அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ரெய்டு'க்கு தடா? குஷியில் அதிகாரிகள்

சென்னை: 'தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், லஞ்ச புகாரில் அரசு அதிகாரிகள் சிக்கினால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். தேர்தல் முடியும் வரை, 'ரெய்டு' நடத்த வேண்டாம்' என, விஜிலென்ஸ் போலீசாருக்கு, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ரெய்டு'க்கு தடா? குஷியில் அதிகாரிகள்

தமிழக சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகளில், அரசுத் துறைகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதே நேரத்தில், அரசியல் கட்சியினரும் மக்கள் மத்தியில் தங்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அரசுத் துறை அதிகாரிகளை, லஞ்ச ஒழிப்பு போலீசார் மாமூல் பெற்றதாக கைது செய்தால், அது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகி விடும் என்பதால், தேர்தல் முடியும் வரை ரெய்டு நடத்த வேண்டாம் என, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவலால், அரசுத் துறைகளில், மாமூல் மழையில் நனையும் அதிகாரிகள் மத்தியில், மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Advertisement

லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது:அரசுத்துறைகளில் மோசடி அரங்கேறியதாக ஆதாரத்துடன் புகார்கள் கிடைக்கும் பட்சத்தில், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayaraman Duraisamy - Trichy,இந்தியா
01-பிப்-201618:11:22 IST Report Abuse

Jayaraman Duraisamyஎப்பவுமே அதிமுக எதிர்மறையான சிந்தனையில் சீரழிகிறது. கடைசி கட்டத்திலாவது லஞ்ச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தாவது போற நேரதில்லாவது புண்ணியம் தேடிக்கொள்ள கூடாதா?.

Rate this:
saraathi - singapore,சிங்கப்பூர்
01-பிப்-201617:16:42 IST Report Abuse

saraathiஇல்லாவிட்டால் மட்டும் சும்மா அலுவலக சந்து பொந்து இண்டு இடுக்கெல்லாம் புகுந்து லஞ்சம் வாங்குபவர்களையும் கொடுப்பவர்களையும் பிடி பிடி என்று பிடித்து சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தி தண்டனை வாங்கிகொடுத்து நாட்டில் லஞ்சம் என்பதே இல்லாமல் பார்த்து கொண்டிருந்தார்கள்.இப்பொழுது இந்த உத்தரவின் மூலம் அவர்களது நியாயமான மற்றும் லஞ்சத்திற்கு எதிராக பணிசெய்ய முடியாமல் அவர்களது கையை கட்டி போட்டு விட்டார்கள்.ஐயோ தங்களது பணியை செய்ய விடாமல் தடுத்த இந்த உத்தரவை இவர்கள் எப்படித்தான் பொறுத்துக்கொள்ள போகிறார்களோ?தங்களது தொழில் தர்மத்துக்கு விரோதமான இத்தகைய உத்தரவுகளை கண்டு வெகுண்டெழுந்து அதிகாரிகள் ஆர்ப்பாட்டங்களிலோ தற்கொலை முயற்சிகளிலோ ஈடுபடாமல் அந்த ஆண்டவன்தான் அவர்களை காப்பாற்றவேண்டும்.இதுவரையிலும் தங்களது சேவையினால் ஊழலற்ற அரசு நிர்வாக வரிசையில் முதலிடத்தில் வைத்திருந்த தமிழகத்தை இனி இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டால் அதற்காக இந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளை யாரும் குற்றம் சொல்ல கூடாது.

Rate this:
Subbu - chennai,இந்தியா
01-பிப்-201615:10:55 IST Report Abuse

Subbuஇந்த ஆட்சி முடிவடையும் இப்போது முடிந்தவரை கொள்ளை அடி என்ற கொள்கையின்படிதான் எல்லா துறைகளிலும் பகல் கொள்ளை நடந்து கொண்டு உள்ளது, இந்த உத்தரவு அவர்களுக்கு மேலும் கொண்டாட்டம்தான், ஆனால் இப்போது அதிகாரிகள் மிகவும் பலமாக உள்ளார்கள் அவர்கள் கொள்ளைதான் அதிகம்,

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X