனதில் நாம் பெரிய வீரன் என்று நினைத்து யாரிடமும் போரிட போக வேண்டாம். பெருந்தன்மையாக நாமளே கூப்பிட்டு நாட்டை கிரயம் செய்து கொடுத்துடலாம். நாட்டு பற்றினால் நான் பேசுகிறேன். சிறிய நாடுகள் எல்லாம் வீரத்தை வெளிப்படுத்தும் போது நாம் ஏன் இப்படி கூனி குறுகி வாயால் பேசி கெடவேண்டும் அவர்கள் பேசலை செய்கிறார்கள். நாம் 50 ரூபாய்க்கு நாட்டில் வுள்ள எல்லா மக்களையும் விலைக்கு கொடுக்க போகிறோம். இனியும் இவ்வாறு நிச்சயம் நடக்கும். அணைத்து அரசியல் வியாதிகளும் 50ருபைக்கு விற்க மட்டோம் என்கிறார்களா. இல்லை. அப்படி என்றல் இனி மீட்டருக்கு மேல போட்டு கொடுக்க சொல்வார்கள். பேசறதை விட்டு ஆக்கபூர்வமாக யோகா பண்ணுங்கள்.

Rate this:
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
14-ஜன-201614:49:45 IST Report Abuse

Subburamu KrishnaswamyMost of the indian political party peoples are pseudo secularists. They are doing vote bank politics. It will be very difficult to increase the military usage in controlling the religion based terrorists.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X