திருப்புத்தூர் அருகே மரத்தில் கார் மோதல் நகைச்சுவை நடிகர் முத்து மனைவி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்புத்தூர் அருகே மரத்தில் கார் மோதல் நகைச்சுவை நடிகர் முத்து மனைவி பலி

Added : பிப் 04, 2016 | கருத்துகள் (12)
Advertisement
திருப்புத்தூர் அருகே மரத்தில் கார் மோதல்  நகைச்சுவை நடிகர் முத்து மனைவி பலி

திருப்புத்துார்,:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே, நேற்று கார் மரத்தில் மோதியதில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி லேகா (எ) வையம்மாள், 32, இறந்தார்.
மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் முத்து. தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துகிறார்; நடிகராகவும் உள்ளார். நிகழ்ச்சிக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இவரது மனைவி லேகா. நேற்று காலை மதுரையில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு காரில் வந்தார்.
காலை 7.15 மணிக்கு, திருப்புத்துார் கோட்டையிருப்பு அருகே சென்றபோது காரின் டயர் வெடித்து மரத்தில் மோதியது. பலத்த காயமடைந்த லேகா இறந்தார். காரை ஓட்டி வந்த தேனி சின்னமனுாரைச் சேர்ந்த கண்ணன் காயத்துடன் தப்பினார்.
விபத்து குறித்து கண்ணன் கூறுகையில், ''முத்துவிற்கு சொந்தமான இந்த காரை விற்கவும், புதிய படம் எடுக்க சாமி கும்பிடவும் பிள்ளையார்பட்டிக்கு சென்றோம். வழியில் வெடிக்கும் சப்தம் கேட்டது. அதன் பின் என்ன நடந்தது என தெரியவில்லை,'' என்றார்.
டவுன் போலீசார் லேகாவின் உடலை திருப்புத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar Sivam - alain,பிரான்ஸ்
06-பிப்-201604:54:58 IST Report Abuse
Kumar Sivam OMG மதுரை முத்துக்கு என்னுடைய அழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். ....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
05-பிப்-201619:35:09 IST Report Abuse
Pasupathi Subbian சிறந்த எதார்த்தவாதி, நகைச்சுவையாளர், மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த இவரை இறைவன் அழவைத்து விட்டான். சில சமயம் இறைவனின் கணக்கு புரிவதே இல்லை
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
05-பிப்-201614:29:12 IST Report Abuse
இந்தியன் kumar பல பேரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் மதுரை முத்துவுக்கு இறைவன் தாங்கும் சக்தியை கொடுக்க வேண்டும் . ஆழ்ந்த அனுதாபங்கள் இந்தியன் குமார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X