தேர்தலும் சட்டங்களும் 1; "வாக்காளர்”| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

தேர்தலும் சட்டங்களும் 1; "வாக்காளர்”

Added : பிப் 02, 2016 | கருத்துகள் (3)
 தேர்தலும் சட்டங்களும் 1; "வாக்காளர்”

தேர்தல் வருகிறது.தேர்தலில் நிற்கும் வாக்காளருக்கான தகுதி பற்றி கொஞ்சமேனும் நாம் அறிவோம். ஆனால், வாக்களிக்கும் நமக்கும் சில தகுதிகளை தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. சட்டமும் அதையே வலியுறுத்துகிறது.ஆம். வாக்காளப் பெருமக்களாகிய நமக்கும் வாக்களிக்க என சில தகுதிகளை சட்டம் வலியுறுத்துகிறது.இனி இந்தக் கட்டுரைத் தொடரில், தேர்தல் சட்டங்கள் பற்றியும், கொஞ்சம் தேர்தல் வம்பும் பார்க்க்விருக்கிறோம்.முதலில் நம்மைப் பற்றி அறிந்து கொள்வோம். அதாவது வாக்காளர் என்றால் யார் என சட்டம் ஏதும் சொல்லி இருக்கிறதா? சொல்லி இருக்கிறது என்றால் என்ன சொல்லி இருக்கிறது?வாக்காளராக இருப்பதற்கு வயது தவிர வேறென்ன காரணிகள் என்பனவற்றை முதலில் தெரிந்து கொள்வோம்.கள்ள ஓட்டு போடுதல், பொய்யான வாக்குச் சீட்டு வைத்திருத்தல், வாக்குப் பெட்டியைக் கைப்பற்றுதல், ஊழல், கையூட்டுக் குற்றம், தேர்தல் தொடர்பாக பகைமையை வளர்த்து விடுதல், போன்ற குற்றங்களுக்கு அதற்கு அந்தந்த பிரிவுகளில் குறிப்பிடப்ப்ட்ட தண்டனைகளோடு வாக்களிக்கும் உரிமையும் (சில கட்டளைகளுக்குட்பட்டு) பறி போகும் என்பது நாம் அனைவரும் அறிந்திந்திருக்குக்றோமா?வாக்குப் பெட்டிக்குள் வாக்குச் சீட்டு தவிர வேறேதேனும் பொருட்களைப் போடுதல், வாக்குச் சீட்டில் பெயரை அல்லது குறிப்பிட்ட தகவல்களை அழித்தல், மாற்றுதல், உருக்குலைத்தல் என எதனைச் செய்தாலும், அல்லது அதிகாரம் இன்றி வாக்குப் பெட்டியை எடுத்துச் செல்லுதல், வாக்குச் சீட்டைப் பிரித்தல், படித்தல் என எதைச் செய்தாலும், இந்த சட்டத்தில் குறிப்பிட்ட தண்டனை தவிர, குற்றம் செய்தவருக்கு வாக்களிக்கும் உரிமையும் 6வருடங்கள் வரை கூட இல்லாமல் தகுதியின்மை ஆக்கப்படலாம்.இனி வாக்காளர் தகுதியின்மை பற்றி சற்று விரிவாகக் காண்போம்.மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ”வாக்காளர்” என்றால் என்னவென்று பகுதி 1, பிரிவு 2-ல், உட்பிரிவு (e) -ல் வரையறுத்திருக்கிறது.பிரிவு 2(e)வாக்காளர் எனில் தொகுதி ஒன்றின் தொடர்பில் நபரொருவரின் பெயர் அப்போதைக்கு செயல்லாற்றலிலுள்ள வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, பிரிவு 11ல் குறிப்பிடப்பெற்ற ஏதேனும் தகுதிக் கேடுகளுக்கு உட்படாத நபர் எனப் பொருள்படும்.அதாவது வாக்காளர் என்றால், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும்.(அதில் பெயர் இடம் பெற வேறு தகுதிகள்) மற்றும் இதே சட்டத்தின் பிரிவு 11ல் வாக்காளராக இருப்பவருக்கு சில தகுதிக் குறைபாடுகள் இருக்ககூடாது எனச் சொல்கிறது. அந்தக் குறைப்பாடுகளுக்கு உட்படாத நபர் வாக்காளர் என்கிறது.வாக்காளர் என்பதற்கான விளக்கத்தில் இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது.வாக்காளர் பட்டியலில் இடம் பெறுதல்.இதே சட்டத்தின் பிரிவு 11ல் குறிப்பிடப்பெற்ற ஏதேனும் தகுதிக் கேடுகளுக்கு உட்படாத நபர்.பிரிவு 11, மற்றும் 11A கூறுவதாவது..பிரிவு 11 தகுதி இன்மைக் காலத்தை நீக்குதல் அல்லது குறைத்தல் பற்றிச் சொல்கிறது. தேர்தல் ஆணையமானது, ஏதாவது காரணங்களின் அடிப்படையில், பதிவின் பேரில் இவ்விதியின் (பிரிவு 8A வின் கீழ் தவிர)(பிரிவு 8 வேட்பாளர்களின் தகுதியின்மை பற்றிச் சொல்கிறது.) கீழான ஏதேனும் தகுதியின்மையினை நீக்கலாம் அல்லது அத்தகைய தகுதியின்மைக் காலத்தைக் குறைக்கலாம்.பிரிவு 11A சொல்லுவது: குற்றத் தீர்ப்பு மற்றும் ஊழல் செய் நடவடிக்கைகளினால் எழும் தகுதியின்மை பற்றிச் சொல்கிறது.அதாவது வாக்களிக்கததகுதியாக குற்றத் தீர்ப்பு மற்றும் ஊழல் செய் நடவைக்கைகளினால் எழும் தகுதியின்மை பற்றித்தான் அப்படிச் சொல்கிறது.இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 171 E (Punishment for Bribery) அல்லது 171F-ன் கீழ் (Punishment for undue influence or persination at an election)அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 125 / பிரிவு 136 -ன் உட்பிரிவு (2) கூறு (அ) வின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒர் குற்றத்திற்காக குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பின் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார். அப்படியாயின் அந்த சட்டப்ப்பிரிவுகள் என்ன சொல்கின்றன?மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 125 சொல்வதாவது: தேர்தல் தொடர்பாக வகுப்புகளுக்கிடையே பகைமையை வளர்த்தல் பற்றி அதை வாக்காளருக்கான தகுதிக் குறைவாகச் சொல்கிறது.மேற்கண்ட குற்றத்தைச் செய்து, மூன்றாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்கு சிறைத் தண்டனையோ அல்லது பணத் தண்டனையோ அல்லது இரண்டும் பெற்று பிரிவு 125ன் கீழ் தண்டனை பெற்றிருந்தால் அவர் அந்த குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.அதே போல, பிரிவு 136ல் 'பிற குற்றச் செயல்களுக்கான தண்டனைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்ட குற்றங்களில் ஏதேனும் செய்து, தண்டனைத் தீர்ப்பு பெற்றவரும் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.வேட்புமனு எதனையேனும் மோசடியாக உருக்குலைத்தல், அழித்தல் அல்லது தேர்தல் அதிகாரியால் அல்லது அவரது ஆணையின் கீழ் ஒட்டப்பட்டுள்ள பெயர்ப்பட்டியல், அறிவிப்பு பிற ஆவணங்கள், வாக்குச் சீட்டு, அதில் உள்ள அதிகாரக் குறியீடு எதையேனும், உருக்குலைத்தல், அழித்தல் என ஏதும் செய்தாலோ,உரிய அதிகாரம் இன்றி, எவருக்கும் வாக்குச்சீட்டு வழங்குதல், பெறுதல், கைவசம் வைத்திருத்தல் இவற்றைச் செய்தாலோ,வாக்குப் பெட்டிக்குள் போடுவதற்கு அதிகாரம் இல்லாத எதையேனும் மோசடியாகப் போட்டாலோ,வாக்குப் பெட்டி, சீட்டு எதையும் அழித்தல், எடுத்துச் செல்லுதல், பிரித்துப் பார்த்தல் அல்லது அதற்கு இடையூறு விளைவித்தல் என எதுவும் செய்தாலோ,மேற்குறியவற்றைச் செய்ய உதவி செய்தலோ, அப்படிச் செய்தவர், தேர்தல் அலுவலராகவோ, உதவித் தேர்தல் அலுவலராகவோ, வாக்குச் சாவடி தலைமை அலுவலராகவோ அல்லது தேர்தல் தொடர்பான பணி அமர்த்தப்பட்டவராகவோ இருப்பின் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கத்தக்க சிறைத் தண்டனையோ, பணத்தண்டனையோ அல்லது இரண்டுமோ,இந்த குற்றங்களைச் செய்தவர், பிற நபராக இருக்கும்பட்சத்தில், 6 மாதம் வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனையோ, பணத் தண்டமோ, அல்லது இரண்டுமோ தண்டனையாக அளிக்கப்படும். இந்த தண்டனையைப் பெற்றவர்கள்… அந்த குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.மேலும் ஒரு நபர் பிரிவு 8A (1) -ன் கீழ் குடியரசுத் தலைவரின் முடிவினால் ஏதேனும் காலத்திற்கு தகுதியின்மை செய்யப்பட்டால் அதே காலத்திற்கு தேர்தலில் தகுதியின்மை செய்யப்படும். அதாவது இதே சட்டத்தின் பிரிவு 99ன் கீழ் ஓர் உத்தரவு மூலம் ஊழல் நடவடிக்கை செய்ததாகக் கண்டறியப்படும் நபர் தகுதியின்மையாக்கப்பட வேண்டுமா? வேண்டும் எனில் எவ்வளவு காலத்திற்கு எனும் வினாவை தீர்மானிக்கும் பொருட்டு குடியரசுத் தலைவரிடம் சமர்பிக்கப்பட்டு எடுக்கப்படும் முடிவின்படி தகுதியின்மை செய்யப்படலாம். அந்தத் தகுதியின்மைக் காலமானது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து என்னேர்விலும் 6 வருடங்களுக்கு மேற்படலாகது. இந்த முடிவு எடுக்க 90நாட்களே அதிகபட்சம் என இந்த சட்டப்பிரிவு குறிப்பிடுகிறது.பிரிவு 11A(3) -ன் படி மக்களவையின் ஈரவைகளில் ஒன்றிற்கு உறுப்பினராக அல்லது மாநிலம் ஒன்றின் சட்டமன்றம் அல்லது சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது இருப்பதற்கு தகுதியிழப்பு பொறுத்து ஏதேனும் நபரால் சமர்ப்பிக்கப்பட்ட மனு மீது குடியரசுத் தலைவரின் முடிவானது, அதே அளவிற்கு, தேர்தல் சட்டங்கள் (திருத்தச்)சட்டம் 1975 தொடங்குவதற்கு உடன், முன்னர் இருந்தது போன்று, இந்தச் சட்டத்தின் பிரிவு 11-A (1)(b) -ன் கீழ் வாக்களிப்பதற்கு ஏற்பட்ட தகுதியிழப்பு பொறுத்து, அத்தகைய முடிவு சொல்லப்பட்ட வாக்களிப்பு தகுதி இழப்புக்கும் கூட அந்த முடிவு பொருந்துவனவாகும்.'”மேற்சொன்ன பிரிவு 11 A முழுவதும் வாக்களிக்கத் தகுதி இன்மை பற்றிச் சொல்கிறது.ஆனால், தேர்தல் ஆணையமானது, சரியான காரணத்தைப் பதிவதன் மூலம், மேற்சொன்ன 11A(3) தகுதி இழப்பை நீக்கலாம்.மேற்சொன்னவை எல்லாம் எவை எல்லாம் 'வாக்காளருக்கான” தகுதி இன்மைகள்.அப்படியாயின் வாக்காளர் என்றால் யாரெல்லாம்?பொதுவாக வசிக்கும் இடத்தில், அந்தத் தொகுதியில், வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட, 18 வயதுக்கு மேல் வயதான, ஆனால், மனநிலைப் பிறழ்வு, மேற்குறிப்பிட்ட வாக்காளர் தகுதியின்மைக்குள் வராத, எவரும் வாக்காளரே.இவற்றைக் குறிப்பிட்டு வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது. ஆனால் வாக்காளர் அட்டை பெற்றுவிட்டதாலேயே நாம் வாக்களித்துவிட முடியாது. EPIC எனப்படும் Election Photo Idendy Card தேர்தல் வாக்களிக்க கட்டாயம் என்றே தேர்தல் கமிஷன் கூறுகிறது. அதே சமயம் இந்த அடையாள அட்டையுடன், கூட நம்முடைய பெயர் Electoral Roll -ல் இருந்தாக வேண்டும். இல்லை எனில் வாக்களிக்க இயலாது.எனவே நமது பெயர், இருக்கிறதா, இல்லையா என்பதை நிச்சயித்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகிறது. ஏனெனில், ஓட்டளிப்பது நம் உரிமை.வரும் வாரங்களில், ஓட்டளிப்பவர் செய்யக்கூடிய, செய்யக்கூடாதவை பற்றியும், அதற்கான பலன்கள் பற்றியும், சில வழக்குகளோடும், தொடர்ந்து எலக்ஷன் கமிஷன் பற்றிய முக்கிய வழக்குகளோடு ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய தகவல் பலவோடும் சந்திக்கவிருக்கிறோம்.தொடர்வோம் நம் பயணத்தை.- ஹன்ஸா

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X