மாமூல் சென்னைக்கு... மாடு பண்ணைக்கு!| Dinamalar

மாமூல் சென்னைக்கு... மாடு பண்ணைக்கு!

Added : பிப் 02, 2016
Share
அவிநாசி ரோட்டில், இருபுறமும் ஏராளமான போலீசார் அணிவகுத்து நிற்க, 'டியோ'வை மெதுவாக ஓட்டிக் கொண்டு சென்றாள் மித்ரா. பின்னால் உட்கார்ந்திருந்தாள் சித்ரா.''அக்கா! எங்க பார்த்தாலும் காவிக்கொடியா இருக்கு...ஒரு வாரமா, கோயம்புத்தூர் தான், பிஜேபிக்கு ஸ்டேட் ஹெட்குவாட்டர் மாதிரி ஆயிருச்சு. மோடி வர்றார்ன்னதும், ஆளுக்கு ஆளு 'கூலிங் கிளாஸ்' போட்டுட்டு 'போஸ்' கொடுக்க
மாமூல் சென்னைக்கு... மாடு பண்ணைக்கு!

அவிநாசி ரோட்டில், இருபுறமும் ஏராளமான போலீசார் அணிவகுத்து நிற்க, 'டியோ'வை மெதுவாக ஓட்டிக் கொண்டு சென்றாள் மித்ரா. பின்னால் உட்கார்ந்திருந்தாள் சித்ரா.
''அக்கா! எங்க பார்த்தாலும் காவிக்கொடியா இருக்கு...ஒரு வாரமா, கோயம்புத்தூர் தான், பிஜேபிக்கு ஸ்டேட் ஹெட்குவாட்டர் மாதிரி ஆயிருச்சு. மோடி வர்றார்ன்னதும், ஆளுக்கு ஆளு 'கூலிங் கிளாஸ்' போட்டுட்டு 'போஸ்' கொடுக்க வந்துட்டாங்க. மீட்டிங்குக்கு எப்பிடி கூட்டம் வரப்போகுதோ?'' என்றாள் மித்ரா.
''அதெல்லாம் சேத்துருவாங்க. இந்த மீட்டிங் தான், தமிழ்நாட்டுல எலக்ஷன் பிரசாரத்துக்கான துவக்கம்னு, மாத்தி மாத்தி 'பிரஸ் மீட்' கொடுத்தாங்களே. பார்க்கலையா நீ'' என்றாள் சித்ரா.
''பார்த்தேன்...பார்த்தேன்...ஊருக்குள்ள கட்சில இருக்குற நாலு பேரும், எட்டுத் திசையிலயும் முறைச்சிக்கிட்டு நிக்கிறதையும் பார்த்தேன். இப்பிடித்தான், எம்.பி., எலக்ஷன்ல, அழகா ஜெயிக்க வேண்டிய கோயம்புத்தூர்ல, உள்ளடி வேலை பாத்து, ஒரு தொகுதியை அநியாயமாப் பறிகொடுத்தாங்க. ஜெயிச்சிருந்தா, நம்மூருக்கு எவ்வளவோ நல்லது நடந்திருக்கும்''
''இப்பவும் நடக்குதே...ஸ்மார்ட் சிட்டி அறிவிச்சிட்டாங்க. இ.எஸ்.ஐ., ஹாஸ்பிடல், 580 கோடி ரூபாய்ல முடிச்சுத் திறக்குறாங்க. பிஜேபிகாரங்க, 'டபுள் டமாக்கா' கொண்டாட்டத்துல இருக்காங்க. மோடி இன்னிக்கு நம்ம ஊருக்காக என்ன அறிவிக்கப்போறாரோ?''
''அவரு அறிவிக்கிறது இருக்கட்டும். ஸ்டேட் கவர்மென்ட் அறிவிச்ச எந்தத் திட்டமும் நடக்கலைங்கிற விஷயத்தை, மோடிக்கு முன்னால, யாராவது பேசுவாங்களா? ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷன், பை-பாஸ் ரோடு எல்லாம், தமிழ்நாடு கவர்மென்ட் ஒத்துழைப்பு இல்லாம முடங்கிருச்சுன்னு பிரைம் மினிஸ்டர்ட்ட சொல்லுவாங்களா...அதை அவரு பேசுவாரா?''
''ஜெ., வரலை. ரஜினியும் வர்றதில்லையாம். யாரு வர்றாங்களோ, இல்லியோ, ஏடிஎம்கே கவர்மென்ட்டைப் பத்தி, மோடி பேசுறாரோ, இல்லியோ, ஆனா மோடி வந்து போன பிறகு, கோயம்புத்தூர்ல நம்ம ஈஸியா ஜெயிச்சிரலாம்னு பிஜேபிகாரங்க பல பேரு கனவு காண்றாங்க''
''ஆமாக்கா...அந்த நம்பிக்கையில தான், கோவை தெற்கு தொகுதியை வானதி சீனிவாசன் கேட்ருக்காங்களாம். ஜிகேஎஸ், நந்தகுமார், எஸ்ஆர் சேகர் எல்லாருமே, ஆளுக்கொரு தொகுதிய குறி வச்சிருக்காங்க. மக்கள் ஓட்டுப் போட ரெடியாயிருந்தாலும், அதை இவுங்களால அறுவடை பண்ண முடியுமா. கூட்டணிக் கட்சி இல்லைன்னா, வேலை பாக்குறது யாரு?'' என்றாள் மித்ரா.
''மித்து...டிஎம்கேல, கோவை தெற்கை வீரகோபால் கேக்குறாராம். வடக்குல அவருக்கு சூலம் போலிருக்கு. பொங்கலுாராரோ, அவரோட பையன் பாரியோ எங்க நிப்பாங்கன்னு தெரியலை'' என்றாள் சித்ரா.
''போன சனிக்கிழமை கனிமொழி மீட்டிங் பார்த்தியா...கூட்டம் பரவாயில்லை. ஆனா, பேச்சு தேறலை. மக்களைப் பாத்து, 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா'ன்னு ஜெ., கேக்குறது மாதிரி, 'கிடைச்சுச்சா...உங்களுக்கு கிடைச்சுச்சா'ன்னு அவுங்க கேட்டது, கொஞ்சம் 'எஃபக்டிவ்'வா இருந்துச்சு. டிஎம்கேகாரங்க கொஞ்சம் தெம்பாத்தான் தெரியுறாங்க.'' என்றாள் மித்ரா.
''ஆமா மித்து...நம்மூர் வக்கீல் சங்கத் தேர்தல்ல, கேஎம்டி ஜெயிச்சதும், டிஎம்கே டீமே ஜெயிச்சது மாதிரி சந்தோஷப்படுறாங்க. ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறின்னு வக்கீலுக பேசிக்கிட்டாங்க. அது சரி...மித்து. நம்மூர்க்காரங்க ரெண்டு பேருக்கு பத்மஸ்ரீ அறிவிச்சிருக்காங்களே. அதுவும் நம்ம ஊரு மக்களை ஈர்க்குற யுக்தி தானா?''
''என்னக்கா...நீயும் எதிர்க்கட்சிக்காரங்க மாதிரியே பேசுற. நம்மூர்ல இருந்து, மூணு பேரு, இதே பத்மஸ்ரீ வாங்குறதுக்கு எவ்ளோ செலவழிச்சு, என்னென்ன வழியில முட்டிப்பார்த்தாங்க தெரியுமா?''
''இதென்ன மித்து...புதுக்கதையா இருக்கு. போன கவர்மென்ட்ல தான், காசு கொடுத்து, பல டாக்டர்க பத்மஸ்ரீ பட்டம் வாங்குனதாச் சொல்லுவாங்க. இப்பவுமா?''
''அது இப்போ நடக்கலை. நம்மூர்ல இருக்குற பெரிய...எலும்பு டாக்டர் ஒருத்தரு, சிபிஐல முக்கியப் பொறுப்புல இருந்த நம்மூர்க்காரரு ஒருத்தரைப் பிடிச்சு, பத்மஸ்ரீ வாங்க முயற்சி பண்ணிருக்காரு. காலேஜ், ஹாஸ்பிடல் நடத்துற தங்கமான டாக்டரும், காலேஜூம், சரக்கு பேக்டரியும் நடத்துற ஒருத்தரும் வேற வேற 'டிராக்'ல முயற்சி பண்ணிருக்காங்க. ஒண்ணும் நடக்கலை''
''மயில்சாமி அண்ணாதுரைக்கு இந்த விருது கொஞ்சம் 'லேட்'தான். ஆனா, முருகானந்தம், இதுக்கு ரொம்பவே தகுதியானவரு. அவரு, சாதாரணமா விண்ணப்பிச்சிருக்காரு. விருது அறிவிக்கிறதுக்கு, பத்து நாளைக்கு முன்னால, டில்லியிலயிருந்து ஒரு 'டீம்' வந்து
விசாரிச்சிட்டுப் போயிருக்கு. பேரு வந்துருச்சு'' என்றாள் சித்ரா.
''நீ 'டீம்'னு சொன்னதும், எனக்கு கார்ப்பரேஷன்ல இருக்குற மேயர் டீம், மினிஸ்டர் டீம் ஞாபகம் வந்துருச்சு''
''அது தான் ஊருக்கே தெரியுமே. இவரு வர்ற நிகழ்ச்சிக்கு, அவரு வர்றதில்லை. அவரு வந்தா, இவரு வர்றதில்லை. இது அரசியல். ஆபீசர்க எதுக்கு இந்த 'டீம்'ல சேரணும்?''
''விசுவாசத்தைக் காமிக்கத்தான். அதுலயும் அந்த 'மேடம்' இருக்காங்களே. மேயரை சுத்தமா மதிக்கிறதே இல்லை. அவரு பங்ஷனுக்குப் போறதில்லியாம். போன வாரம் கவுன்சில் மீட்டிங் நடந்தப்போ, கமிஷனர் இல்லை. இவுங்களும் உடனே கிளம்பிட்டாங்க. இன்ஜினியர்க தான், பதில் சொன்னாங்க. அப்புறம் கவுன்சிலுக்கு என்ன மரியாதை இருக்கு?'' என்றாள் மித்ரா.
''இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன் மித்து. முன்னெல்லாம், ஏஇ அல்லது ஜேஇ தான், 'எஸ்டிமேசன்'போடுவாங்க. அது...ஏடபிள்இ, சி.இ., ஏ.சி., அக்கவுண்ட்ஸ், கமிஷனர்னு போகும். இப்போ, இந்தம்மா, 'எல்லா எஸ்டி மேசனும் என் டேபிளுக்கு வரணும்'ங்கிறாங்களாம். கண்காணிப்புக்கா, கவனிப்புக்கான்னு தெரியலை'' என்றாள் சித்ரா.
''கார்ப்பரேஷன்ல பெரிய ஆபீசருக்கு, எல்லா கலெக்சனையும் கரெக்டா வாங்கித்தர்ற லேடி இன்ஜினியருக்கு, புரமோஷன் கொடுத்துட்டாங்க தெரியுமா?''
''அவருக்கு மட்டுமா...இன்னும் ரெண்டு பேருக்குக் கொடுத்திருக்காங்களே?''
''ஆனா, அவுங்க யாரும் டிபிஓ போஸ்ட்டிங்குக்கு 'டிரை' பண்ணலை. ஏற்கனவே விஜிலென்ஸ்ல மாட்டுன இந்தம்மாவை அந்த போஸ்ட்டிங்ல போடுறதுக்கு, பெரிய ஆபீசர் தீவிரமா முயற்சி பண்றாராம்''
''இப்போ, பில்டிங் காசை அடுத்தவுங்கள்ட்ட இருந்து வாங்கிக்கொடுக்குறாங்க. எல்லா பைலும் இந்தம்மாவுக்கே வந்துட்டா, ஈஸியா கலெக்சன் பண்ணிக்கலாம்ல''
''புது 'சிஇ'யும் பழைய ஆளுதான் வர்றாரு போல. இப்போ இருக்குற சிஇ, இங்கயிருக்குற பாலிடிக்ஸ் தாங்காம, 'சென்னைக்கே போறாராம். அவரு போனா, இங்க வேலை பார்க்க ஆளில்லை. எலக்ஷன் வருதுல்ல. அதான்... தூத்துக்குடிக்குப் போன, நம்ம இதிகாச சகோதரரை திரும்பக் கூப்பிடப் போறாங்களாம்'' என்றாள் மித்ரா.
''ஏன்டி மித்து...ஆளும்கட்சி வி.ஐ.பி.,க்குப் பிடிக்காம தான, அவரை தூத்துக்குடிக்கு தூக்கியடிச்சாங்க. இப்போ சமாதானமாயிருச்சா?'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் சித்ரா.
''ஏதோ பெரிய 'அமவுண்ட்'டைக் கொடுத்து தான், முயற்சி பண்றாராம். அநேகமா, சீக்கிரமே வந்துருவார்ங்கிறாங்க'' என்றாள் மித்ரா.
''மித்து...ஒரு தமிழ் வார்த்தை எழுதுனா, ஒரு லட்ச ரூபா கிடைக்குதாம்'' என்றாள் சித்ரா.
''என்னக்கா சொல்ற...ஒரு வார்த்தை...ஒரு லட்சமா?''
''ஆமா...கோயம்புத்தூர்ல இருக்குற டிரான்ஸ்போர்ட் ஆபீசர், சென்னைக்கு கரெக்டா பங்கு அனுப்புறதால, ஆறு மாவட்ட ஆபீஸ்களைப் பாக்குற பொறுப்பு கொடுத்திருக்காங்க . அவருக்கு மாசாமாசம் வர்ற மாமூலைத் தவிர்த்து, ஒரு ஆபீசுக்கு திடீர் 'விசிட்' போனா, ஒரு லட்ச ரூபா அழணுமாம். அப்பிடிக் கொடுத்தா, 'இந்த அலுவலகம் சிறப்பாக உள்ளது'ன்னு 'நோட்' எழுதுவாராம்''
''அவரைப் பத்தி, இன்னொரு மேட்டர் கேள்விப்பட்டேன்க்கா. இந்த ஆறு மாவட்டத்துல, அளவுக்கு அதிகமா பசு மாட்டைக் கொண்டு போற லாரிக பிடிபட்டா, அதுல நல்லா இருக்குற ரெண்டு பசு மாட்டை எடுத்து, விருதுநகருக்குப் பக்கத்துல இருக்குற அவரோட மாட்டுப் பண்ணைக்கு அனுப்பச் சொல்றாராம். இப்பிடியே அந்தப் பண்ணை பிரமாண்டமா வளந்திருச்சாம்'' என்றாள் மித்ரா.
''முருகா... முருகா...'' என்று, 'அழகு குட்டி செல்லம்' பட 'டயலாக்' பாணியில், பல 'மாடுலேஷன்'களில் பேசிய சித்ரா, ''மித்து...நம்மூர்ல சைபர் க்ரைம்ல இருக்குற மணமான ஆபீசர் மேல ஏகப்பட்ட கம்பிளைன்ட் சொல்றாங்க'' என்றாள்.
''யாரு...நான் தான் சுட்டேன்னு 'டுமீல்' விடுவாரே...அவரா, கார்ப்பரேஷன் கடைய போலி ஆவணம் கொடுத்து மாத்துன மேட்டர்ல, கேசை 'வீக்' பண்றதுக்கு, வலுவா ஏதோ பேரம் பேசுறாராம்'' என்றாள் மித்ரா.
''மித்து! ஹவுசிங் போர்டுல பத்திரம் கொடுக்குறதுல, பயங்கரமா 'ரெவின்யூ' பாக்குறாருன்னு ஒரு ஆபீசரைப் பத்திப் பேசுனோமே. அவரு, ஆனைமலை மாசாணியம்மன் கோவில்ல போய், தன்னோட எதிரிகளை ஒழிக்கிறதுக்காக, மிளகா அரைச்சு விட்ருக்காராம்'' என்று சித்ரா சொல்லும்போதே, போலீசார் குறுக்கிட்டு நிறுத்தவே, வண்டியை ஓரம் கட்டினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X