பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நெருக்கடி
ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்...
நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல்

தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சட்டசபை தேர்தலுக்கு பின், ரேஷனில் இலவச அரிசி தொடந்து வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில் நெருக்கடி  நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல்

தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில், ஒரு கிலோ அரிசி, 3.50

ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த தி.மு.க., ஆட்சியில், கிலோ அரிசி, இரண்டு ரூபாயாக குறைக்கப்பட்டு பின், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷனில், 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதற்கு, தற்போது மாதம்தோறும், 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், 2.96 லட்சம் டன் அரிசியை, தமிழக அரசு, இந்திய உணவு கழகத்திடம் இருந்து, கிலோ மூன்று ரூபாய்; 5.65 ரூபாய்; 8.30 ரூபாய் என்று, மூன்று வகை விலைகளில்வாங்குகிறது. பற்றாக்குறை அரிசி ஒரு கிலோ, 19 ரூபாய் என்ற விலையில் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு, இலவச அரிசி வழங்குவதால், கூடுதல் சுமை ஏற்பட்டு வருகிறது. இதனால், சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறதுஎன்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை. இதனால், சிலர் அரிசியை, பிற மாநிலங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்கின்றனர். அரிசிக்கு விலை வைத்தால், தேவை உள்ளவர்கள் மட்டும் வாங்குவர். தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தை, செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், மத்திய அரசிடம் இருந்து, குறைந்த விலையில் அரிசி கிடைக்காது. அரிசிக்கான ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செலவும் உயர்ந்து வருகிறது. எனவே, சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசிக்கு பதில், குறைந்தபட்ச விலையை அரசு, நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
07-பிப்-201616:35:29 IST Report Abuse

Chandramoulliசமூக சிந்தனை கொண்ட நல்ல திட்டம். குற்றம் செய்பவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுப்பதை விட்டு விட்டு , திட்டத்தை ரத்து செய்ய சொல்வது சரியல்ல .

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
07-பிப்-201616:17:30 IST Report Abuse

இந்தியன் kumarஆளும் கட்சி சார்பில் யாரும் ஊடகங்களில் பேச பயப்படுகிறார்கள் , நேற்று பண்ருட்டியார் பேட்டி கொடுத்த விதம் சகிக்கல, கூட்டணி கட்சி அடிவருடிகள் வந்து சமாளிக்கிறார்கள் . கட்சியின் எண்ணம் தான் நெஞ்சில் சம்பத் புட்டு புட்டு வைத்தாரே.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
07-பிப்-201616:14:05 IST Report Abuse

இந்தியன் kumarஇலவச அரிசி கொடுப்பது வேஸ்ட் அது குறைந்த விலைக்கு வாங்க பட்டு சூளுர்பேட்டை மின்சார வண்டியில் ஆந்திராவுக்கு கடத்த பட்டு பின் பாலிஷ் செய்யப்பட்டு மீண்டும் தமிழகத்திற்கு வந்து அதிக விலைக்கு விற்க படுகிறது . நாடு முன்னேற இலவச திட்டங்கள் தேவை இல்லை வளர்ச்சிதிட்டங்கள் தான் தேவை . இந்தியன் குமார்

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X