மும்பை: சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக, மும்பை போலீசார் மேற்கொண்ட பிரசாரம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகர் மும்பையில், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, டுவிட்டர் மூலம் பிரசாரம் செய்ய, போலீசார் முடிவு செய்தனர். இதற்காக, கடந்த மாதம், மும்பை போலீஸ் நிர்வாகம், டுவிட்டரில் இணைந்தது.
டுவிட்டரில் இடம்பெற்ற மும்பை போலீசாரின் பிரசார வாசகங்கள், பலரையும் கவர்ந்தன. குறிப்பாக, மும்பை போலீசாரின் டுவிட்டுகள், நகைச்சுவை உணர்வுடனும், ரசிக்கும் வகையில் இருப்பதால், உடனடியாக ஹிட்டாகின்றன. அடுத்த டுவிட் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திஉள்ளது. இதனால், இரு மாதங்களிலேயே, மும்பை போலீசாரின் டுவிட்டர் கணக்கை, 20 ஆயிரம் பேர் பின் தொடருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE