மதுரை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் உட்பட மூன்று பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான பட்டியலை, தேர்வுக்குழுவினர் இறுதி செய்துவிட்டனர். சில நாட்களில் புதிய துணைவேந்தர்கள் அறிவிப்பு வெளியாகலாம். மேலும், ஐந்து பல்கலைகளுக்கும் துணைவேந்தரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.துணைவேந்தர் தேர்வுக்குழுக்கள் அமைத்தும், மதுரை காமராஜ் பல்கலை உட்பட எட்டு பல்கலைகளின் துணைவேந்தர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.இதனால் எதிர்க்கட்சிகள், 'துணைவேந்தர் பணியிடங்கள் பல கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படுகின்றன. பேரம் படியாததால்தான் இன்னும் நிரப்பப்படவில்லை' என விமர்சித்தன.இதையடுத்து துணைவேந்தர் தேர்வுக் குழுக்களின் பணிகளை உயர் கல்வித்துறை முடுக்கிவிட்டது. இவற்றில் முதல்கட்டமாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உட்பட மூன்று பல்கலைகளின் தேர்வுக் குழுக்கள், அவற்றின் இறுதி
கூட்டங்களை முடித்து பட்டியலை இறுதி செய்துவிட்டன.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு அண்ணா பல்கலை பேராசிரியர் பாஸ்கரன், மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் பெரியகருப்பன் உட்பட மூவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரி
கிறது.உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், வேலுார் திருவள்ளுவர், சென்னை ஆசிரியர் கல்வியியல் பல்கலை ஆகிய மூன்று பல்கலை துணைவேந்தர் பட்டி யலை, தேர்வுக் குழுவினர் இறுதி செய்து விட்டனர்.
இரு குழு பட்டியலை கவர்னரிடம் ஒப்படைத்து விட்டது மீதமுள்ள 5 பல்கலைகளுக்கும், புதிய துணைவேந்தர்களை நியமிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.