சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., கல்லூரி மாணவி விடுதி அறையில் தற்கொலை

Added : ஜன 22, 2016
Advertisement

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இயங்கி வரும் நேசனல் இன்ஜி., கல்லூரி விடுதியில் தங்கி படித்த மாணவி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவில்பட்டியில் நேசனல் இன்ஜி., கல்லூரி உள்ளது.இங்கு தென்காசி அருகேயுள்ள கோவிலூத்து பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, என்பவரது மகள் பிரியங்கா,23. இவர் சிவில் இன்ஜி., பிரிவில் இறுதியாண்டு படித்து வந்தார். இவர் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று மாலை 6 மணிக்கு இவரது வீட்டில் இருந்து இவரிடம் தொலை பேசியில் பேசியுள்ளனர். இந் நிலையில் அறையில் உள்ள மற்ற மாணவிகள் இரவு சாப்பாட்டிற்காக கேன்டீன் சென்றுவிட்டனர். திரும்பி வந்து பார்த்தபோது பிரியங்கா அறையில் உள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சாப்பிட்டு விட்டு வந்த மாணவிகள் பிரியங்கா உடலை பார்த்து விடுதி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர். நாலாட்டின்புதூர் போலீசார் பிரியங்கா உடலை கைப்பற்றிய போது அவரது இடது கையில் சாரி பார் பேமிலி, என, எழுதியிருந்தார். இவரது வீட்டில் உள்ள பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X