நாடு முழுவதும் அதிரடி சோதனை: ஐ .எஸ். ஐ.எஸ்., ஆதரவாளர்கள் சிக்கியது எப்படி?

Added : ஜன 22, 2016 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக நடக்கவுள்ளது இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய புலனாய்வு படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.குடியரசு தினத்தையொட்டி ஐ .எஸ். ஐ.எஸ்., அல்குவைதா, ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளனர் .இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு
நாடு முழுவதும் அதிரடி சோதனை: ஐ .எஸ். ஐ.எஸ்., ஆதரவாளர்கள் சிக்கியது எப்படி?

புதுடில்லி: வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக நடக்கவுள்ளது இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய புலனாய்வு படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

குடியரசு தினத்தையொட்டி ஐ .எஸ். ஐ.எஸ்., அல்குவைதா, ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளனர் .இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது .

பஞ்சாப் மாநிலம் வழியாக ஊடுருவலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இந்த மாநிலத்தை ஒட்டிய பகுதிகளில் கூடுதல் ரோந்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

உத்தர்கண்ட் உ பி மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு முக்கிய இடங்களில் போலீஸ் படையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர் .இன்று டில்லி, மும்பை, பெங்களூரு, ஐ தராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இது வரை 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .

கர்நாடகாவில் ஐ .எஸ். ஐ.எஸ்., ஆதரவாளர்கள் : கர்நாடக மாநிலத்தில் ஐ .எஸ். ஐ.எஸ்., ஆதரவாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . மங்களூருவில் கெமிக்கல் இன்ஜினியர் நஜ்முல் கூடா, தும்கூர் மாவட்டத்தில் சையது உசேன் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் . இருவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் , 2 பேர் ஐ .எஸ். ஐ.எஸ்., பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்கள்: இதற்கிடையில் ஜம்மு காஷ்மீரில் வெடி பொருட்கள் மற்றும் டெட்டனேட்டர்கள் ஒரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் , இதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர் .

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENDRAL HAMEED, DUBAI - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜன-201613:18:25 IST Report Abuse
THENDRAL  HAMEED, DUBAI சகோதரி திவ்யா அவர்களே வாய் புளிச்சதோ, மாங்காய் புளிச்சதோன்னு ஒளறக் கூடாது....(கைபர் கணவாய் வழியாக ஆடு மேய்க்க வந்தவர்கள் தான் இன்று ஆட்சி, அதிகாரத்தில் இருக்கிறார்கள்
Rate this:
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
24-ஜன-201609:54:58 IST Report Abuse
சொல்லின் செல்வன் ரிசீவ்.. ரிசீவ்.. பயர்.. பயர்.. னு ஒருத்தன் காமெடி பண்ணிட்டு இருந்தானே, அவனோட லைவ் ஷோ வை இவனுங்களுக்கு போட்டு காட்டுன போதும்.. திருந்திடுவானுங்க
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
24-ஜன-201601:01:59 IST Report Abuse
மதுரை விருமாண்டி காலிஸ்தான் தீவிரவாதத்தை இந்திராகாந்தி ஒடுக்கியது போல கருவறுக்க வேண்டும். தண்டனைகள் கொடூரமாக இருந்தாலும் பரவாயில்லை. தீவிரவாதத்துக்கு பலன் கொடூர மரணம் தான் என்ற மரண பயம் இவ்வகை இளைஞர்களையும் , அவர்களைப் பெற்று வளர்க்கத் தெரியாதவர்களையும் சேர வேண்டும்.. ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்தையும் சந்தேகிக்காமல், தவறு செய்தவர்களை தண்டிக்க தயங்கக் கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X