உலகின் முதல் "ரோபோ" விவசாய பண்ணை : ஜப்பானில் அறிமுகம்

Added : பிப் 03, 2016 | கருத்துகள் (3)
Advertisement
உலகின் முதல் "ரோபோ" விவசாய பண்ணை : ஜப்பானில் அறிமுகம்

டோக்கியோ : மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு அனைத்து வகையான உயிரினங்களுக்கும் உணவளிக்கும் விவசாய பணிகளுக்கு, சர்வதேச அளவில் சமீபகாலமாக, பணியாட்கள் கிடைக்காத சூழ்நிலை காணப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு, இயந்திர மனிதர்களை (ரோபோ) கொண்டு செயல்படும் விவசாய பண்ணையை உருவாக்கும் முயற்சியில் ஜப்பான் களமிறங்கியுள்ளது.
ஜப்பானின் கியோட்டோவை தலமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் இந்த ரோபோ விவசாய பண்ணையை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
4,400 சதுர மீட்டரில், படிநிலை முறையில் (floor-to-ceiling shelves) அமைய உள்ள இந்த பண்ணையில் கீரை வகைகள் பயிரிடப்பட உள்ளன. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் கட்டு கீரைகளை அறுவடை செய்யும் வகையில் இந்த பண்ணை அமைக்கப்பட உள்ளது.
விதை விதைக்கும் பணியை தவிர, மற்ற பணிகளான நீர் பாய்ச்சுதல் தொடங்கி அறுவடை பணிகள் வரை ரோபோக்களே செய்துவிடும்.
மற்ற விவசாய பண்ணைகளுடன் ஒப்பிடுகையில், இந்த ரோபோ விவசாய பண்ணையின் மூலமாக, பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ள கீரை வகைகளை ரசாயன கலப்பின்றி அறுவடை செய்யலாம்.
2017ம் ஆண்டின் பிற்பகுதி முதல் இந்த ரோபோ விவசாய பண்ணை, தனது செயல்பாட்டை துவக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
04-பிப்-201607:36:33 IST Report Abuse
K.Sugavanam அதெப்படி ரசாயனக் கலப்பின்றி அறுவடை செய்ய முடியும்? உரம் போட்டுதானே பயிர் செய்யுறாங்க? மனித செயல்களால் ரசாயனம் கலக்கிறதா? அல்லது ரோபாட்டுகள் ரசாயனங்களை நீக்கிவிடுகின்றனவா?
Rate this:
Share this comment
Cancel
vimarsakar - coimbatore,இந்தியா
03-பிப்-201618:12:58 IST Report Abuse
vimarsakar என்னென்னமோ பன்றான்யா ?? இங்கே ஒரு கக்குசுஸ் கட்டுவதற்கு முக்குறானுங்க
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
03-பிப்-201617:58:30 IST Report Abuse
Appu ஜப்பானியின் மூளையை பாராட்டாமல் இருக்க முடியாது...அதே நேரம் இது நமது இந்திய விவசாயிகளுக்கு பயன்தர கூடிய கண்டுபிடிப்பு இல்லை.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X