சென்னை: கோவைவ.உ.சி., மைதானத்தில் ரூ.543 கோடி ரூபாய் அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் உடல்நல குறைவுகாரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரத்து செய் யப்பட்டுள்ளது. இதனையடுத்து வீடியோ கான்பிரசிங் மூலம் திட்டங்களை துவக்கிவைத்து பேசினார். அவர் பேசும்போது, தகவல் தொழில்நுட்பபூங்கா, அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் போன்ற பல திட்டங்கள் மூலம் கோவையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. செம்மொழி பூங்கா, காந்திநகரில் மேம்பாலம் உள்ளிட்ட 543 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் தி்ட்டங்களை அதிகாரிகள் உரிய காலத்தில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று கூறினார்.