கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்25 ஆயிரம் ஆசிரியர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்25 ஆயிரம் ஆசிரியர்கள் கைது

Added : ஜன 30, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்25 ஆயிரம் ஆசிரியர்கள் கைது

பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், நேற்று மறியலில் ஈடுபட்ட, 12 ஆயிரம் ஆசிரியைகள் உட்பட, 25 ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்; ஆசிரியர்கள் இடையிலான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,
ஆசிரியர் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல போராட்டங்களை நடத்தியது.அதன்பிறகும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 30 முதல் பிப்., 1 வரை, மூன்று நாட்கள், தொடர் மறியல் நடத்தப் போவதாக அறிவித்தது. அதன்படி, நேற்று, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் மறியல் நடந்தது.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட, 12 ஆயிரம் ஆசிரியைகள் உட்பட, 25 ஆயிரம் பேரை, போலீசார் கைது செய்தனர். நேற்று நடந்தது போல், இன்றும், நாளையும் மறியல் போராட்டம் நடத்த,
ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை, ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து, மறியலில் ஈடுபட உள்ளதால், அரசு பள்ளிகளில் வகுப்புகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar Sivam - alain,பிரான்ஸ்
31-ஜன-201602:58:16 IST Report Abuse
Kumar Sivam ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது....ஏன் சங்கடம் ...இப்படி பட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு என்ன சொல்லி தரமுடியும் ......முதலில் இப்போராட்டத்தில் ஈடுபட்ட, 12 ஆயிரம் ஆசிரியைகள் உட்பட, 25 ஆயிரம் பேரை, போலீசார் கைது செய்து ....வேலைய விட்டு தூக்க வேண்டும்..இவர்களுக்கு என்ன குறை..ஆரம்ப சம்பளம் 8000 முடிவு சம்பள 30000-40000 வேற என்ன வேண்டும் ....இது போக டியூஷன் என்கிட்ட தான் படிக்க வேண்டும் இல்லையேல் பெயில் போடுற ஆசிரியரும் உண்டு........அசிரியர் அவர்களே நீங்கள் முதலில் மாணவர்களுக்கு நல்லா பாடம் சொல்லி குடுங்கள் ...ஒழுக்கத்தை சொல்லி குடுங்கள் தவறு இருந்தால் மன்னிக்க நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X