தமிழ்நாடு

கழிவு நீரால் மாசடைந்த ஏரி: நெல் விவசாயம் பாதிப்பு

Added : பிப் 08, 2016
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரை ஒட்டியுள்ள பாப்பாரப்பட்டி ஏரியில் கழிவு நீர் கலப்பதால், கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் பொய்த்து போய் விட்டது என, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நகரையொட்டி பாப்பாரப்பட்டியில் பெரிய ஏரி உள்ளது. சையத்பாஷா மலை பகுதியில் இருந்தும், இதை ஒட்டியுள்ள சிறு, சிறு மலை குன்றுகளில் இருந்தும் மழை காலங்களில் இந்த ஏரிக்கு தண்ணீர் வரும். இந்த ஏரியின் கீழ் பகுதியில், 50 ஏக்கரில், இரண்டு போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஏரியில் தேங்கும் தண்ணீரை பாப்பாரப்பட்டி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், காலப்போக்கில் இந்த ஏரியை சுற்றிலும் குடியிருப்பு பகுதி அதிகமானது. மேலும், சையத் பாஷா மலையில் இருந்து வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக, அங்கிருந்து தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டது. இதேநேரத்தில், ஏரி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பாப்பாரப்பட்டி ஏரிக்கும் திருப்பி விடப்பட்டதால், ஏரியில் கழிவு நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீர், இந்த ஏரிக்கு திருப்பி விடப்பட்டதால், மருத்துவமனை கழிவுகளால் ஏரியில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இந்த தண்ணீரை கொண்டு நெல் சாகுபடி செய்யும்போது, நெற்கதிர் விடும்போது, கதிர்கள் பதராகி விடுகிறது. இந்த நிலை கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்வதால், ஏரி பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த சரணவன் கூறியதாவது: பாப்பாரப்பட்டி ஏரிக்கு கீழ் பகுதியில் உள்ள விளை நிலங்களில், கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு போகமும் நெல் சாகுபடி செய்து வந்தோம். தற்போது ஏரியில் கழிவு நீர் தேங்கியுள்ளதால், அந்த தண்ணீரை கொண்டு நெல் சாகுபடி செய்ய முடியவில்லை. கழிவு நீரை ஏரிக்குள் விடாமல், புதிய கால்வாய் வெட்டி மாற்றுப்பாதையில் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X