கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் ஆடை கட்டுப்பாடு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Added : ஜன 18, 2016 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை: 'கோவில்களில், பக்தர்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வர வேண்டும்' என, கட்டுப்பாடு விதித்த தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் தாக்கலான, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. தடை விதிப்பு'கோவில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு, ஜன., 1ம் தேதி முதல் அமல்படுத்த, அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்'

மதுரை: 'கோவில்களில், பக்தர்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வர வேண்டும்' என, கட்டுப்பாடு விதித்த தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராகவும், ஆதரவாகவும் தாக்கலான, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
தடை விதிப்பு'கோவில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு, ஜன., 1ம் தேதி முதல் அமல்படுத்த, அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, அறநிலையத் துறை செயலரும், இதுபோல் தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு உறுப்பினர் சரிகா, அ.இ.ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி மனு
செய்தனர். தனி நீதிபதி உத்தரவிற்கு, ஜன., 11ம் தேதி, நீதிபதிகள் தடை விதித்தனர். தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்தக் கோரி, இந்து ஆலய பாதுகாப்புக்குழு சார்பில், மனு தாக்கல்
செய்யப்பட்டது.வரையறுக்க முடியாதுஇந்த மனுக்கள் மீது, நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், கே.ரவிச்சந்திரபாபு கொண்ட அமர்வு, நேற்று விசாரித்தது.
ஆடை கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக மனு செய்தோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'கேரளா பத்மநாபசுவாமி கோவில், திருப்பதி தேவஸ்தானம், மலேஷியா, பட்டாயா, கம்போடியாவில், ஆடை கட்டுப்பாடு உள்ளது' என்றனர். எதிர்த்து வாதிட்டவர்கள்,'முறையான ஆடை என, எதையும் வரையறுக்க முடியாது; அனைவருக்கும் ஒரே சீரான ஆடை சாத்தியமில்லை' என்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
19-ஜன-201619:30:17 IST Report Abuse
Pasupathi Subbian தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு உறுப்பினர் சரிகா, அ.இ.ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி ஆகியோர் என்ன சொல்லுகிறார்கள். சேலை கட்ட முடியாது தங்கள் சவ்கரியபடி ஆடையை கோவிலுக்கு உடுத்தி வருவோம் என்கிறார்களா? கோவிலில் பேஷன் ஷோ நடக்கிறதா என்ன ? சாமி கும்பிடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளாமல் அரைகுறை ஆடையுடன் வருவோம் என்று வீம்பு பேசும் இவர்களை மதிப்பதே தவறு.
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
19-ஜன-201609:39:53 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> தமிழ் பெண்களுக்கு பாவாடை தாவணி வாங்க துட்டு இல்லியாம், சூடிதார் ஜீன்ஸ்தான் இருக்குதான், அதன் காசு சேர்த்துட்டு வாங்கும் வரை தடை வேண்டுமாம். பெத்தவாள் தான் காரணம். அன்று பெண்கள் பருவம் அடஞ்ஜாலே பாவாடை தாவணின்னு தான் உடுத்த சொல்லுவாங்க.இன்று நடைவந்தாலே மாடர்ன் டிரஸ் தானே வாங்கித்தரா. அழகு பார்க்குராங்க. தவழ்ந்து வரும் குழந்தைக ட்ரெஸ் கூட பலசமயம் அசிங்கமாத்தான் இருக்கு. ரெடிமேட் கடைகள்ளேயும் பாக்குறேனே மாடர்ன் என்ற பெயரில் கோரமா இருக்குங்க , ரவிக்கைன்னு போட்டுகுராலுக முதுகே இல்லே முன்னாடி ஹஸ்ட் ம் மார்பகம் மட்டும் மூடுராப்பல தைக்குராலுக அதுக்கு கூலீயெ 1000/ரூ வாயம் சித்த குனிஞ்சாலே எல்லாம் தர்ம தரிசனமே தான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X