சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா துறை அதிகாரிகள் நிர்வாக குளறுபடி ஓட்டல்கள், உணவகங்களை மூடும் அபாயம்

Updated : ஜன 25, 2016 | Added : ஜன 25, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 சுற்றுலா துறை அதிகாரிகள் நிர்வாக குளறுபடி ஓட்டல்கள், உணவகங்களை மூடும் அபாயம்

வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் செயல்படும், ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் குத்தகை காலத்தை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் புதுப்பிக்காததால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் தங்கிச் செல்ல வசதியாக, வனத்துறைக்கு சொந்தமான இடங்களில், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் உணவகங்கள் கட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் பராமரித்து வருகிறது.
உதவிகரமாக...:வனத்துறை இடங்களை குத்தகைக்கு எடுக்கும், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சி கழகத்திற்கு உதவவும், அதில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கவும், குத்தகை காலத்தை நீட்டிக்கவும், ஒப்பந்தம் போடவும், வனத்துறை அலுவலர் நியமிக்கப்பட்டார். 'டிரக்கிங்' எனப்படும், மலையேறும் சுற்றுலாவிற்கு, பயணிகளை பாதுகாப்பாக அழைத்து சென்று வர, வனத்துறை அலுவலரின் பணி, உதவிகரமாக இருந்தது.
இதனால், சுற்றுலாத் துறைக்கு அதிக அளவில் வருவாய் கிடைத்தது. ஆனால், வனத்துறை அலுவலராக இருந்தவர், 2010ல் ஓய்வு பெற்றார். அதன்பின், வேறு அலுவலர் நியமிக்கப்படாததால், வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் செயல்பட்ட, ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின், குத்தகை காலம் புதுப்பிக்கப்படவில்லை.
நீலகிரியில்...இதனால், நீலகிரி மாவட்டம், முதுமலையில் விடுதியுடன் கூடிய ஓட்டல் மூடப்பட்டது. அதேபோல, மற்ற இடங்களில் மூடப்படும் அபாயம் உள்ளது.
ரூ.2 கோடி வருவாய் இழப்பு :ஓய்வு பெற்ற சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வனத்துறைக்கு சொந்தமான பிச்சாவரம், கோத்தகிரியில் படகு குழாம்; முதுமலையில் ஓட்டலுடன் கூடிய விடுதி; ஊட்டி தொட்டபெட்டாவில் உணவகம் மற்றும் தொலைநோக்கி மையம் செயல்பட்டன. முதுமலையில் உள்ள விடுதியுடன் கூடிய ஓட்டலை, வனத்துறை ஏற்கனவே மூடிவிட்டது. அங்கு பல லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்ட கட்டடங்கள், பராமரிப்பின்றி பாழடைந்து வருகின்றன.
தற்போது, ஊட்டி தொட்டபெட்டா உணவகத்தை, வனத்துறை புதுப்பிக்க மறுத்து காலி செய்யும்படி,'நோட்டீஸ்' ஒட்டியுள்ளது. சுற்றுலாத்துறை அதிகாரிகளின் நிர்வாகக் குளறுபடியால், சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு, ஆண்டுக்கு, இரண்டு கோடி ரூபாய், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saraathi - singapore,சிங்கப்பூர்
25-ஜன-201615:38:58 IST Report Abuse
saraathi கவலைப்பட அல்லது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.அனைத்தையும் தனியாரின் கையில் கொடுப்பதற்கான அச்சாரமோ என்னவோ ?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-ஜன-201608:15:12 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒய்வு பெற்றவரின் இடத்தில் மற்றொரு நபரை பணி நியமனம் செய்வதில் என்ன கோளாறு என்று தெரியவில்லை... இதனால் அரசிற்கு எவ்வளவு வருமான இழப்பு..அம்மாவின் ஆட்சியில் தொய்வு காண தொடங்கி வெகு நாளாகி விட்டது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X