தண்ணீர் மூலம் இயங்கும் டூவீலர் :கல்லூரி மாணவர் கண்டுபிடிப்பு

Added : பிப் 05, 2016 | கருத்துகள் (19) | |
Advertisement
ராஜபாளையம்: தண்ணீரை மின்பகுப்பாய்வு செய்து வாயு உருவாக்கி, அதன் மூலம் டூவீலரை இயக்கும் முறையை ராஜபாளையத்தை சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவர் ராம் கிஷோர் கண்டுபிடித்து உள்ளார்.வாகனங்கள் பெட்ரோல், டீசல், காஸ், போன்றவற்றால் ஓடுவது வழக்கமாக உள்ளது. எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் பலர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகின்றனர். தற்போதைய
 தண்ணீர் மூலம் இயங்கும் டூவீலர் :கல்லூரி மாணவர் கண்டுபிடிப்பு

ராஜபாளையம்: தண்ணீரை மின்பகுப்பாய்வு செய்து வாயு உருவாக்கி, அதன் மூலம் டூவீலரை இயக்கும் முறையை ராஜபாளையத்தை சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவர் ராம் கிஷோர் கண்டுபிடித்து உள்ளார்.

வாகனங்கள் பெட்ரோல், டீசல், காஸ், போன்றவற்றால் ஓடுவது வழக்கமாக உள்ளது. எரிபொருள் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் பலர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுகின்றனர். தற்போதைய நிலையில் மின்பற்றாக்குறையால் இந்த வாகனங்களுக்கும் சிக்கல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு தண்ணீர் மூலம் டூ வீலரை இயக்கும் முறையை ராஜபாளையம் முகில்வண்ணம்பிள்ளை தெருவை சேர்ந்த முரளிராஜா மகன் ராம் கிஷோர் கண்டுபிடித்து உள்ளார். இவர் கரூர் தனியார் பொறியியல் கல்லுாரியில் மெக்கானிக்கல் பிரிவில் 4ம் ஆண்டு படிக்கிறார்.


மின்பகுப்பு முறை:

மாணவர் கூறுகையில், “சுற்றுசூழல் மாசு, பொருளாதாரம் மேம்பாடு கருத்தில்கொண்டு தண்ணீர் வாகனத்தை இயக்க பல மாதங்களாக யோசித்தேன். பெட்ரோலிய பொருட்களை விட ஹைட்ரஜன் சிறந்த எரிபொருள். மின்பகுப்பு முறையில் ஹைட்ரஜன் பெறப்படுவது வழக்கம். தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன் வாயுக்கள் மின்பகுப்பு முறையில் பிரிக்கப்படுகிறது. இது வாயுகலனில் சேகரிப்படுகிறது. பின் ஹைட்ரஜன் வாயுவால் தீப்பிடிக்காமல் இருக்க 'பில்டர்' செய்யப்பட்டு, டூ வீலரின் கார்ப்ரேட்டருக்கு ஹைட்ரஜன் செல்கிறது.


பெட்ரோல்:

அதற்கு முன் வெளிக்காற்றுடன் சேர்ந்து வாயுக்கலவையாக மாறி கார்ப்ரேட்டர் செல்லும் வினை நிகழ்கிறது. பின் சிறிதளவு பெட்ரோல், கூலிங்ஆயிலுடன் இன்ஜினுக்கு செல்லும்போது, டூ வீலர் இயங்க தயாராகிறது. தண்ணீர் எரிபொருள் போல் செயல்படும் இந்த முறைக்கு மாற, வாகனங்களுக்கு ஏற்றவாறு 15 ஆயிரம் ரூபாய் முதல் செலவாகும். மூன்று லிட்டர் டேங்கில் 2.5 லிட்டர் தண்ணீர் ஊற்றி டூ வீலரை இயக்கலாம். நுாறு கி.மீ., மேல் செல்லும் வாய்ப்பு உள்ளது,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (19)

DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
07-பிப்-201611:50:58 IST Report Abuse
DSM .S/o PLM தண்ணீரை மின் பகுப்பு செய்யும் போது மின் உபகரணங்கள் தேவை.. அதற்கான உப கரணங்கள் ஒரு இரு சக்கர வாகனத்தில் அடங்குமா .. வெப்பம் எவ்வளவு வெளியாகும் .. அதை எப்படி கட்டு படுத்துவது .. மின் பகுப்பின் போது பாது காப்பு அவசியம் எந்த அளவு ஒருஇரு சக்கர வாகனத்தில் அதை செயல் படுத்த முடியும்.. நீரை பகுப்பிடும் போது வெளியாகும் bi - products எப்படி டிஸ்போஸ் செய்ய படும் ? சாலையில் ஆங்காங்கே இதற்கு dust collector கள் வைக்க பட வேண்டும் . நேரடி தொடர்பில் உள்ள பாகங்கள் வேகமாக துரு பிடிக்கும். அடிக்கடி மாற்ற வேண்டிவரும்.. இதற்கான செலவு என்ன ? எவ்வளவு தண்ணீரில் எத்தனை கி மீ இயக்க முடியும் ? தண்ணீரின் தரம் ( specification ) என்ன ? இதற்கெல்லாம் விடை வேண்டும் அப்போது தான் இதை commercial ஆக செயல் படுத்த முடியும் ..இதற்கு பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசின் உதவி தேவை ..
Rate this:
Cancel
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
06-பிப்-201621:22:07 IST Report Abuse
Natarajan Ramasamy தண்ணீரை மின்பகுப்பாய்வு செய்து வாயு உருவாக்க , மின்சாரம் எங்கிருந்து கிடைக்கிறது? battery இலிருந்து battery சார்ஜ் செய்ய மின்சாரம் வேண்டும்.பட்டேர்யிளிருந்து நேராக மின் மோட்டார் மூலம் கார் வோட்டலாமே.வாயுவை அசிட்/மெடல் reaction மூலம் காரிலேயே தயாரித்து வரும் ஹைட்ரோஜனை நேராக எஞ்சினில் செலுத்தும் வழி நல்லது.வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Mr y - thamizhnadu,இந்தியா
06-பிப்-201616:15:57 IST Report Abuse
Mr y இது போன்ற ஆக்கபூர்வமான புதிய வழிமுறைகளை தூண்டிவிட அரசாங்கத்தின் பங்களிப்பு உண்டா? உண்டு எனில் அரசாங்கம் இவருக்கு அடுத்து என்ன செய்ய போகிறது என்பதை வைத்து தான் இவரின் உழைப்பின் பலன் அனைவரையும் போய் சேரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X