தமிழ் பன்னாட்டு கருத்தரங்கு உங்களை அன்புடன் அழைக்கிறது....

Updated : ஜன 14, 2016 | Added : ஜன 14, 2016 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழ் பன்னாட்டு கருத்தரங்கு உங்களை அன்புடன் அழைக்கிறது....சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கேவிபி கார்டனில் இரு சக்கர வாகனம் கூட திக்கி திணறிச் செல்லும் சந்தின் முனையில் ஒரு வீட்டு மாடியில் உள்ளது இருநுாறு சதுர அடியே கொண்ட ஒரு சின்னஞ்சிறு வாடகை வீடு.இதில் நுாற்றைம்பது சதுர அடிக்கு புத்தகங்களை குவித்து வைத்துக்கொண்டு, யாராவது வந்தால் தான் உட்கார்ந்து இருக்கும் இடத்தை
தமிழ் பன்னாட்டு கருத்தரங்கு உங்களை அன்புடன் அழைக்கிறது....தமிழ் பன்னாட்டு கருத்தரங்கு உங்களை அன்புடன் அழைக்கிறது....


சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கேவிபி கார்டனில் இரு சக்கர வாகனம் கூட திக்கி திணறிச் செல்லும் சந்தின் முனையில் ஒரு வீட்டு மாடியில் உள்ளது இருநுாறு சதுர அடியே கொண்ட ஒரு சின்னஞ்சிறு வாடகை வீடு.

இதில் நுாற்றைம்பது சதுர அடிக்கு புத்தகங்களை குவித்து வைத்துக்கொண்டு, யாராவது வந்தால் தான் உட்கார்ந்து இருக்கும் இடத்தை விட்டுக்கொடுத்துவிட்டு நின்று கொண்டே பேசுகிறார் இந்த கட்டுரையின் நாயகன்.

நீங்களும் உட்காருங்கள் என்று மிகவும் வற்புறுத்திய பிறகு கட்டிலில் பரப்பிவைக்கப்பட்டுள்ள புத்தகங்களை அதற்கு வலிக்காமல் நகற்றிவிட்டு அந்த இடைவௌியில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்.

ஆங்கிலம் கலக்காமல் அவர் தனித்தமிழில் பேசுவதை கேட்பதே தனி இன்பம்.தமிழை பற்றிய அவரது பேச்சே ஒரு வாளின் வீச்சாக இருக்கிறது.உணவும் உடையும் உறைவிடமும் எளிமையாக இருக்கட்டும் என் தமிழ் மட்டும் வளமையாக இருக்கட்டும் என்பதில் ஆணித்தரமாக இருப்பவர்.

நெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தவர்,கட்டிட வேலை செய்பவர் என்று இவர்களைப் போன்ற ஏழு பேருக்குள் இருந்த தமிழ் ஆர்வத்தை கண்டுபிடித்து அவர்கள் எழுதிய கதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட செய்தவர்,ஏாராளமான மாணவர்களை கவிஞர்களை உருவாக்கியவர்.

கஷ்டப்பட்டு தமிழ் தொண்டு செய்பவர்கள் மத்தியில் இஷ்டப்பட்டு தமிழ் தொண்டு செய்பவர் .தமிழை வருமானத்திற்கான வழியாக கொண்டவர்கள் மத்தியில் கடன்பட்டு தமிழ் தொண்டு செய்பவரும் இவரே.

அவர்தான் கவிஞர் சுரா என்கிற சு.ராமச்சந்திரன்.

சென்னை செட்டிநாடு வித்தயாஸ்ரமம் பள்ளியின் தமிழாசிரியர்,பேச்சாளர்,ஆய்வாளர்,இதழாளர்,தமிழ் தொண்டர்,புரட்சி பூக்கள்,ஒற்றை ரோஜா,கைவிளக்கு ஆகிய கவிதை புத்தகங்களை வெளியிட்டவர்,மாணவர்கள் மத்தியில் நகைச்சுவை உணர்வுடன் தமிழ் சொல்லிக்கொடுத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழை கொண்டு செல்ல பாடுபடும் தமிழ் தொண்டர்,இது எல்லாவற்றுக்கும் மேலாக செந்தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பின் தலைவர்.

தமிழின் தொன்மையையும்,பெருமையையும் உலகிற்கு கொண்டு சேர்க்கும் வகையில் செந்தமிழ் அறக்கட்டளை கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்னாட்டு ஆய்வுக்கருத்திரங்கினை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.இது தொடர்பாக இரண்டு ஆய்வுக்கோவை நுால்களையும் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

இதோ செந்தமிழ் அறக்கட்டளையும் செல்லம்மாள் மகளிர் கல்லுாரியும் இணைந்து மூன்றாம் பன்னாட்டு கருத்தரங்கினை நடத்த உள்ளனர்.மூன்றாவது கருத்தரங்கினை வெற்றிகரமாக நடத்திட சுறுசுறுப்பாகிவிட்டார் கவிஞர் சுரா.

பன்னாட்டு கருத்தரங்கு ஆய்வுக்கோவை என்பது போன்ற வார்த்தைகளை பார்த்துவிட்டு இது பேராசிரியர்களுக்கும்,முனைவர்களுக்கும்,தமிழறிஞர்களுக்குமானது, இதில் நமக்கு என்ன வேலை என்று எண்ணிவிடாதீர்கள்.

உங்களுக்குதான் இங்கே அதிக வேலை

அதைத்தான் தனியொருவனாக இருந்து கவிஞர் சுரா சாதித்துவருகிறார்.

பேராசிரியர்களும்,முனைவர்களும்,தமிழறிஞர்களும் மட்டுமின்றி தமிழார்வலர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம், இந்த பன்னாட்டு கருத்தரங்கு ஆய்வுக்கோவைக்கான கட்டுரைகளும் வழங்கலாம்.

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், ஐம்பெரும்காப்பியங்கள் பற்றித்தான் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கவேண்டும் என்பதில்லை நாட்டுப்புற இலக்கியங்கள் புதுக்கவிதைகள் புதினங்கள் மற்றும் தற்கால இலக்கியங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் ஒன்றின் கீழ் உங்கள் ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்கலாம்.

உங்கள் கட்டுரை ஒரு ஆய்வுக்கோவையாக உருவெடுத்து அற்புதமான புத்தகமாக பிரசுரமாகும்.இந்த புத்தகம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் பலரின் கைகளிலும் தவழும்.

இதைப் படிக்கின்ற உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் ஆய்வு கட்டுரை எழுதி அனுப்பலாம்.

சென்னையில் செல்லம்மாள் மகளிர் கல்லுாரியில் 27/02/1016 ந்தேதி நடக்க உள்ள பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொள்ளவும் அங்கு உங்கள் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் தயராகிவிட்டீர்கள் என்றால் கவிஞர் சுராவை தொடர்புகொண்டு கூடுதல் தகவல் பெற்றுக்கொள்ளுங்கள்.அவரது எண்:9025058999/8870979989.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
02-பிப்-201607:25:21 IST Report Abuse
Barathan தமிழுக்கு அமுதென்று பேர், அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்பதற்கொப்ப கவிஞர் சுரா அவர்களின் சேவை இன்றைய நிலையில் மிக முக்கியம். அவர்களின் தமிழ் தொண்டு வளர வணங்கிடுவோம்.
Rate this:
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
20-ஜன-201619:30:15 IST Report Abuse
Murugan இதுபோல் தமிழன் உள்ளவரை தமிழ் தலை நிமிர்ந்து நிற்கும்.
Rate this:
Cancel
A.sivagurunathan - coimbatore,இந்தியா
19-ஜன-201617:50:46 IST Report Abuse
A.sivagurunathan தமிழ்மொழி மட்டும்தான் தடுமாறுகிறது என்றால், இக்கட்டுரை படிக்கும் போது தமிழார்வலர்களும் தவிக்கின்றனர் என புரிகிறது. தமிழா, தமிழா விழித்துடு நாளை உன்னாளே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X