அரசியல் செய்தி

தமிழ்நாடு

Election 2016

பதிவு செய்த நாள் :
அழகிரியை சேர்த்தால் கட்சியை உடைப்பேன்: ஸ்டாலின் 'குண்டு'

'அழகிரியை சந்தித்தாலோ, அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தாலோ, தி.மு.க.,வை உடைப்பேன்' என, கருணாநிதியிடம், கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆவேசமாகக் கூறியதால் தான், அழகிரியை, நேற்று, கருணாநிதி சந்திக்கவில்லை என்றும், அவரை கட்சியில் இணைக்க எடுத்த முயற்சி தள்ளிப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 அழகிரியை சேர்த்தால் கட்சியை உடைப்பேன்: ஸ்டாலின் 'குண்டு'

கடந்த லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்த அழகிரி, 'தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடையும்' என, சாபமிட்டதுடன், கட்சியின் பொருளாளர் ஸ்டாலினையும் தொடர்ந்து, கடுமையாக விமர்சித்து வந்தார். இன்று வரை அந்த விமர்சனம் தொடர்கிறது.

கடும் குழப்பம்:

அதேநேரத்தில், தி.மு.க.,வின் தென்மண்டல அமைப்புச் செயலராக அழகிரி பதவி வகித்த போது, தென்மாவட்ட தி.மு.க.,வில், கடும் குழப்பம் நிலவி வந்தது. ஆனால், அழகிரியை கட்சியை விட்டு நீக்கிய பின், இதை கொஞ்சம், கொஞ்சமாக சரி செய்ய ஆரம்பித்தார் ஸ்டாலின். அவரின் இந்த நடவடிக்கையால், அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்த பலர், ஸ்டாலின் விசுவாசிகளாக மாறினர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதால், அழகிரியால், ஸ்டாலினின் நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை. இருப்பினும், அழகிரியின் கோபத்தை குறைத்து, அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க, அவரது சகோதரி செல்வி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலர்

முயற்சி எடுத்தனர்; ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், சென்னை, கோபாலபுரம் இல்லத்திற்கு நேற்று திடீரென சென்ற அழகிரி, தன் தாயார் தயாளுவை சந்தித்துள்ளார். ஆனால், தந்தையான கருணாநிதியை சந்திக்கவில்லை; கருணாநிதியிடமிருந்து அவருக்கு அழைப்பும் இல்லை.

இதுகுறித்து, தி.மு.க.,வட்டாரங்கள் தெரிவித்தாவது: சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கட்சியில் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது என, கருணாநிதி விரும்புகிறார். அதனால் தான், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி ஆதரவாளர் மாலை ராஜா உள்ளிட்ட சிலரை, மீண்டும் இணைத்து கொண்டார். அதேபோல, அழகிரியையும் சேர்க்க விரும்புகிறார். ஜன., 30ல், அழகிரி தன் பிறந்த நாளையொட்டி, ஆசி பெற வந்தால், அந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி, கசப்புகளை போக்கி விடவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், அன்றைய தினம் கோபாலபுரத்திற்கு அழகிரி செல்லவில்லை. நேற்று தான் சென்றார். இருந்தும், அவரை கருணாநிதி சந்திக்கவில்லை. இதற்கு, ஸ்டாலினின் கடும் எதிர்ப்பே காரணம்.

உழைப்பை கொச்சைப்படுத்துவதா?

'கட்சிக்காக நான் உயிரைக் கொடுத்து உழைக்கிறேன்; என் குடும்பம் உழைக்கிறது. ஆனால், உங்கள் பிள்ளையாக இருந்தும், கட்சிக்கு எதிராக, பல மாதங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்த்தாலோ, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலோ,அது என்னையும், என் உழைப்பையும் கொச்சைப்படுத்துவது போலாகும். அதை, என்னால் அனுமதிக்க முடியாது. 'அதை மீறி, அழகிரியை நீங்கள் சந்தித்தாலோ, அவரை கட்சியில் சேர்ப்பதாக உத்தரவாதம் கொடுத்தாலோ, என் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கடுமையான முடிவை எடுப்பேன். கட்சி பிளவுபடலாம்; நீங்கள் வருத்தப்பட நேரிடும்' என,

Advertisement

கருணாநிதியிடம் ஸ்டாலின் கடுமையாக கூறியுள்ளார். ஸ்டாலினின் இந்தக் கடுமையான பேச்சு காரணமாகவே, நேற்று கோபாலபுரம் வந்த அழகிரியை கருணாநிதி சந்திக்கவில்லை. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

கோபாலபுரம் வீட்டில் நடந்தது என்ன?

கடந்த மூன்று நாட்களாக, சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த அழகிரி, நேற்று காலை, கோபாலபுரம் வீட்டிற்கு திடீரென வந்தார். அங்கு, தன் தாயார் தயாளுவை சந்தித்து ஆசி பெற்றதோடு, அவரின் உடல்நலம் குறித்தும் விசாரித்து உள்ளார். பின், வீட்டின் பிரதான ஹாலில் உள்ள சோபாவில், சிறிது நேரம் அமர்ந்துள்ளார். மீண்டும், தயாளுவின் அறைக்கு சென்ற அவர், தான் ஊருக்குச் செல்லவிருப்பது பற்றி கூறியுள்ளார். அழகிரி வீட்டிற்குள் வந்ததும், அங்கிருந்த கருணாநிதியின் உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பதற்றமடைந்து உள்ளனர். வீட்டிற்கு அழகிரி வந்துள்ள தகவலை, கருணாநிதிக்கு தெரியப்படுத்தியும், அவர் அழகிரியை சந்திக்க அழைப்பு விடுக்கவில்லை. அதேபோல, அழகிரியும், கருணாநிதியை சந்திக்க விரும்புவதாக, யாரிடமும் சொல்லி அனுப்பவில்லை.


- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-பிப்-201615:55:01 IST Report Abuse

Pugazh Vகொஞ்ச நாள் முன்னால் பிரதமரின் மனைவி பாஸ்போர்ட் விவரங்கள் கேட்டதாக வந்த அசெய்தியில், "ஒருவரின் தனிப்பட விஷயம்", "ஒருவரின் குடும்ப விவகாரங்கள்" - இவற்றை விமர்சிக்கக் கூடாது, தவிர்க்க வேண்டும்" என்றெல்லாம் கருத்துக்கள் எழுதின உத்தமர்களின் கும்பல் இப்போ உறங்கப் போய்விட்டதா? ஒரு வட்டாரங்கள் தெரிவித்ததான ஊகச் செய்திக்கு என்னா பில்ட் அப்?

Rate this:
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
09-பிப்-201601:30:08 IST Report Abuse

Sundeli Siththarசொத்துல பங்கு தரனும் என்றால் யாருக்குதான் மனசு வரும்... கடைசிகாலத்தில் கட்சியையோ, பணத்தையோ, சொத்தையோ கொண்டு போகப் போவதில்லை... இருந்தாலும், அதை விட மனசும் இல்லை... அடச்சே.. என்ன கருமம் இப்படிப்பட்ட வாழ்கை..

Rate this:
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
09-பிப்-201601:28:54 IST Report Abuse

Sundeli Siththarதந்தையை பார்க்க மகன் வந்து காத்திருக்க, தந்தையோ இளவனின் மிரட்டலுக்கு பயந்து பெரிய மகனின் வருகையை கேள்விப்பட்டு தனது அறையை விட்டு வெளியே வரவில்லையாம்... என்னே தந்தை மகன் உறவு... இந்த வயதில் இது தேவையா... பேசாமல் இளவலுக்கு அனைத்தையும் தந்துவிட்டு, பெரிய மகனுடன் வீட்டில் அமர்ந்து கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்கலாம்...

Rate this:
மேலும் 114 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X