பொது செய்தி

இந்தியா

1,000 ரூபாய் நோட்டுகளை தவறாக அச்சடித்த ரிசர்வ் வங்கி

Added : ஜன 21, 2016 | கருத்துகள் (58)
Advertisement
Shocking! RBI prints Rs 1,000 denomination faulty currency notes

மும்பை : 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை வெள்ளி நூல் இல்லாமல் ரிசர்வ் வங்கி தவறுதலாக அச்சடித்துள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கியப் பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படும் வெள்ளி நூல் இல்லாமல், 5AG, 3AP வரிசையில் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது. இதில் 20,000 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிடமும், 10,000 கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளதாகவும் ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது. இந்நிலையில், 5AG, 3AP வரிசையில் உள்ள 1,000 ரூபாய் நோட்டுகள் யாவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 5AG, 3AP வரிசை நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், ம.பி., ஹோஷன்காபாத்தில் உள்ள SPMCIL அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரிக்க ஆர்.பி.ஐ., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி SPMCIL அச்சகத்தின் நிர்வாக இயக்குநருக்கு ஆர்.பி.ஐ., நோட்டீஸ் அனுப்பியுள்ளது. SPMCIL அச்சகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
22-ஜன-201614:31:09 IST Report Abuse
K.Sugavanam Numismatics இல் இந்த நோட்டுக்கு மதிப்பு கூடும்..வச்சிருக்குரவங்க பத்திரமா பாது காத்து வச்சுக்குங்க..எதிர்காலத்தில் ஜாக்பாட் ஆகவும் மாற வாய்ப்புண்டு.
Rate this:
Share this comment
Cancel
PROUD INDIAN - LAGOS,நைஜீரியா
22-ஜன-201613:11:50 IST Report Abuse
PROUD INDIAN ஐயா நல்லா பாருங்க இது தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான்ல அடிச்சா நோட்டா இருக்கும், சத்தியம், நாங்க RBI அடிச்சது இல்லை
Rate this:
Share this comment
Cancel
Ramanathan - Chennai,இந்தியா
22-ஜன-201610:33:36 IST Report Abuse
Ramanathan ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்கு ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X