துவக்கத்தில் நான் ஒரு “கீபோர்ட் ப்ளேயர்'. இப்போ…காஞ்சனா 2 ல் இசையமைப்பாளராக துவங்கி, இப்போ எனக்குன்னு ஒரு இடத்தை தக்க வைக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என தினமலர் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார் லியோன் ஜேம்ஸ். பேய் படம் என்றாலும் வாயா…என் வீரா…என மெலோடியால் தன் துவக்கத்தை அழுத்தமாய் பதிவு செய்தவருடன், இசைப்பயணம் குறித்து சில நிமிடங்கள்….“நான் சின்ன பையனா இருக்கும் போது ரஹ்மான் சார் எனக்கு ஒரு கிப்ட் கொடுத்தார். என்னவென்று நினைக்கிறீர்களா? பாடல் தான். வரலாறு படத்தில் “தொட்டாபுரம் டோய்…' பாடலில் வரும் சிறுவன் குரல், நான் தான். குடும்ப நண்பர் என்பதால் ரஹ்மான் சாரை பார்த்து வளர்ந்தவன் நான். இசை மேல அவருக்கு இருக்குற காதலை பார்த்து எனக்கும் இசையின் மேல் காதல் வந்தது.“வாயா… வீரா…' பாடலை 'யுடியூப்பில்' கேட்டு தான் ராகவா லாரன்ஸ் எனக்கு காஞ்சனாவில் வாய்ப்பு அளித்தார். அதே படத்துல சண்டிமுனின்னு ஒரு பாட்டு வரும்… அதோட கம்போசிங்ல ரொம்ப சிரமப்பட்டேன். ஆனா படம் வந்த பின்னாடி, அந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு, மகிழ்ச்சியை தந்தது.இப்போ பரபரப்பா எதிர்பார்க்கிற 'கோ 2' படத்துக்கு நான் தான் இசையமைப்பாளர். அதில் இருபாடல்களையும் பாடியிருக்கிறேன். அது தவிர 'கவலை வேண்டாம்', வீரா படங்களுக்கும் இசை அமைத்து வருகிறேன். கோ 2 படத்தில் வரும் 'உன்னை மாற்றினால்' என்ற டைட்டில் பாடல், அப்துல் கலாமிற்காக 2015ல் உருவாக்கப்பட்டது.
கோ2 படத்தில் அதை அவருக்காக சமர்ப்பிக்கிறேன். 23 வயதில் சினிமாவிற்கு நுழைந்ததாக எல்லோரும் பாராட்டுகிறார்கள். உண்மையில் சினிமாவிற்கு வயது முக்கியமல்ல. நம்மை நிரூபிக்க கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தினாலே சாதித்து விடலாம். அதற்கு அனிருத் தான் நல்ல உதாரணம். இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் என்னிடத்தில் இல்லை. இசையில் நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இப்போ தான் முதல் படி எடுத்து வெச்சிருக்கேன்.எந்த துறையா இருந்தாலும், அதை காதலிச்சா தான் வெற்றி கிடைக்கும். இப்போ நானும்காதலிக்கிறேன். வேலையை தான்… என, சிரிப்போடு விடைபெற்றார் லியோன் ஜேம்ஸ். leonjamesofficial@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE