ஒற்றுமையா செயல்படுங்க! புத்திமதி சொன்ன அமைச்சர்

Added : ஜன 27, 2016
Share
Advertisement
அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்த சித்ரா, "என்னடி மித்து, கோவைக்கு பிரதமர் மோடி வரப்போறாராமே,'' என, கேட்டாள்."ஆமாக்கா, பிப்., 2ம் தேதி வரப்போறார். முதல்வர் ஜெ.,வும் மேடை ஏறுவார்னு சொல்றாங்க. பிரதமரை சந்திக்க, நம்மூர் தொழில்துறையை சேர்ந்தவங்களும் முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. திருப்பூருக்கு வந்திருந்த ஜவுளித்துறை இணை அமைச்சர் கங்குவாரும், பிரதமர் மோடியை
ஒற்றுமையா செயல்படுங்க! புத்திமதி சொன்ன அமைச்சர்

அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்த சித்ரா, "என்னடி மித்து, கோவைக்கு பிரதமர் மோடி வரப்போறாராமே,'' என, கேட்டாள்.
"ஆமாக்கா, பிப்., 2ம் தேதி வரப்போறார். முதல்வர் ஜெ.,வும் மேடை ஏறுவார்னு சொல்றாங்க. பிரதமரை சந்திக்க, நம்மூர் தொழில்துறையை சேர்ந்தவங்களும் முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. திருப்பூருக்கு வந்திருந்த ஜவுளித்துறை இணை அமைச்சர் கங்குவாரும், பிரதமர் மோடியை நேரில் சந்தியுங்க. கோரிக்கையை ரெண்டு நிமிஷத்துல சொல்லுங்கன்னு வழி சொல்லியிருக்காரு,'' என்றாள் மித்ரா.
"நம்மூர்க்காரங்களுக்கு புத்திமதி சொன்னாராமே,'' என, இழுத்தாள் சித்ரா.
"ஆமாக்கா, ஒரே ஒரு விழாவுலதான், மத்திய அமைச்சர் கலந்துக்கிறதா இருந்துச்சு. நம்மூருல, தொழில்துறையை சேர்ந்தவங்க ரெண்டு குரூப்பா செயல்படுறாங்களே. தங்களோட "கெத்தை'க் காட்டணும்னு, போராடி, அரசியல் நிர்ப்பந்தம் செய்து, நிகழ்ச்சிக்கு வர வச்சிட்டாங்க. ரெண்டு நிகழ்ச்சியிலும், அமைச்சர், சொற்பமான நேரமே பேசுனாரு. அப்ப, தொழில்துறையினர் ஒருங்கிணைந்து செயல்படணும்னு சொன்னாரு,'' என்றாள் மித்ரா.
"அப்ப, இங்க இருக்கற பிரச்னையை, தெள்ளத்தெளிவா புரிஞ்சுக்கிட்டாருன்னு சொல்லு,'' என, சித்ரா சொல்ல, ""ஆமாக்கா, நம்மூருக்கு புது கலெக்டர் வந்திருக்காங்களே, போயி பார்த்தீங்களா,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
"ஆமாம்ப்பா, போயி பார்த்தேன். ரொம்ப "சிம்பிளா' இருந்தாங்க. கரூரில் துணிச்சலா செயல்பட்ட அதிகாரின்னு சொன்னாங்க. தேர்தல் நேரத்துல வந்துருக்காங்க; எப்படி நடந்துக்குவாங்கன்னு தெரியலை. போன எலக்ஷன் சமயத்துல, திருச்சியில, அஞ்சு கோடி ரூபாயை பறிமுதல் செஞ்சது இந்த அதிகாரிதான்னு பேசிக்கிறாங்க. பச்சை நிற சுரிதாரில் வந்ததால, ஆளுங்கட்சிக்காரங்க தெம்பா இருக்காங்க. பீகார் "சென்டிமென்ட்டும்' கை கொடுக்கும்னு "குஷி'யா இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
"அதென்னக்கா பீகார் "சென்டிமென்ட்'? ஒண்ணுமே புரியலையே?'' என, குழம்பினாள் மித்ரா.
"கட்சி தொண்டர்களுக்கு தெரியாது; நிர்வாகிகள் மட்டும் கண்டுபிடிச்சிருக்காங்க. சட்டசபை தேர்தலுக்கு, திருப்பூர் மாவட்டத்துக்கு பீகார்ல இருக்கற ஓட்டு இயந்திரங்களை ஒதுக்கியிருக்காங்க. இயந்திரங்களை எடுத்துட்டு வர, அதிகாரிகளும் புறப்பட்டு போயிருக்காங்க; ஒரு வாரத்துல நம்மூருக்கு வந்துரும். சில மாசத்துக்கு முன்னாடி, பீகார்ல தேர்தல் நடந்துச்சுல; அங்க, ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிச்சிருக்கு. அதேமாதிரி, தமிழகத்திலும், "சென்டிமென்ட்' கை கொடுக்குமானு, கேரள ஜோதிடரிடம் ஆளுங்கட்சிக்காரங்க கேட்டுட்டு வந்திருக்காங்க,'' என்றாள் சித்ரா.
"கோவில் உண்டியல் காணிக்கை பணம் திருடுபோன விவகாரத்துல, திருப்பம் ஏற்பட்டிருக்காமே,'' என, கூறியபடி, சூடாக இஞ்சி டீ கொடுத்தாள் மித்ரா.
அதை வாங்கி உறிஞ்சிய சித்ரா, ""விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்ததைத்தானே கேக்குற,'' என, கேட்க, மித்ரா ஆமோதித்தாள்.
"அதிகாரிகள் மட்டத்தில் இடமாற்றத்தோடு நிறுத்திட்டாங்க.
இந்த பிரச்னையை இந்து முன்னணிக்காரங்க விடுறதா இல்லை. ஆர்ப்பாட்டம் நடத்தியும் மேல்நடவடிக்கை எடுக்காததால, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பிட்டாங்க. அங்கிருந்து, ஊழல் தடுப்பு பிரிவு போலீசுக்கு கடிதம் வந்திருக்கு. போலீஸ் தரப்புல, கோவில் நிர்வாக செயல்பாடுகளை ரகசியமா விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க, புகார் சொன்ன, இந்து முன்னணி நிர்வாகிகளை அழைச்சு, விசாரிச்சிருக்காங்க,''
என்றாள் சித்ரா.
"அப்ப, கோவில் வட்டாரத்துல, "தலை'கள் உருளும்னு சொல்லுங்க,'' என கூறியபடி, காய்கறி வாங்க, மார்க்கெட்டுக்கு புறப்பட்டாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X