பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் ரூ.200 கோடி கள்ளநோட்டு புழக்கம்
ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வியாபாரிகள் பீதி

சேலம்: தமிழகத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பில், 1,000 மற்றும், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பால், வியாபாரிகள் பீதியில் உள்ளனர்.

தமிழகத்தில் ரூ.200 கோடி கள்ளநோட்டு புழக்கம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வியாபாரிகள் பீதி

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தான், இந்திய ரூபாய் நோட்டுகளை கோடிக்கணக்கில் அச்சடித்து, மேற்கு வங்கம் வழியாக, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், புழக்கத்தில் விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வங்கி ஏ.டி.எம்.,களில் கூட, கள்ள நோட்டுகளின் புழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. கள்ள நோட்டுகளின் புழக்கத்தை தடுக்க, சி.பி.சி.ஐ.டி., பிரிவின், 'பேக் நோட் பைரசி' பிரிவு செயல்பட்டபோதிலும், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

விழிப்புணர்வு 'நோட்டீஸ்' :

இந்நிலையில், கனரா வங்கி உட்பட பல்வேறு தேசிய வங்கிகளின் சார்பில், அதன் கிளைகளில், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், ரிசர்வ் வங்கி தகவலின்படி, இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 ஏ.க்யூ., பி.ஏ.சி., வரிசையிலான, 1,000 ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டுகள் என கண்டறியப்பட்டுள்ளதால், அந்த நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 500 ரூபாய் நோட்டுகளில், 2 ஏ.க்யூ., பி.ஏ.சி., 100 ரூபாய் நோட்டுகளில், 4 ஏ.க்யூ., ஏ.ஏ.சி., ஆகியன கள்ள நோட்டுகளாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி கூறுகையில், ''கள்ள நோட்டு புழக்கத்தால், பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாவது,மளிகை, சிறு வியாபாரிகளே. கள்ள நோட்டு புழக்கம் குறித்து வங்கிகள் எச்சரிக்கை

Advertisement

விடுத்துள்ள போதிலும், அதை தடுக்க போலீசார் தீவிரம் காட்டினால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட முடியும்,'' என்றார்.

கும்பலின் 'டெக்னிக்': வங்கி மேலாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கள்ளநோட்டை கட்டுப்படுத்த, போலீசில், சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே, சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இதை நன்கு தெரிந்து கொண்ட கள்ளநோட்டு கும்பல், சேலம், நெல்லை, ஈரோடு உட்பட இதர மாவட்டங்களில், கள்ள நோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elaiyaraja Dharmalingam - coimbatore,இந்தியா
23-ஜன-201612:33:41 IST Report Abuse

Elaiyaraja Dharmalingamமக்களை மேன்மேலும் கலவரப்படுத்தாமல் ATM , மற்றும் பல வழிகளில் நம் கைக்கு வந்து சேரும் பணம் கள்ள நோட்டு என தெரிய வந்தால் பதறாமல் உடனடியாக செய்யவேண்டியதைப் பற்றி ஒரு கட்டுரையை தினமலர் வெளியிட்டால் மக்கள் பீதி கொள்ளாமல் நிம்மதிப் பெரு மூச்சி விடுவார்கள்.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
23-ஜன-201609:11:01 IST Report Abuse

K.Sugavanamஅப்புறம் அந்த ரிசர்வ் வங்கி வெளியிட்ட 30,000 கோடி நூலில்லா கள்ள நோட்டுங்க? அதுல 10,000 கோடி சர்குலேஷன்லயாமே..

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஜன-201609:00:59 IST Report Abuse

Srinivasan Kannaiyaமத்திய அரசு தயாரித்த 30,000 கோடி வெள்ளி நூல்கள் இல்லாத நோட்டுகள் என்ன ஆயிற்று... அவை தானா இவை....

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X