அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீட்டு வசதி வாரியம், "ரியல் எஸ்டேட்' நிறுவனமல்ல: முதல்வர் கருணாநிதி காட்டம்

Updated : டிச 12, 2010 | Added : டிச 11, 2010 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை :  ""லாப நோக்கில் செயல்பட, தமிழக வீட்டு வசதி வாரியம் ஒன்றும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யவில்லை,'' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை: மத்திய தணிக்கை துறை தாக்கல் செய்த அறிக்கையில்,  1.76 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என சுட்டிக் காட்டியதால், பார்லிமென்ட் 20 நாட்களாக நடைபெறவில்லை; நாட்டிற்கு பல கோடி

சென்னை :  ""லாப நோக்கில் செயல்பட, தமிழக வீட்டு வசதி வாரியம் ஒன்றும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யவில்லை,'' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இது குறித்த அவரது அறிக்கை: மத்திய தணிக்கை துறை தாக்கல் செய்த அறிக்கையில்,  1.76 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என சுட்டிக் காட்டியதால், பார்லிமென்ட் 20 நாட்களாக நடைபெறவில்லை; நாட்டிற்கு பல கோடி ரூபாய் இழப்பு என ஏடுகளில், தினமும் செய்திகள் வெளியாகின்றன. இதே தணிக்கைத் துறை அறிக்கை ஒரு சில ஆண்டுகளுக்கு முன் பார்லிமென்டில் வைக்கப்பட்ட போது, அதிலே இதே அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக பல கோடி ரூபாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. அப்போது அதற்கு யாரும் முக்கியத்துவம் தராததால், வெளி உலகத்திற்கு அது தெரியவில்லை.  தணிக்கை துறை அறிக்கை, ஒவ்வொரு ஆண்டும், அவையிலே தாக்கல் செய்யப்படுவதும், அது பொதுக் கணக்கு குழுவிற்கு அனுப்பப்பட்டு, குறைபாடுகள் குறித்து உரிய துறையிடம் விளக்கம் கேட்டு, அவை அறிக்கையாக சட்டசபையில் அடுத்து வரும் ஆண்டுகளில் அளிக்கப்படும். இது, பல ஆண்டுகளாக தொடரும் நடைமுறை. எந்த அரசு பொறுப்பிலே இருந்தாலும், அரசு துறைகளின் திட்ட செயல்பாடுகள் குறித்து தணிக்கை அறிக்கையிலே சுட்டிக் காட்டப்படும் குறைபாடுகளை, எதிர்க்கட்சிகள் எடுத்துக் காட்டுவதும், அதற்கு ஆளும் கட்சி சார்பில், "உங்கள் ஆட்சிக் காலத்திலும், இது போன்ற குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருக்கின்றன' என, எடுத்துக் காட்டுவதும் தொடர்ந்து வருகிறது.


இந்த வகையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குறித்து 2008 - 09ம் ஆண்டு, தணிக்கை அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறைபாடு குறித்து, ஆங்கில நாளிதழ் ஒன்று, தமிழக அரசுக்கு ஏதாவது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், முகப்பேர் ஏரியில், 158 உயர் வருவாய் அடுக்கு மாடிக் குடியிருப்புகளை கட்டி, பல ஆண்டு கழித்து, விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்தது. இதனாலும், விண்ணப்பங்களுக்கான பதிவு கட்டணத்தை திரும்ப வழங்கியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஐந்து கோடியே 17 லட்சம் ரூபாய் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இழப்பிற்கு அரசுதான் காரணம் என தணிக்கைத் துறை அதிகாரியே குறிப்பிட்டிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. முகப்பேர் ஏரி திட்டத்தில் 250 வீடுகள், 98ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டன. கட்டப்பட்ட காலத்தில், விலை அதிகம் எனக் கூறி, அந்த வீடுகளை வாங்க அதிகமாக யாரும் முன்வரவில்லை. 80 வீடுகள் மட்டுமே விற்பனையாகின. அதனால், அ.தி.மு.க., ஆட்சியில், ஒரு கிரவுண்டு விலை இரண்டு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டது. பின், அந்த ஆட்சியில், மாணவர் தங்கும் விடுதியாக பயன்படுத்தப்பட்டது.


கடந்த 2008ல் கோர்ட் உத்தரவின் பேரில், அந்த வீடுகள் காலி செய்யப்பட்டு வாரிய கட்டுப்பாட்டிற்குள்  வந்தன. அப்போது, அந்த குடியிருப்புகள் ஓரளவு பழுதடைந்திருந்தன. எனவே, வீட்டு வசதி வாரியம் அந்த குடியிருப்புகளை குலுக்கல் முறையில், விற்பனை செய்ய முடிவெடுத்தது. 170 வீட்டு மனைகள் வாங்க, இரண்டு லட்சம் மனுக்கள் வந்தன.விண்ணப்பதாரர்களிடம் 400 ரூபாய் பதிவுத் தொகை வசூலிக்கப்பட்டது. வீடு கிடைக்காதவர்கள், பதிவுத் தொகையை திருப்பித் தர கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று பதிவுத் தொகை திருப்பி அளிக்கப்பட்டது. இப்படி, ஏழை, நடுத்தர மக்களுக்கு அரசு திருப்பி கொடுத்ததால், மூன்று கோடியே 47 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டு விட்டது என தணிக்கை துறை அதிகாரி, அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். அதைத்தான் அந்த ஏடு வெளியிட்டுள்ளது. மக்கள் கட்டிய தொகையை திரும்பக் கொடுக்காமல், வாரியம் எடுத்துக் கொண்டிருந்தால், லாபம் கிடைத்திருக்கும். வீட்டு வசதி வாரியத்தின் முக்கிய குறிக்கோளே, ஏழை எளிய மத்திய தர வகுப்பினருக்கு, தாங்கக் கூடிய விலையில் வீடுகளும், மனைகளும் அளிக்க வேண்டும் என்பதுதான். தனிப்பட்ட முறையில், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்களைப் போல், லாபம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டால், அது மக்கள் நலன் காக்கிற அரசாக இருக்காது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 


Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நேசன்nesan - chennai,இந்தியா
12-டிச-201021:13:52 IST Report Abuse
நேசன்nesan ஆமா..ஆமா...நீங்க ஜனங்களுக்கு சேவை செஞ்சு கிழிச்சது போதும்...உங்க லட்சணம் ஆவடில, திருமுல்லைவயில்ல, ambaturla பாத தெரியும்...register ஆபீஸ் வாசல்ல நாயா நிக்கிற ஜனங்கள பாத்தா வயிறு எரிது...register பத்திரம் இருந்தும் உன் dmk அள்ளக்கைங்க அது பொறம்போக்கு நிலம்னு ஏமாத்தி kuli பரிகிரனுங்க...சிலருக்கு paathi நிலம் பொரம்போக்காம் மீதி பாடாவாம்...அட பக்கிகள அந்த கருமம் புடிச்ச பட்டாவ வங்கதான அந்த உசிருங்க இப்படி வெயில்ல நிக்குதுங்க...உள்ள இருக்க உன் கல்லேக்டோருக்கு தெரியாது?...govt லறிந்து ஆர்டர் வரலின்னு சொல்றானுங்க...ஏன் பட்டா இல்லன இன்னும் சில நாட்கள்ல அந்த இடங்களையும் அரசு வளர்ச்சி திட்ட பணிகளுக்குன்னு மொத்தமா சுருட்டி உன் முதல வாயல முழுங்கவா?...
Rate this:
Cancel
venkat - chennai,இந்தியா
12-டிச-201020:43:14 IST Report Abuse
venkat கருணாநிதியை 40 வருடங்களுக்கு மேலாக கவனித்து வருபவர்களுக்கு அவரைப்பற்றி நன்றாக தெரியும்.எதிர்கேள்விகள் கேட்டே பிரச்னையை திசை திருப்பக்கூடியவர் .தன்னுடைய ஆட்சியின் தவறுகளை என்றுமே ஒத்துக்கொண்டதில்லை.காரணம்,இடிப்பார் இல்லா ஏமரா மன்னன்.தற்போது கெடுப்பான் இல்லனும் கெடுவார் .இது காலம் நிரூபிக்கும் உண்மை.
Rate this:
Cancel
alavoudine - Karaikal,இந்தியா
12-டிச-201020:24:51 IST Report Abuse
alavoudine விஞ்ஞான முறையில் ஊழல் செய்த ஊழல் விஞ்ஞானி கருணாநிதியிடம் கற்றுகொள்ளவேண்டியது நிறைய உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X