மீண்டும் ஆக்கிரமிக்கப்படும் வக்பு வாரிய குளம்!| Dinamalar

மீண்டும் ஆக்கிரமிக்கப்படும் வக்பு வாரிய குளம்!

Added : பிப் 03, 2016 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோவில் தெருவில், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான குளத்தை, கட்டட இடிபாடுகள் கொட்டி ஆக்கிரமிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோவில் தெருவில், 3 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. குளமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமானவை. கடந்த, 1913ம் ஆண்டு, சையது அகமது உசேன் என்பவரிடமிருந்து, 3.41 ஏக்கரை, முகமதியான் மத அறக்கட்டளை வாங்கியது. அந்த அமைப்பு தான், பிற்காலத்தில், தமிழ்நாடு வக்பு வாரியமாக மாறியது.ஆற்காடு சாலை வழியாக செல்லும் பயணிகள் இளைப்பாற, அந்த நிலத்தில், 3 ஏக்கரில் ஒரு குளம் வெட்டப்பட்டது. வளசரவாக்கம் பகுதியில் பெய்யும் மழைநீர் அந்த குளத்தில் சேமிக்க வழி வகை இருந்தது. தற்போது அந்த வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.முறியடிப்புகடந்த, ௪0 ஆண்டுகளுக்கு முன்பு, வக்பு வாரியத்தால் குளம் குத்தகைக்கு விடப்பட்டு, மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. தற்போது, விருகம்பாக்கம், மேற்கு கே.கே., நகர் பகுதியின் பிரதான குடிநீர் ஆதாரமாக குளம் விளங்குகிறது.குளத்தின் உபரிநீர், அடையாற்றுக்கு செல்லும் வகையில், மாநகராட்சி தற்போது புதிய மழைநீர் வடிகால் கட்டியுள்ளது. கடந்த, 1997ம் ஆண்டு, ஆற்காடு நவாபின் வாரிசு என்று தன்னைக் கூறிக் கொண்ட நவாப் அலிகான் என்பவர், போலி ஆவணங்கள் மூலம், இந்த குளத்தை, அ.தி.மு.க., பிரமுகர் வி.நெடுமாறனுக்கு விற்றார். அவர், போலி ஆவணங்கள் மூலம் மற்றொருவருக்கு விற்க முயன்றபோது, தகவல் அறிந்து வக்பு வாரியம் தலையிட்டு, குளத்தைக் காப்பாற்றியது. தொடர்ந்து, அதே அ.தி.மு.க., பிரமுகர் மூலம், தனியார் நிறுவனம் குளத்தை கையகப்படுத்த முயன்றது. அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது.மீண்டும் பிரச்னைஇந்த நிலையில், குளத்தில் சிலர் கட்டட இடிபாடுகளைக் கொட்டி ஆக்கிர மிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அருகில் உள்ள தனியார் கல்லுாரியில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் கழிவுகள், குளத்தில் தான் கொட்டப்படுகின்றன. இரவு நேரங்களில், கட்டட இடிபாடுகளை லாரிகள் வந்து கொட்டி விட்டுச் செல்கின்றன.உதயம் காலனி வழியாக வரும் மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடப்படுகிறது. அந்த கழிவுநீர் குளத்தில் கலக்கிறது.இந்த பிரச்னைகளால், சமீபத்திய மழையில், முழுவதுமாக நிரம்பி அழகாக காட்சியளிக்கும் குளம், விரைவில் மாயமாகி விடுமோ என்ற அச்சம், பகுதிவாசிகளிடையே ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு குறித்து வக்பு வாரியத்திற்கு புகார் அளித்துள்ள, சாஜா குணா என்பவர் கூறியதாவது: இந்தக் குளம் பகுதியின் உள்ள நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. குளத்தில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிமாகி வருகின்றன. வக்பு வாரியம், ஆக்கிரமிப்புகளை அகற்றி, இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்ற பெயர் பலகையை வைக்க வேண்டும். குளத்தில் கலக்கும் கழிவுநீரை தடுத்து நிறுத்த வேண்டும். குளத்தை மேம்படுத்த அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வீடுகளில் இருந்து கழிவுநீரை அகற்ற மாதம் ரூ.1,000 செலவுவளசரவாக்கம் மண்டலம், 155வது வார்டில், கே.பி., நகர் உள்ளது. கே.பி., நகர் முதல் பிரதான சாலை, இரண்டாவது பிரதான சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தனியார் கழிவுநீர் லாரிகள், கிரேன், ஜே.சி.பி., ஆகிய வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. கழிவுநீர் லாரிகள் மூலம், காலி மனைகளில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல், கே.பி., நகர் பூங்கா பணிகள் முடியாத நிலையில் உள்ளது. ராமாபுரம் சுற்றி வேறு பூங்கா இல்லாததால், நடைபயணம் மேற்கொள்ளும் அனைவரும் இங்கு தான் வருகின்றனர். பூங்காவை விரிவு படுத்த கோரியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.எங்கள் நகரில் கழிவுநீர் கால்வாய் கிடையாது. அதனால், வீட்டில் உள்ள கழிவுநீரை அகற்ற மாதம், ஆயிரம் ரூபாய் செலவு செய்கிேறாம். சிலர் மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்பை கொடுத்துள்ளனர். இதனால், நிலத்தடி நீர் மாசடையும்.-கே.பி., நகர் குடியிருப்போர் நலச்சங்கம் வளசரவாக்கம்

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GDP - Chennai,இந்தியா
11-பிப்-201615:26:54 IST Report Abuse
GDP கோலடி ஏரி மற்றும் போரூர் ஏரிகள் காபாற்றப்பட வேண்டும். திருவேற்காடு ஆற்றில் லாரிகள் இருந்து கழிவு நீர் ஊற்றுவது நிறுத்தபட வேண்டும். சம்பத்தப்பட்ட அதிகாரிகள் தயவு செய்து உதவுங்கள்
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
09-பிப்-201614:49:30 IST Report Abuse
JeevaKiran முதலில் அரசியல் வியாதிகளை ஒழித்தான் நாடு தானாகவே முன்னேற்றமடையும்.
Rate this:
Share this comment
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
07-பிப்-201619:25:15 IST Report Abuse
Oru Indiyan இந்த மாதிரி குற்றங்கள் செய்யும் எல்லா கட்சி கறைகளையும் கழுவேற்ற வேண்டும்..
Rate this:
Share this comment
தமிழன் - சென்னை,இந்தியா
11-பிப்-201621:15:22 IST Report Abuse
தமிழன்ஒருவருமே மிஞ்ச மாட்டார்கள் என்பது தான் இப்போதைய நிலை.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X