துப்பாக்கிகளுடன் இருவர் கைது மாஜி டி.எஸ்.பி.யிடம் விசாரிக்க முடிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கிகளுடன் இருவர் கைது மாஜி டி.எஸ்.பி.யிடம் விசாரிக்க முடிவு

Added : ஜன 22, 2016

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.யிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் ஹரி 37. கன்னியாகுமரியில் வியாபாரம் செய்யும் இவர் வியாபரம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, யானைப்பாலம் என்ற இடத்தில் இவரது மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்திய இரண்டு பேர் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க மறுத்த போது இருவரும் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து ஹரி கோட்டார் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சரக்கல்விளை ரஹ்மத்கார்டன் பகுதியை சேர்ந்த முகைதீன்ராசிக் 35, பறக்கை ரோடு பிஸ்மி நகரை சேர்ந்த பாபு உசேன் 33 ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு துப்பாக்கிகள், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ஒருவரிடம் இருந்து பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த டி.எஸ்.பி. ஒய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஆவார். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X