ராமேஸ்வரம் குந்துக்காலின் கதை...| Dinamalar

ராமேஸ்வரம் குந்துக்காலின் கதை...

Updated : ஜன 24, 2016 | Added : ஜன 24, 2016 | கருத்துகள் (6)
Advertisement
 ராமேஸ்வரம் குந்துக்காலின் கதை...

ராமேஸ்வரம் குந்துக்காலின் கதை...

ராமேஸ்வரத்திற்கு பல முறை போய்வந்திருக்கிறேன் இந்த முறை கடந்த வாரம் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போயிருந்த போது கூடுதலாக ஒரு நாள் தங்கவேண்டி இருந்தது.

குந்துகாலில் உள்ள விவேகானந்தர் மண்டபம் போய்பார்க்கலாமா? என்று அங்குள்ள நண்பர் திரு.ஜோதி கேட்டார்.

சரி என்று முதல் முறையாக சென்று பார்த்தேன் அந்த அனுபவம் இனிமையானது இத்தனை நாள் இந்த இடத்தை பார்க்காமல் இருந்துவிட்டோமே என நினைக்கவைத்தது.

அமைதியான இடம் சுத்தமான கடற்கரை சுற்றிலும் பசுமையான தீவுகள் அருகே கடல்வாழ் உயிரின காட்சி கூடம் என்று அருமையாக இருந்தது, எல்லாவற்றுக்கும் மேலாக விவேகானந்தரே கூறியது போல அவரது வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற இடமும் இந்த குந்துக்கால்தான்.அந்த முக்கியமான நாளும் நாளைமறுநாள்தான்.(26/01/2016)

சாதாரண துறவியாக இருந்த அவர் உலகம் போற்றும் ஞானியாக மாறியதற்கு காரணமான அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு,உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திவிட்டு சுவாமி விவேகானந்தராக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில்தான் வந்திறங்கினார் .

விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் தொடவேண்டும் என முழங்காலிட்டு அமர்ந்தார் சேதுபதி மன்னர்.(அவர் முழங்காலிட்டு (குந்துக்காலிட்டு)அமர்ந்ததால் இந்த பகுதிக்கு குந்துக்கால் என்பதே பெயரானது)மன்னரின் இந்த செயலை மறுத்து அவரை ஆரத் தழுவினார் விவேகானந்தர்.

பின்னர் பேசிய விவேகானந்தர், “உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஸ்கர சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னை கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார். இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் பாஸ்கர சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது. இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி” என்று தமது அருகில் இருந்த பாஸ்கர சேதுபதி மன்னரை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி அகமகிழ்ந்தார் விவேகானந்தர்.

இந்தச் சம்பவம் நடந்து நூறாண்டுகள் கழித்து விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய பாம்பன் குந்துகால் பகுதியில் நினைவிடம் கட்ட வேண்டும் என பணிகளை ஆரம்பித்தபோது விவேகானந்தர் நினைவிடத்திற்குரிய இடம், மண்டபம் மரைக்காயர்களின் உரிமையில் இருந்தது.

ராமகிருஷ்ண தபோவனத்தில் இருந்து நிலத்தை விலைக்குக் கேட்டு மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினரை அணுகினார்கள். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பல தலைமுறைகளாக நெருக்கமாக இருந்துவந்த மரைக்காயர் குடும்பத்தினர் பாஸ்கர சேதுபதியின் வழியைப் பின்பற்றி இலவசமாகவே ஐந்து ஏக்கர் நிலத்தை அளித்து நினைவிடம் கட்ட அனுமதித்தனர். பின்னர் 2009 ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் திறக்கப்பட்டது.

ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள், விவேகானந்தர் நினைவிடத்துக்கு ஆர்வத்துடன் வருகின்றனர். கூடத்தினுள் கம்பீரமான விவேகானந்தர் சிலையும்,மன்னர் பாஸ்கர சேதுபதியின் சிலையும் உள்ளது மேலும் தியான கூடமும் உண்டு.இங்கிருக்கும் கண்காட்சிக் கூடத்தில் விவேகானந்தர் பாம்பன் கடற்கரையில் வந்திறங்கிய போது, அவரை சேதுபதி மன்னர் வரவேற்ற காட்சி, அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு ரதத்தில் விவேகானந்தர் பயணித்த காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் ஓவியங்களா தீட்டப்பட்டுள்ளன. இங்கு விவேகானந்தர் வாசக சாலையும் அமைந்துள்ளது. விவேகானந்தர் இல்லத்தின் மாடியில் இருக்கும் தொலைநோக்கி மூலம் அருகில் உள்ள குருசடை போன்ற தீவுகளையும் பார்க்கமுடியும்.அருகிலேயே பார்வையாளர்களை கவர கடல்வாழ் உயிரினங்கள் குறித்த காட்சி கூடமும் உள்ளது.

பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 4.2 கி.மீ. தூரத்தில் விவேகானந்தர் மண்டபம் உள்ளது, தற்போது பாதை சேதராமாகிஉள்ளது விவேகானந்தர் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாயந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்ற உத்வேகம் இருப்பவர்களுக்கு மோசமான பாதை எல்லாம் ஒரு பொருட்டல்ல, மேலும் உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே என்ற விவேகானந்தரின் வார்த்தைகளை உள்வாங்கியவர்களுக்கு இதெல்லாம் ஒரு குறையில்லை.விரைவில் இந்த பாதையை சீர் செய்ய உள்ளனர். விவேகானந்தர் நினைவிடம் செல்ல ராமேஸ்வரத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு.

ராமேஸ்வரத்திற்கு போகும் வாய்ப்பு கிடைத்தவர்கள் அவசியம் குந்துக்கால் பகுதிக்கு சென்று வாருங்கள் மனதில் உற்சாகமும் உவகையும் உண்டாகும்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
26-பிப்-201607:38:53 IST Report Abuse
Rangiem N Annamalai நல்ல பதிவு நன்றி அய்யா .
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
25-பிப்-201602:59:08 IST Report Abuse
Murugan நானும் இரு முறை ராமேஸ்வரம் சென்று உள்ளேன். விவேகானந்தர் மண்டபம் பற்றி தெரியாது.அவசியம் அடுத்தமுறை சென்றால் தரிசிப்பேன். மிக்க நன்றி ...
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-பிப்-201614:02:19 IST Report Abuse
Cheran Perumal மன்னர் பாஸ்கர சேதுபதியையும் தேவர் அய்யா அவர்களையும் நினைக்கும் தோறும் எனக்கு உடம்பில் மயிர்கூச்செறியும்.தேசத்தின் கிடைத்தர்க்கறிய சொத்து அவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X