இந்தியாவில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் : மக்கள் கூடும் இடங்களில் தாக்க திட்டம்

Added : ஜன 21, 2016 | கருத்துகள் (55) | |
Advertisement
புதுடில்லி : ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் வந்திருப்பதாக டில்லி போலீஸ் அறிவித்துள்ளது. இவர்கள், குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் விதமாகவும், ஹரித்வாரில் நடக்கும் அரித் கும்பமேளா, முக்கிய ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.ஹரித்வாரில்
இந்தியாவில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் : மக்கள் கூடும் இடங்களில் தாக்க திட்டம்

புதுடில்லி : ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் வந்திருப்பதாக டில்லி போலீஸ் அறிவித்துள்ளது. இவர்கள், குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் விதமாகவும், ஹரித்வாரில் நடக்கும் அரித் கும்பமேளா, முக்கிய ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஹரித்வாரில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த 4 இளைஞர்களை டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். விமாரணையில் அவர் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்களின் வயது 19 முதல் 23 வரை. இவர்கள் 4 பேரும் இன்ஜினியரிங், பிஏ, ஆயுர்வேத மருத்துவம் படிப்படிக்கும் மாணவர்கள். சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஐஎஸ்., தலைவர்களுடன், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. எந்த இடத்தில் எவ்வாறு தாக்குவது, அதற்கான ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்ற விபரங்கள் இவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

குடியரசு தின விழாவின் போதும், ஹரித்வார் அரித் கும்பமேளா, டில்லியில் மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள், டிஎல்எப் சுற்றுலா சாலை, நொய்டாவில் உள்ள கிரேட் இந்தியா பகுதி உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் சமீபத்தில் நடத்தப்பட்டது போன்று மக்களோடு மக்களாக கலந்து தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 8ம் தேதி ஹரித்வாரில் நடக்கும் அரித் கும்பமேளாவின் போது, தினமும் ஆயிரக்கணக்கானர்கள் வந்து செல்லும் மால் ஒன்றை தகர்க்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு திட்டமிடுவதற்காக எங்கெல்லாம் மக்கள் அதிகம் கூடுகிறார்கள் என்பதை கண்டறிய சர்வே ஒன்றையும் இந்த பயங்கரவாதிகள் குழு நடத்தி உள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று எச்சரிந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divaharan - Tirunelveli,இந்தியா
22-ஜன-201612:36:06 IST Report Abuse
Divaharan இந்த தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்களுக்கும் கடுமையான தண்டனை தரவேண்டும் . அப்பொழுது தான் இந்த பிரச்னையை கட்டுக்குள் வைக்க முடியும்
Rate this:
Cancel
22-ஜன-201611:44:54 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி 20 ஆண்டுகள் வழக்கு நடத்தி பிறகு தண்டனை கொடுப்பதெல்லாம் வீண் செலவு . பார்த்த இடத்தில என்கௌண்டர் செய்து மற்ற தீவீரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுங்கள்
Rate this:
Cancel
velan - california,யூ.எஸ்.ஏ
22-ஜன-201611:26:05 IST Report Abuse
velan 1. இன்னுயிரை கொடுத்தேனும் நமது நாட்டினை காப்போம் . 2. பிள்ளைகளிடம் தேசப்பற்றினை கற்பிப்போம் 3. சந்தேகம் வரும் நபர்களை நன்றாக கவனிக்கவும் காவல் துறைக்கு அது பற்றி தெரிவிக்கவும் 4. நம்மை மீறி எதுவும் நடை பெற வாய்பில்லை அனாதையாக இருக்கும் பைகள் , பொட்டலங்கள் , பார்செல்ஸ் , இவைகளை பற்றி காவல் துறைக்கு தகவல் கொடுக்கவும் 5. அணைத்து கடைகளிலும் , டிராபிக் சிக்னல்கள் , முக்கியமான இடங்கள் ஆகிய இடங்களில் கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும். வாடகைக்கு வீடு கொடுப்பவர்கள் அணைத்து அடையாள அட்டைகள் , தெரிந்த நபர்கள் என அனைத்தையும் சரிபார்த்து , அருகில் இருக்கும் காவல் துறைக்கு தகவல் அனுப்பியவுடன் வீட்டினை கொடுக்கவும் இது நமது நாடு நமது தெரு , கருப்பு ஆடு வந்தால் நாம் தான் கவனத்துடன் இருக்கவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X