ஆளுங்கட்சியினரின் "மூவ்' கண்காணிக்கும் உளவுத்துறை

Added : ஜன 19, 2016 | கருத்துகள் (1)
Share
Advertisement
""தேர்தல் நெருங்குறதுனால பொங்கல் பண்டிகையை, ம.தி.மு.க.,காரங்க, படுவிமரிசையா கொண்டாடி யிருக்காங்க,'' என, சுடச்சுட சர்க்கரை பொங்கல் பரிமாறியவாறு, விவாதத்தை ஆரம்பித்தாள் மித்ரா.பொங்கலை சுவைத்த சித்ரா, ""வழக்கத்தை விட, இந்தாண்டு பொங்கல் விழாவை மக்களும் விமரிசையா தானே கொண்டாடியிருக்காங்க,'' என்றாள்.""உண்மைதான், வழக்கமா, வேலம்பாளையம் ம.தி.மு.க., சார்பில், பொங்கல்
ஆளுங்கட்சியினரின் "மூவ்' கண்காணிக்கும் உளவுத்துறை

""தேர்தல் நெருங்குறதுனால பொங்கல் பண்டிகையை, ம.தி.மு.க.,காரங்க, படுவிமரிசையா கொண்டாடி யிருக்காங்க,'' என, சுடச்சுட சர்க்கரை பொங்கல் பரிமாறியவாறு, விவாதத்தை ஆரம்பித்தாள் மித்ரா.
பொங்கலை சுவைத்த சித்ரா, ""வழக்கத்தை விட, இந்தாண்டு பொங்கல் விழாவை மக்களும் விமரிசையா தானே கொண்டாடியிருக்காங்க,'' என்றாள்.
""உண்மைதான், வழக்கமா, வேலம்பாளையம் ம.தி.மு.க., சார்பில், பொங்கல் விழா நடத்துவாங்க. இந்தாண்டு பொங்கல் வைக்க வந்த பெண்களுக்கு அரிசி, வெல்லம், பொங்கல் பானை, அடுப்பு, விறகு இலவசமா கொடுத்திருக்காங்க...'' என, மித்ரா முடிப்பதற்குள், ""வாஷிங் மெஷின், கிரைண்டர் எல்லாம் கொடுத்தாங்கனு கேள்விப்பட்டேனே...'' என, முந்தினாள் சித்ரா.
""ஆமாக்கா, பொங்கல் வைத்த பெண்கள் பெயர்களை எழுதி, குலுக்கல் நடத்தியிருக்காங்க. தேர்வான அதிர்ஷ்டசாலிகளுக்கு, வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸின்னு மெகா பரிசும் வழங்கியிருக்காங்க. கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களும், வழக்கம்போலவே, ஒவ்வொரு ஏரியாவிலும் விளையாட்டு விழா நடத்துனாங்க. ஆளுங்கட்சிக் காரங்கதான் பொங்கல் விழாவை மறந்துட்டாங்க,'' என்றாள் மித்ரா.
""வழக்கமா, யுனிவர்சல் தியேட்டர் பக்கத்துல, பொங்கல் பானை, அரிசி, வெல்லம் கொடுத்து விழா நடத்துவாங்க. அதுக்கு பதிலா, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் அன்னைக்கு, அன்னதானம் வழங்கி சரிக்கட்டிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""எத்தனை கடையில இருந்து மூட்டை மூட்டையா அரிசி தூக்குனாங்களோ,'' என, சொன்ன மித்ரா, ""சட்டசபை தேர்தல் நெருங்குதுனு, தி.மு.க.,விலும் நிர்வாகிகளை அழைச்சு, கூட்டம் போட்டு பேசுறாங்க. "பூத்' நிர்வாகிகள் நியமனத்தை முடிச்சு, சுறுசுறுப்பா வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. முன்னாள் மேயர், தெற்கு தொகுதியில் நிக்கறதுக்கு தீவிரமா வேலை செஞ்சுட்டு இருக்காங்க. ஆளும்கட்சி தரப்புல, "ஈசானிய' மூலையில் பிரசாரம் ஆரம்பிக்கணும்னு சொன்னாங்க; அதே மாதிரி, பிரசாரத்தை ஆரம்பிச்சுட்டாங்க. வடக்கு தொகுதியில் மீண்டும் அமைச்சரே நிக்கறதுக்கு ஆயத்தமாகிட்டு இருக்காரு; தெற்கு தொகுதியில், மாநகராட்சி பிரமுகர்களில் யாரையாவது ஒருத்தரை களமிறக்க திட்டமிட்டிருக்காங்க. கூட்டணி அமைஞ்சா, "நைசா' தெற்கு தொகுதியை தள்ளி விட்டுறலாம்னு இருக்காங்க,'' என்றாள்.
""தோழருங்க என்ன முடிவு பண்ணியிருக்காங்களாம்?'' என, ஆர்வமாக கேட்டாள் சித்ரா.
""மக்கள் நல கூட்டணியில், ம.தி.மு.க., புள்ளி ஒரு தொகுதியில் போட்டியிடுவாரு; மற்றொரு தொகுதியில், கம்யூ., வேட்பாளர் நிக்கறது <உறுதியாகிடுச்சு. தே.மு.தி.க.,வும், பா.ஜ.,வும் கூட்டணி சேரும்னு நம்புறாங்க. அப்படி கூட்டணி அமைஞ்சா, தெற்கு தொகுதியில் தே.மு.தி.க.,வும், வடக்குல பா.ஜ.,வும் நிக்கலாம்னு பேசி வச்சிருக்காங்க. கூட்டணியில் மாற்றம் வந்தால், தொகுதியிலும் மாற்றம் வரலாம்,'' என்றாள் மித்ரா.
""அதெல்லாம் சரி, உளவுத்துறை போலீஸ்காரங்களும் தங்களோடு வேலையை கச்சிதமா முடிப்பாங்களே, அதைப்பத்தி ஏதாவது தகவல் இருக்கா,'' என்றாள் சித்ரா.
""ஆமாக்கா, அவுங்களும் ரகசியமா விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆளுங்கட்சி வட்டாரத்துல, ஒவ்வொருத்தரின் "மூவ்' எப்படி இருக்கு? அவுங்களோட செல்வாக்கு உயர்ந்திருக்கா; சரிஞ்சிருக்கா. எவ்ளோ சொத்து சேர்த்திருக்காங்க. இன்னமும் கட்டப்பஞ்சாயத்து செஞ்சுக்கிட்டு இருக்காங்களான்னு விசாரிச்சு, அறிக்கை அனுப்பிக்கிட்டு இருக்காங்க. அதே மாதிரி, எதிர்க்கட்சி வட்டாரத்திலும், யாரெல்லாம் போட்டியிட தீர்மானிச்சிருக்காங்கன்னு பட்டியல் தயாரிச்சு, அனுப்பியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
19-ஜன-201612:04:59 IST Report Abuse
JeevaKiran ஆளுங்கட்சி வட்டாரத்துல, ஒவ்வொருத்தரின் "மூவ்' எப்படி இருக்கு? அவுங்களோட செல்வாக்கு உயர்ந்திருக்கா சரிஞ்சிருக்கா. எவ்ளோ சொத்து சேர்த்திருக்காங்க. இன்னமும் கட்டப்பஞ்சாயத்து செஞ்சுக்கிட்டு இருக்காங்களான்னு விசாரிச்சு, அறிக்கை அனுப்பிக்கிட்டு இருக்காங்க. அதே மாதிரி இந்த அறிக்கையை வரி பணத்தில் சம்பளம் வாங்கும் உளவு துறை அதிகாரிகள், இந்த அறிக்கையை மத்திய உளவு துறைக்கும் (CBI) க்கும் அனுப்பிவைத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சரியாக இருக்கும். ஊழலும் குறையும். செய்வார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X