பொது செய்தி

தமிழ்நாடு

நெல் சாகுபடியில் சாதனை படைத்த 'தங்க மங்கை' : 50 சென்ட் நிலத்தில் 3 டன் நெல் உற்பத்தி

Updated : ஜன 28, 2016 | Added : ஜன 27, 2016 | கருத்துகள் (15)
Share
Advertisement
மதுரை: திருந்திய நெல் சாகுபடியில், 50 சென்ட் நிலத்தில், 3 டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்த, மதுரை பெண் விவசாயி பிரசன்னாவிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தங்கப்பதக்கம், 5 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கி கவுரவித்தார். மதுரை, திருப்பாலையை சேர்ந்தவர், பத்மநாதன் மனைவி பிரசன்னா; எம்.எஸ்சி., - பி.எட்., படித்தவர். தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ள இவருக்கு, விவசாயத்தில் ஈடுபாடு
நெல் சாகுபடியில் சாதனை  படைத்த 'தங்க மங்கை' : 50 சென்ட் நிலத்தில் 3 டன் நெல் உற்பத்தி

மதுரை: திருந்திய நெல் சாகுபடியில், 50 சென்ட் நிலத்தில், 3 டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்த, மதுரை பெண் விவசாயி பிரசன்னாவிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தங்கப்பதக்கம், 5 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கி கவுரவித்தார். மதுரை, திருப்பாலையை சேர்ந்தவர், பத்மநாதன் மனைவி பிரசன்னா; எம்.எஸ்சி., - பி.எட்., படித்தவர். தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ள இவருக்கு, விவசாயத்தில் ஈடுபாடு அதிகம்.3 டன்னுக்கும் அதிகம்சத்திரப்பட்டி அருகே, சின்னப்பட்டியில் தனக்கு சொந்தமான, 65 சென்ட் நிலத்தில் புதிய ரகமான, 'திருச்சி - 3' எனும் மோட்டா ரக நெல் பயிரிட்டார். இயற்கை அடி உரம், வேப்ப எண்ணெய், தண்ணீர் கலவையை பயன்படுத்தி பூச்சி மருந்து தெளித்தார். கிணற்று பாசனம் மூலம் தேவையான அளவு தண்ணீர் பயன்படுத்தி, 110 நாள் நிறைவில் 2015 பிப்., 11ல் நெல் அறுவடை நாள் குறிக்கப்பட்டது. வேளாண் தேர்வுக்குழுவை சேர்ந்த திண்டுக்கல் வேளாண் இணை இயக்குனர் முருகேசன், மதுரை இணை இயக்குனர் கனகராஜ், உதவி இணை இயக்குனர் பன்னீர்செல்வம், முன்னோடி விவசாயி தேன்மொழி முன்னிலையில், 50 சென்ட் பரப்பளவில் நெல் அறுவடை நடந்தது. இதன் மொத்த எடை, 3,223 கிலோ. இது, 3 டன்னுக்கும் அதிகமானது. மாநில அளவில் 'திருச்சி - 3' ரக நெல் விளைச்சலில் போட்டியிட்ட விவசாயிகளில் பிரசன்னா, குறைந்த நிலத்தில் அதிகளவு நெல் உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்தது நிரூபிக்கப்பட்டது. நேற்று முன்தினம், சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் பிரசன்னாவிற்கு முதல்வரின் சிறப்பு தங்கப்பதக்கம், 5 லட்சம் ரூபாய் வழங்கி, முதல்வர் ஜெயலலிதா கவுரவித்தார்.விவசாயத்தின் மீது... பிரசன்னா கூறியதாவது: கலெக்டர் வீரராகவ ராவ், வேளாண் இணை இயக்குனர் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் வழிகாட்டுதல்படி, இயற்கை உரம் பயன்படுத்தி, திருந்திய நெல் சாகுபடி முறையில், 'திருச்சி - 3' ரக நெல்லை வெறும், 65 சென்ட் நிலத்தில் பயிரிட்டு, 3 டன் அளவுக்கு உற்பத்தி செய்தேன். இந்த ரக நெல்லை கேரளாவில் பயன்படுத்துகின்றனர். பொரி தயாரிக்க, 'திருச்சி - 3' ரகம் ஏற்றது. அடுத்தடுத்து இதே ரகத்தை சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டவுள்ளேன். ஆசிரியையாக இருந்தாலும், விவசாயத்தின் மீதே நாட்டம் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
28-ஜன-201617:43:23 IST Report Abuse
மஸ்தான் கனி ஒரு ஆசிரியை சாதனை படைத்திருக்கிறார் கண்டிப்பாக அவருடைய மாணவர்கள் சாதனையாளராக வருவார்கள்., இனி நல்லாசிரியர் விருது பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28-ஜன-201613:25:26 IST Report Abuse
Srinivasan Kannaiya இனி விவசாயம் தான் நமக்கு வேண்டும் என்பதை உணர்ந்து அவர்களுக்கு ஊக்கமளியுங்கள், அப்பொழுது தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்....
Rate this:
Cancel
alavudeen basha - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜன-201611:33:14 IST Report Abuse
alavudeen basha வாழ்த்துக்கள் இது போன்றே மற்ற விவசாயத்திற்கும் அதிக மகசூல் பெறுவது எப்படி என ஆராய வேண்டும் முக்கியமாக துவரம்பருப்புக்கு புது உக்தி கையாள வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X