டில்லியில் காற்று மாசு மேலும் மோசம் : மீண்டும் வருமா புதிய போக்குவரத்து முறை?

Added : ஜன 22, 2016 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : தலைநகர் டில்லியில் 2 வார காலம் அமலில் இருந்த புதிய போக்குவரத்து முறையால் குறைந்திருந்த காற்று மாசுபாடு, மீண்டும் மோசமடைந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.டில்லியில் காற்று மாசுபாடு மற்றும் வாகன நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, ஜனவரி 1ம் தேதி முதல் இரண்டு வார கால அளவிற்கு ஒற்றை இலக்க வாகன பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் ஒருநாளிலும், இரட்டை
டில்லியில் காற்று மாசு மேலும் மோசம் : மீண்டும் வருமா புதிய போக்குவரத்து முறை?

புதுடில்லி : தலைநகர் டில்லியில் 2 வார காலம் அமலில் இருந்த புதிய போக்குவரத்து முறையால் குறைந்திருந்த காற்று மாசுபாடு, மீண்டும் மோசமடைந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டில்லியில் காற்று மாசுபாடு மற்றும் வாகன நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, ஜனவரி 1ம் தேதி முதல் இரண்டு வார கால அளவிற்கு ஒற்றை இலக்க வாகன பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் ஒருநாளிலும், இரட்டை இலக்க வாகன பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் மற்றொரு நாளில் இயக்கும் வண்ணம் புதிய போக்குவரத்து முறை அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்த புதிய போக்குவரத்து முறையின் மூலம் காற்று மாசுபாடு 50 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளதாக டில்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு, திட்டத்தின் வெற்றி நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment (CSE)), டில்லியில் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
புதிய போக்குவரத்து முறை நிறுத்தப்பட்ட காலத்தில் இருந்து முதல் மூன்று நாட்களில், காற்று மாசின் அளவு 57 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்த காற்று மாசின் அளவை குறைக்கவேண்டும் எனில், புதிய போக்குவரத்து முறையை, குளிர்காலம் முடியும்வரை அமல்படுத்தப்பட வேண்டும். மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். இது ஒன்றே, காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கிய நடவடிக்கை என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yazhini dhesigan - new york,யூ.எஸ்.ஏ
24-ஜன-201605:23:43 IST Report Abuse
yazhini dhesigan பொது போக்குவரத்தை மேம்படுத்தினால் மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். தனியார் வாகன பயன்பாடு குறையும். மேலை நாடுகளில் உள்ளது போல் கார் பூலிங் ( பலரும் ஒன்றாக சேர்ந்து பயணித்தல் ) நடைமுறையை மக்கள் பயன்படுத்த வேண்டும். அரசும் அவ்வாறு பயன்படுத்துவோருக்கு சலுகை கொடுக்க முன் வர வேண்டும். தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கார் பூலிங் முறையை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு ஊக்குவிக்கும் நிறுவனங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். நம் நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் சுற்று சூழல் மாசுபாட்டை குறைக்க அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். சுற்று சூழல் துறை அமைச்சகம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். பிரதமர் அவர்கள் ஒவ்வொரு மாநிலமும் எவ்வாறு சுற்று சூழலை பாதுகாக்கிறது என்று மதிப்பிட வேண்டும். தினமலர் நாழிதுழும் காற்றின் தரத்தினை அறிந்து கொள்ள கூடிய அறிவியல் அறிக்கையை மாநில வாரியாக வெளியிட வேண்டும். வெறும் குறை கூறி ஒரு பயனும் இல்லை. மக்கள் முன் அனைத்து தகவல்களையும் தந்தால் எங்கே குறை உள்ளது என்று தெரியும். தகுந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-ஜன-201615:25:56 IST Report Abuse
Endrum Indian நாளைக்கு AAP ஏப்பம் விட்டதால் தான் ஜனவரி 1 லிருந்து 15 வரை மாசு 50% குறைந்து விட்டது என்று சொன்னாலும் மக்கள் / கூமூட்டைகள் நம்புவார்கள் போல இருக்கின்றது. 13.7% கார்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது ஒற்றை இரட்டையினால், அப்பொழுது குறைந்தால் வெறும் 13.7% சதவிகிதம் மாசு குறைந்தது என்றால் நம்பலாம். 50% மாசு குறைவு நிச்சயமாக தவறு. india டிவி யில் ஜன.1-13 மாசு 23.7% மாசு அதிகமாக இருந்தது தக்க ஆதாரங்களுடன் காண்பிக்கப்பட்டது. கேஜரிவாளின் கூற்று முற்றிலும் தவறு.
Rate this:
Cancel
Vimall - Rajapalayam ,இந்தியா
23-ஜன-201611:36:10 IST Report Abuse
Vimall முதல்ல வண்டிகளுக்கு கடன் கொடுப்பதை நிறுத்துங்க. வண்டிகளின் எண்ணிக்கை குறையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X