நிலத்தில் காளைகள் அதிர ஓடினால்... முதிர விளையும்!

Updated : ஜன 14, 2016 | Added : ஜன 14, 2016 | கருத்துகள் (4)
Advertisement
 நிலத்தில் காளைகள்  அதிர ஓடினால்... முதிர விளையும்!

மனிதனுக்கு சரிசமமாக மதிப்பு கொடுக்கக்கூடிய ஒரே உயிரினம் மாடுகள் தான். அதனால் தான் பழங்காலத்தில் அவற்றை காமதேனு என்று உயர்வாக சொன்னார்கள்.
காமதேனு பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும், அஷ்டலட்சுமிகளும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். அவ்வளவு சிறப்பு வாய்ந்த நாட்டு மாட்டினங்களை மீண்டும் உயிர்பெறச் செய்து மனிதனுக்கு தேவையான இயற்கையான பால், இயற்கையான உணவுகளை தரக்கூடிய உர வங்கியை உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.
குணம் மாறும் பால் :நாம் அன்றாடம் பயன்படுத்தும் மற்றும் உலகில் உள்ள இயற்கையான பாலுாட்டிகளும் ஏ2 வகை பாலை தான் சுரக்கின்றன. இது எளிதாக செரிக்க கூடியது. மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் கொண்டது இப்பால்.
செயற்கை கருவூட்டல் மூலம் உற்பத்தியாகிற கலப்பின மாடுகளில் இருந்து பெறப்படும் பால் தான் ஏ1 வகை. இதை உட்கொள்வதால் அஜீரணக் கோளாறு, மரபணு மாற்றங்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் வருகிறது. கலப்பின மாடுகளின் வருகைக்கு முன், நம்மிடம் சர்க்கரை நோய் பெரியளவில் பிரச்னையாக இல்லை.மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உட்கொள்ள ஏற்றது நாட்டுமாடுகளில் இருந்து பெறப்படும் ஏ2 வகை பால் தான்.
பெரிய நிறுவனங்கள் இயற்கை விவசாயத்திற்கும் உதவும் நாட்டு மாட்டினங்களை அழிப்பதற்காக இந்தியா முழுவதும் வெண்மை புரட்சியை கொண்டு வந்தனர். இத்திட்டத்தை செயல்படுத்தி கிராமங்கள் தோறும் ஜெர்சி ரக கலப்பின மாடுகளை வினியோகித்தனர்.
படிப்படியாக கலப்பின மாடுகளின் எண்ணிக்கை பெருகிறது. நமது கிராம மக்களுக்கும் கூட நாட்டு மாடுகளுக்கும், ஜெர்சி மாட்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது.
வீரியமிக்க ரகங்கள் :தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு இருந்தமையால் நமது ஆண் மாடுகள் காப்பாற்றப்பட்டு வந்தன. ஆண்மாடுகள் துாய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண்மாடுகள் சேர்ந்தே காப்பாற்றப்பட்டு வந்தன. தற்போது தமிழகத்தில் பெருகிவரும் இயற்கை வேளாண் சார்ந்த விழிப்புணர்வு, பெரும் நிறுவனங்களை மறுபடியும் கதிகலங்கச் செய்கிறது.
தமிழகத்தில் மட்டும் நாட்டுமாடுகள் மிஞ்சி இருப்பது எப்படி என தேடியபோது தான், ஜல்லிக்கட்டுக்காக நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கிராமத்தினர் கொண்டுள்ளனர் என்பது புலப்பட்டது. இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான் ஜல்லிகட்டுக்கு தடைசெய்ய முயற்சி செய்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை புளிக்குளம், காங்கேயம், உம்பளச்சேரி, மலைமாடுகள், தென்பாண்டி, ஆலம்பாடி, பர்கூர் செம்மரை, துரிஞ்சல் தலை, திருவண்ணாமலை குட்டைரக மாடுகள் உள்ளன. ஷலிகர், ஓங்கோல், வேச்சூர், கிர், சாஹிவால், தர்பார்க்கர், ரெட் சிந்தி ஆகியவை நம் இந்தியாவின் பாரம்பரிய நாட்டுமாடு ரகங்கள்.
கொம்பு முதல் கால் வரை :நாட்டு மாட்டின் கொம்புகள் சூரியஒளியில் இருந்து கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற சத்துக்களை கிரகித்து பால் மூலமாக இந்த சத்தை இயற்கையாகவே நமக்கு அளிக்கிறது. மீதி எஞ்சியுள்ள சத்துக்களை கால் குளம்பின் வழியாக நிலத்தில் சேர்க்கிறது. ஆகையால் தான் நாட்டு மாடுகளைக் கொண்டு நம் முன்னோர்கள் உழவுத் தொழிலை செய்தனர்.
'அதிர ஓடினால் முதிர விளையும்' என்பது பழமொழி. அந்த காலங்களில் விவசாய அறுவடை முடிந்த பின்பு நிலங்களில் தாங்கள் வளர்த்த காளை மாடுகளை ஓடவிட்டு அதை பிடித்து விடும் விளையாட்டை கொண்டு வந்தனர். பிறகு வந்த காலத்தில் ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, ஜல்லிகட்டு என வழக்கத்தில் வந்தது.
நாட்டு மாடும் விவசாயமும் கருத்தடை செய்யப்படாத காளை மாடுகளின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ்நீர் மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. அதனால் தான் இன்றும் கிராமப்புறங்களில் கோவில் மாடுகள் தனது வயலில் வந்து மேய்ந்தால், மகசூல் அதிகமாக வரும் என்று கருதுகின்றனர். நமது நாட்டு மாடுகளின் குடலில் தான் நன்மை செய்யும் அதிகமான நுண்ணுயிர்கள் இருக்கின்றன. நாட்டுமாட்டு சாணம் மற்றும் கோமியத்தில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணுயிரிகள் உள்ளதால் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பஞ்சகாவ்யம், தசகாவ்யம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அமிர்தகரைசல், பூச்சிவிரட்டி போன்றவையும் சாணத்தில் இருந்து விபூதி, சோப்பு, பத்தி தயாரித்து கூடுதல் லாபம் பெறலாம். ஒரு நாட்டுமாடு வைத்திருக்கும் விவசாயி தனக்கு தேவையான 10 ஏக்கர் நிலத்திற்கு உரம் தயாரிக்கலாம்.
கொம்பு சாண உரம் நாட்டுமாடுகள் இறந்தபிறகு அதனுடைய கொம்புகளை எடுத்து அதனுள் மாட்டு சாணம், முளைகட்டிய நவதானியம் ஆகியவற்றை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டும். ஆறுமாதம் கழித்து அதை எடுத்து பயிர் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தினால் எந்தவிதமான பூச்சிதாக்குதலும் இன்றி பயிர்கள் செழித்து வளரும். அந்தளவு கொம்பு சாண உரத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி சத்துக்கள் மிகுதியாக உள்ளன. இதனை கோமியத்துடன் கலந்து ஊறவைத்து கைத் தெளிப்பான் கொண்டும் தெளிக்கலாம்.
இது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. அறிவுசார் தளத்தில் ஒன்றாக நின்று நம் நாட்டு மாடுகள் இனத்தை காப்போம். நாட்டு பசுமாடுகள் பற்றிய விழிப்புணர்வின் மூலம் இதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
இவ்வளவு பெருமைமிக்க நாட்டுமாடுகளை பேணி காத்து, நமது வருங்கால சந்ததியினருக்கு நஞ்சில்லா உணவு கிடைக்க சபதம் எடுப்போம்.
-எம். அருணாச்சலம்முன்னோடி விவசாயி மேலுார். 99429 60167

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
makkal neethi - sel,இந்தியா
14-ஜன-201618:34:52 IST Report Abuse
makkal neethi ஜல்லிகட்டுக்கும் நாட்டு மாடு வளர்ச்சிக்கும் ஏன்யா முடிச்சி போடணும் அன்றாடம் சுகாதாரமான சத்தான உணவுக்கும் இஎற்கை உரத்திற்கும் நாட்டு மாடு வளர்த்து நாட்டை செழிப்பாக்குவோம் ஜல்லிக்கட்டின் விபத்திலிருந்து மக்களை பாதுகாப்போம் இஎற்கை விவசாயத்திற்கு எதிரான பன்னாட்டு நிறுவனங்களை மறப்போம் நம் மண்ணிலிருந்து விரட்டுஒம் என்ற உறுதிமொழி எடுப்போம்
Rate this:
Share this comment
Cancel
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
14-ஜன-201617:06:10 IST Report Abuse
HSR Excellent.. Jallikattu is a must, Jayalalitha And Modi Must do something for this.... We Need Jalli Kattu We Need jalli kattu..
Rate this:
Share this comment
Cancel
Kumaran - India,இந்தியா
14-ஜன-201612:10:41 IST Report Abuse
Kumaran இதை எல்லாரும் படிக்கிற எடத்துல உங்க முதல் பக்கத்துல போடுங்க...ஆவின் பால் எந்த வகை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X