'இந்த அரசு தொடர மக்கள் ஆர்வம்' - முதல்வர் ஜெயலலிதா - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இந்த அரசு தொடர மக்கள் ஆர்வம்' - முதல்வர் ஜெ.,

Added : ஜன 23, 2016 | கருத்துகள் (120)
Advertisement
' இந்த அரசு தொடர மக்கள் ஆர்வம் ' - ஜெ.,

சென்னை: தமிழகத்தில் தனது தலைமையிலான அதிமுக அரசு, மக்களுக்காக செயல்பட்டு வருகிறது எவ்வித சுயநலமும் இல்லாமல் செயல்படும் நமது அரசு தொடரட்டும் என மக்கள் நினைக்கின்றனர் என இன்று சட்டசபையில் முதல்வர் ஜெ பேசுகையில் குறிப்பிட்டார் .கவர்னர் உரை மீது நன்றி தெரிவிக்கும் உரையில் ஜெ, பேசுகையில்;


தமிழகத்தில் கடந்த மைனாரிட்டி அரசை விட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளோம். மக்கள் பலர் பயன் பெற்றுள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர் பெற்றுள்ளது. மின்வெட்டு அறவே இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. 7 ஆயிரத்து 485 மெகாவாட் மின்சாரம் தற்போது நமக்கு கிடைக்கிறது. இன்னும் 6 மாத்தில் ஆயிரத்து 232 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பல்வேறு மின் திட்டங்கள் செயல்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.


உணவு உற்பத்தி பெருகியிருக்கிறது , கல்வித்துறை மேம்பட்டுள்ளது. 73 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 56 மாதங்களில் எனது தலைமையிலான அரது சிறப்பாக பணியாற்றியுள்ளது .எதிர்கட்சிகள் எங்களை பற்றி பொய் பிரசாரம் செய்கின்றனர் .இதனை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க நினைக்கின்றனர் .இது பலிக்காது, நாங்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் பல்வேறு மணிமண்டபங்கள் கட்டியுள்ளோம்.


மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் குடும்ப நலனுக்காக மைனாரிட்டி திமுக அரசு செயல்பட்டது. குடும்ப நலனுக்காக இலவச வண்ண தொலைக்காட்சி திட்டம் கெண்டு வந்தது . ஆனால் எங்கள் திட்டம் அனைத்தும் தமிழக மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது. தமிழர்களின் வாழ்வு மங்காத அளவிற்கு புது திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம் .

கடந்த 2011ல் மாற்றம் வேண்டும் என மாற்றத்தை ஏற்படுத்தினர் . சட்டம் - ஒழுங்கு சீர் செய்யப்பட வேண்டும்; இல்லாதோரின் நிலை உயர வேண்டும்; இருண்ட தமிழகம் ஒளிபெற வேண்டும்; விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், ஏழை, எளியோர் ஆகிய அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசிட வேண்டும் என்று, இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளோம்.

மக்களால் நான் மக்களுக்காகவே நான் : தமிழக மக்கள் வாழ்வு ஏற்றம் பெற செய்துள்ளோம். எனவே தொடரட்டும் இந்த அரசு என மக்கள் தற்போது நினைக்கிறார்கள். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்பதை நான் சொல்லி வருகிறேன் .மக்களால் இந்த அரசு மக்களுக்காவே இந்த அரசு செய்த சாதனையை சொல்ல வேண்டுமானால் நேரம் இல்லை , 36 துறைகள் உள்ளன .அனைத்து துறைகளின் சாதனைகளை சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் ஆகும். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்ட இந்த இயக்கம் இருக்கும் வரை நான் இருக்கும் வரை, தமிழக மக்களின் நலனுக்காக செயல்படும், அதிமுக இயக்கம் மக்களுக்காக செயல்படும், எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காக செயலாற்றும். இவ்வாறு ஜெ., பேசினார்.

வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudhapriyan - riyadh,சவுதி அரேபியா
25-ஜன-201612:24:05 IST Report Abuse
sudhapriyan அதெல்லாம் சும்மா .. 2016 இல் ஆட்சியை பிடிக்க போவது எங்க சேட்டன் அஜித் தான்.... தலபோல வருமா .....
Rate this:
Share this comment
Cancel
s. subramanian - vallanadu,இந்தியா
24-ஜன-201614:35:37 IST Report Abuse
s. subramanian என்ன இருந்தாலும் நான் திரு சோ அவர்களின் பக்கமே, யாருக்கும் ஓட்டு போடுங்க ஆனால் திமுகவுக்கு ஒட்டு போடவே கூடாது என்ற அவரின் தெளிவு எனக்கு பிடிக்குது ஏன்னால் 2011 இல் திமுக எதிர்கட்சியாகக் கூட இருக்க லாயக்கில்லாத நிலையில் மக்கள் வச்சிருந்தபோதும் அந்த திமுக இன்னும் அடங்கலை ஆகவே 2016 இல் எதிர்கட்சியாக மட்டும் இல்லை ஒரு கட்சியா கூட இருக்கும் நிலை போய் ஒன்னும் இல்லாத நிலை வரணும் அப்போதான் தாலி அகற்றும், ஜாதி ஒழிப்பும் கடவுள் (ஹிந்துஸ்) எதிர்ப்பும் மொழி வளர்ப்பும் என கேவலம் இல்லாத தமிழகம் காணலாம். இல்லைன்னால் அஞ்சா நெஞ்சன் கனிமொழி என ஒரு கூட்டம் காத்துக்கொண்டுள்ளது , இந்த முறை அதுக்கு வழி இல்லை என்பதையும் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்பதையும் உணர்வார்கள்
Rate this:
Share this comment
Cancel
Jesudass Sathiyan - Doha,கத்தார்
24-ஜன-201614:09:29 IST Report Abuse
Jesudass Sathiyan நிச்சயம் மக்கள் விரும்பவில்லை..... நீங்கள் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Irudayarab Rajan - madurai ,இந்தியா
25-ஜன-201612:30:18 IST Report Abuse
Irudayarab Rajanநிச்சயமாக மக்கள் ஜெயா வை த்தான் நம்புவார்கள் கொலை கொள்ளை கூட்டத்தை நம்பவே maattaarkal...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X