இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் பேச்சு வார்த்தை என்று ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் பாகிஸ்தான் தனது படை தளவாடங்களை தயார்படுத்தி வருவதாக அமெரிக்க காங்கிரஸ் ரிசர்ச் சர்வீஸ் வெளியிட்டுள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. இது போன்ற அணு ஆயுத குவிப்பு இரு நாடுகள் இடையில் பெரும் விளைவை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவித்துள்ளது .இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பாகிஸ்தானில் ராணுவ குவிப்பு நடந்து வருகிறது , குறிப்பபாக அணு ஆயுதங்கள் தாங்கிய போர் ஏவுகணைகள் இந்தியாவை நோக்கி குறி வைத்து நிறுத்தப்பட்டுள்ளன .110 முதல் 130 வரையிலான எண்ணிக்கை கொண்ட போர்த்தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன .இதில் புது புது வகையான நவீன வாகனங்கள் அணு ஆயும் தாங்கியுள்ளது. இந்த நிலை இன்னும் அதிகரிக்க கூட வாய்ப்பு உள்ளது. இதனால் தெற்காசியாவில் இரு நாடுகள் இடையே ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுத போர் நடக்கும் வாய்ப்பு கூட இருக்கிறது.
பாகிஸ்தான் 2004 முதல் அணு ஆயுத உற்பத்தியை பெருக்கி வருகிறது சர்வதேச அணு ஆயுத பரவல் சட்டத்திற்கு எதிரானதாக பாகிஸ்தான் நடவடிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE