பட்.. பட்... 'பசங்க 2' பசங்க!| Dinamalar

பட்.. பட்... 'பசங்க 2' பசங்க!

Added : ஜன 22, 2016 | கருத்துகள் (2)
பட்.. பட்... 'பசங்க 2' பசங்க!

நவீனம்... பெற்றோர்-குழந்தை இடையேயான உறவில் எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறது; அவற்றால் வரும் விளைவுகள் பற்றி அழகாய் திரைபடுத்தியிருக்கிறது பசங்க 2. பிரபலங்கள் பலர் நடித்திருந்தாலும் அவர்களை விட பார்வையாளர்களின் மனதில் நிற்பது கவினாக நடித்த நிஷேஷ், நைனாவாக நடித்த ஸ்ரீ வைஷ்ணவி. அவர்களை ஊரே பேசுகிறது... அவர்கள் உங்களுக்காக பேசுகிறார்கள் இதோ...'ஜோதிகாவுக்காக வெயிட்டிங்' ''எனக்கு சிங்கப்பூர்ல ஒரு பேன் இருக்காங்களே... நேத்து போன் பண்ணி ரொம்ப நல்லா நடிச்சிருக்கன்னு பாராட்டினாங்க... அதோடு எனக்கு சாக்லேட்ஸ் அனுப்பிறேன்னு சொல்லிருக்காங்க...' என, அதே குட்டீசின் குறும்போடு பேசத் துவங்கினார், ஹிட் படஹீரோ நிஷேஷ். இவர் சென்னை கவி பாரதி வித்யாலயாவின் ஐந்தாம் வகுப்பு மாணவன்.''நான் இதுக்கு முன்னாடி காவியத் தலைவன் படத்துல நடிச்சுருக்கேன். அப்போ என்னை யாரும் கண்டுக்கலே. இப்போ பசங்க 2 படத்துல நடிச்சதுக்கு அப்புறம், எல்லோருக்கும் என்னை தெரியுது.அந்த படத்துக்காக ஆடிசன் நடக்குதுன்னு எனக்கு ரொம்ப லேட்டா தான் தெரிஞ்சது. சரி போய் அட்டெண்ட் பண்ணி தான் பாப்போமேன்னு போனேன். எனக்கு முன்னாடி 200க்கும் அதிகமான பசங்களை இண்டர்வியூ பண்ணியிருந்தாங்க. அதை கேட்டதும் உள்ளுக்குள்ள ஒரே பயம். ஆனால் அவங்க என்னடான்னா... சிரிச்சு காமி, முறச்சு பாரு, ரோபோ மாதிரி நட, பாட்டு பாடு, ஸ்டைலா நடந்து வான்னு... ஜாலியா சொன்னாங்க.நானும் சிரிச்சுட்டே செஞ்சேன். கடைசில என்னையவே 'செலக்ட்' பண்ணிட்டாங்க. ஆடியோ வெளியீட்டுக்கு வந்த ஜோதிகா ஆண்ட்டி, சூப்பரா நடிச்சிருக்கியாமே! பெட்டரா நடிச்சது... நீயா? சூர்யாவா?னு பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னாங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்குறதுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... என்று கூறிய நிஷேஷ்... விளையாட நேரமாச்சு... பை...'' என மீண்டும் விளையாட்டுத் தனமாய் புறப்பட்டார். நான் ஜெயிச்சுட்டேன் ''நானும் முகமூடி படத்துல நடிச்சிருக்கேன். அப்புறம் பூர்விகா விளம்பரத்துல வர்ற குட்டிப் பொண்ணும் நான் தான். இப்போ 'பசங்க 2' வந்த பிறகு தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கேன்...''என செல்லமாய் சிலாகித்த வைஷ்ணவி, சென்னை லாலாஜி மெமோரியல் ஒமேகாஇண்டர்நேஷனல் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவி.''படத்துல காட்டுற மாதிரி நிறைய சேட்டை எல்லாம் பண்ணமாட்டேன். நான் ரொம்ப சமத்து பொண்ணுன்னு அம்மா சொல்லுவாங்க. என் தம்பி ஸ்ரீகிருஷ்ணா, என் நடிப்பை பாத்துட்டு,நீ ஜெயிச்சுட்டேன்னு சொன்னான். அவனே சொன்னது ரொம்ப சந்தோஷமா இருக்கு.எனக்கு சினிமால வாய்ப்பு கொடுத்த மிஷ்கின் சாரையும், பசங்க 2 படத்துல லீட் கேரக்டர் கொடுத்த பாண்டிராஜ் அங்கிளையும் மறக்கவே முடியாது. அதை விட முக்கியம்... என் கூட நடிச்ச நிஷேஷ் டீமையும் மறக்க முடியாது! சூட்டிங் போன மாதிரியே இருக்காது; ஸ்கூலுக்கு போன மாதிரி தான் இருந்துச்சு. ஒரே ஜாலியா இருக்கும். இனி எப்போது அந்த மாதிரி ஜாலி வருமோ..'' என... மீண்டும் கற்பனையில் மிதந்த அந்த குட்டி பெண்ணை, சுட்டித் தனமாய் தட்டிக் கொடுத்து விடைபெற்றோம்.இந்த குட்டீஸ்களை பாராட்டsunishla@gmail.com (நிஷேஷ்), vibasurya@gmail.com (ஸ்ரீ வைஷ்ணவி)

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X