பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 579 லட்சம்:  12 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு; பெண்களே அதிகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 579 லட்சம் வாக்காளர், வரும் சட்டசபை தேர்தலில், ஓட்டுப்போட உள்ளனர். இவர்களில், 12.33 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம்.
தமிழகத்தில், வரைவு வாக்காளர் பட்டியல், 2015 செப்., 15ல் வெளியிடப்பட்டது. அன்று முதல், அக்., 24 வரை, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
*பெயர் சேர்க்க, 17.10 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன; 16.18 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன
*இடப்பெயர்ச்சி, இறப்பு, இரட்டைப்பதிவு ஆகிய காரணங்களுக்காக, 3.85 லட்சம் வாக்காளர் பெயர் நீக்கப்பட்டுள்ளது
*திருத்தம் செய்யக் கோரி, 2.67 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன; 2.56 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன
*தொகுதிக்குள்ளே முகவரி மாற்ற கோரி, 1.29 லட்சம்விண்ணப்பங்கள் வந்தன; 1.13 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இப்பணிகள் முடிந்து, நேற்று, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில், 5.79 கோடி வாக்காளர் உள்ளனர். இவர்களில், 2.88 கோடி பேர் ஆண்கள்; 2.91 கோடி பேர் பெண்கள்; 4,383 திருநங்கையர் உள்ளனர். வாக்காளர் பட்டியலில், புதிதாக, 12.33 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 579 லட்சம்:  12 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு; பெண்களே அதிகம்

*பணித்தொகுதி வாக்காளர் எனப்படும் ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அதிகம் உள்ள தொகுதி, மதுரை மாவட்டம், திருமங்கலம். இங்கு, 2,402 பேர் பணித்தொகுதி வாக்காளராக உள்ளனர்
*முதன் முறையாக, வெளிநாடு வாழ் வாக்காளர், 47 பேரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலை, http://elections.tn.gov.in/ என்ற தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இணைய தளத்தில் காணலாம்.

Advertisement

அதிக வாக்காளர் உள்ள தொகுதி:

அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி, காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லுார். இங்கு, 2.91 லட்சம் ஆண்கள்; 2.83 லட்சம் பெண்கள்; திருநங்கையர், 45 என, மொத்தம், 5.75 லட்சம் வாக்காளர் உள்ளனர். 18 - 19 வயதிற்குட்பட்ட வாக்காளர் அதிகம் உள்ள தொகுதி என்ற பெயரையும் இது பெற்றுள்ளது. இங்கு, 7,214 ஆண்கள்; 5,583 பெண்கள் என, மொத்தம், 12,797 இளைய வாக்காளர் உள்ளனர்.


குறைந்த வாக்காளர் உள்ள தொகுதி:

குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி, நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் (தனி). இங்கு, 81,038 ஆண்கள்; 82,151 பெண்கள் என, மொத்தம், 1.63 லட்சம் வாக்காளர் உள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
21-ஜன-201621:14:01 IST Report Abuse

kundalakesi59,00,000 மா? அப்போ 39 லட்சம் இனாம் கைய ஏந்திகள் அப்படின்னு வச்சிக்கிறலாம். 20 லட்சத் துக்கு போத போட்டு வரி போட்டு, லஞ்சம் போட்டு, கக்கடித்து, 39ங ஒட்டு போடற வரிக்கும் தடவித் தடவி குடு, பின்னால அடி.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-ஜன-201620:15:26 IST Report Abuse

தமிழ்வேல் பழைய லிஸ்டில் 12 லட்சம் புதிதாக சேர்ப்பு... பழைய லிஸ்டில் இருந்து இறந்தவர்கள் எத்தனை பேர் ?

Rate this:
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
21-ஜன-201619:11:45 IST Report Abuse

புதுகை வானம்பாடி இந்தமுறை ஒரு ஓட்டுக்கு 1000 X 579 லட்சம் = 58 ஆயிரம் கோடி தமிழகத்தில் ஏப்ரல் டு மே மதத்தில் வோட்டுக்கு லஞ்சமாக கொட்டபோகும் பணம்.......... இதை எல்லாம் எதிபார்த்து தான் நம்ம நத்தம் டாஸ்மாக்க மூட முடியாதுன்னுட்டார் .......

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
21-ஜன-201619:32:08 IST Report Abuse

siriyaar57900000×1000=57900000000. Five thousand 790 crore only. Multiply by dmk and admk around 10000 crore...

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X