கள்ளநோட்டு கும்பலை பிடிக்க மன்னார்குடிக்கு போலீஸ் விரைந்தது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளநோட்டு கும்பலை பிடிக்க மன்னார்குடிக்கு போலீஸ் விரைந்தது

Added : ஜன 29, 2016
Advertisement

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே எஸ்.எஸ்.கோட்டை செக்போஸ்டில் கள்ள நோட்டு கும்பல் சிக்கியது. முக்கிய நபரைத் தேடி போலீசார் மன்னார்குடிக்கு சென்றுள்ளனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் நேற்று முன்தினம் காரில் வந்து வியாபாரிகளிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்து பொருட்கள் வாங்கிய நபர்கள் குறித்து வியாபாரி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, எஸ்.எஸ்.கோட்டை செக்போஸ்டில் 4 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடமிருந்து 1000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட நபர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அதிராமபட்டினம் முகமது அன்சாரி மகன் முகமது ஹனீப்,34 அகமது லெப்பை மகன் முகமது அப்துல்லா,35 ராஜாமுகமது மகன் அஜ்மல்,20 பக்ருதீன் மகன் மீரா முகையதீன் 32 என்பது தெரிந்தது.முகமது ஹனீப் கார் ஓட்டி வந்ததும், மீரா முகைதீன் தலைமையில் மற்றவர்கள் கடைகளில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டைக் கொடுத்து பொருட்கள் வாங்கியதும் தெரியவந்தது. இவர்கள் வந்த கார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ அணிச் செயலருக்கு சொந்தமானது என்பதும், அவரிடம் இரவல் வாங்கிக் கொண்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு கள்ளநோட்டைக் கொடுத்த முக்கிய நபர் மன்னார்குடியில் வசிப்பது தெரியவந்துள்ளது. எஸ்.பி.,ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, அவரைத் தேடி போலீசார் மன்னார்குடிக்கு சென்றுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X