அவள் இல்லாமல் நானில்லை! - அன்புமணியின் அன்பு

Added : பிப் 08, 2016 | கருத்துகள் (10) | |
Advertisement
தேர்தல் நெருங்கும் நிலையில், 'நான் முதல்வர் வேட்பாளர்' என ஊர் ஊராக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் பா.ம.க., இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி. அரசியல் பேட்டி, அறிக்கை, சர்ச்சைகளுக்கு விளக்கம் என தினமும் 'பிஸி'யாக இருக்கும் நிலையில், மதுரை வந்த அன்புமணியின் அன்பான ஜாலி பேட்டி.* உங்கள் அப்பா ராமதாஸ் டாக்டர் என்பதால், நீங்களும் டாக்டராகி விட்டீர்களா?நான்
அவள் இல்லாமல் நானில்லை! - அன்புமணியின் அன்பு

தேர்தல் நெருங்கும் நிலையில், 'நான் முதல்வர் வேட்பாளர்' என ஊர் ஊராக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் பா.ம.க., இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி. அரசியல் பேட்டி, அறிக்கை, சர்ச்சைகளுக்கு விளக்கம் என தினமும் 'பிஸி'யாக இருக்கும் நிலையில், மதுரை வந்த அன்புமணியின் அன்பான ஜாலி பேட்டி.* உங்கள் அப்பா ராமதாஸ் டாக்டர் என்பதால், நீங்களும் டாக்டராகி விட்டீர்களா?நான் பைலட் ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன். அடிப்படையில் விளையாட்டு வீரன். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என ஆசைப்பட்டேன். ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளியில் படித்தபோது, கால்பந்து, தடகளப்போட்டி அணித்தலைவராக இருந்தேன். 100 மீட்டர் ஓட்டத்தை 11 நொடியில் கடந்து சாதித்தவன். சேலத்தில் அதை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. அப்பா ஆசைக்காக டாக்டர் ஆனேன்.* அவர் சிபாரிசில் மருத்துவ சீட் கிடைத்ததா?சார்...நான் படிப்பில் படு பிர்லியண்ட். 1986 ல் விழுப்புரம் மாவட்டத்தில், பிளஸ் 2 வில் மாவட்ட முதலிடம் பெற்றேன். 'மெரிட்டில்' சென்னை மருத்துவக்கல்லுாரியில் இடம் கிடைத்து படித்தேன். திண்டிவனம் அருகே, ஒரு கிராமத்தில் ஒன்றரை ஆண்டு டாக்டராக பணிபுரிந்தேன். ஆறு வயது முதல் அதுவரை ஹாஸ்டல் வாழ்க்கையில் இருந்த எனக்கு கிராமம், சமூகம் என எல்லாம் அப்போது தான் புரிய ஆரம்பித்தது.* நீங்கள் அப்பா செல்லமா, அம்மா செல்லமா?ஐயோ...அப்பா 'ஸ்டிரிக்ட் ஆபிசர்'. அவரிடம் பயம் கலந்த மரியாதை இன்றும் உள்ளது. அரசியல் விஷயங்கள் பேசிக்கொள்வோம். மற்ற விஷயங்களை என் அம்மா சரஸ்வதி மூலமாகதான் பேசுவேன். நான் இன்றும் அம்மா செல்லம். என் தங்கை தான் அப்பா செல்லம்.* அப்பாவை பார்த்து நீங்கள் பயந்து போய் பேசுவீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களிடம் எப்படி?எனக்கு மூன்று பெண் குழந்தைகள். அவர்களுக்கு என்னிடம் பயம் எல்லாம் இல்லை. நான் அவர்களுக்கு நல்ல 'பிரண்ட்'.* இப்போது மருத்துவம் பார்ப்பது உண்டா?'பிராக்டீஸ்' செய்து பல ஆண்டு ஆகி விட்டது. சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் பாதித்த மக்களை பரிசோதித்தேன். விமானத்தில் வந்தபோது ஒரு பயணிக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது. உடனடியாக என்னிடம் இருந்த மாத்திரையை கொடுத்தேன். அரைமணிநேரத்தில் அவர் சரியாகிவிட்டார்.* உங்கள் பொழுதுபோக்கு என்ன?தினமும் எப்படியாவது பாட்மின்டன் ஆடியே ஆக வேண்டும். இல்லைனா துாக்கம் வராது. தமிழக பேட்மின்டன் அசோசியேஷன் தலைவராக உள்ளேன். எனக்கு இயற்கை, சுற்றுச்சூழலில் தீராத ஆர்வம் உண்டு. பசுமை தாயகம் அமைப்பு உருவாக்க இதுவும் ஒரு காரணம். இயற்கை போட்டோகிராபி எனது 'ஹாபி'. கடல் என்றால் உயிர்.* அடிக்கடி கடலுக்கு செல்வீர்களா?'ஸ்கூபா டைவிங்' போவேன். மீன் பிடிப்பேன். பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடலில் எல்லாம் மீன் பிடித்திருக்கிறேன் என்றால் பாருங்கள்.* திரைப்படம் பார்க்க மாட்டீர்கள் போல...யார் சொன்னது. குடும்பத்துடன் வாரம் ஒரு திரைப்படம் பார்த்து விடுவேன்.* நீங்கள் திரைப்படங்களையும், திரைத்துறையினரையும் விமர்சிக்கிறீர்களே..?நாங்கள் திரைத்துறைக்கு எதிரானவர்கள் அல்ல. திரைப்பட கலாசாரத்திற்குதான் எதிரானவர்கள்.* உங்களுக்கு பிடித்த நடிகர்?சர்ச்சையை ஏற்படுத்திவிடுமே... பரவாயில்லை. கமல் ரொம்ப பிடிக்கும். நல்ல நடிகர். தனிப்பட்ட முறையில் ரஜினியிடம் நட்பு உண்டு. நாங்கள் கேட்டுக்கொண்டதால் திரையில், சிகரெட் பிடிப்பது போல் அவர் நடிப்பது இல்லை.* பிடித்த நடிகை?வேண்டாம். அது பிரச்னையை ஏற்படுத்திவிடும்.* உங்கள் பொது வாழ்க்கைக்கு மனைவி சவுமியா எப்படி உதவுகிறார்?அவள் இல்லாமல் நானில்லை. அவர் பசுமை தாயகத்தில் உள்ளார். குடும்பம், அரசியல், கஷ்ட, நஷ்டங்கள் என பல அழுத்தங்களை நான் அவருடன் பகிர்ந்து கொள்வேன். குழந்தைகள், மனைவி, அம்மாதான் என் அழுத்தம் போக்கக் கூடியவர்கள்.* நண்பர்கள் வட்டாரம் எப்படி?எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்கள் பள்ளி காலத்தில் இருந்து தொடர்கிறார்கள். எனது நண்பர்கள்தான் எனக்கு முதல் குடும்பம் என மனைவி கூட கிண்டல் செய்வார். அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். இன்றைக்கும் அவர்கள் 'டேய், அன்பு' என்று அழைத்து பேசுவார்கள். அதைதான் நானும் விரும்புகிறேன்.* மற்றவர்கள் எப்படி அழைத்தால் விரும்புவீர்கள்?டாக்டர் அன்புமணி... என்ன ஆச்சரியமா இருக்கா? அரசியலில் மற்றவர்கள் எல்லாம் கவுரவ டாக்டர்கள். நான் நிஜ டாக்டருங்க!* நீங்கள் அசைவ பிரியராமே?ஆமாம். ஜப்பானீஷ் உணவு வகைகள் அதிகம் பிடிக்கும். அதில், மீன் உள்ளேயும், சாதம் வெளியேயும் இருக்கும் சூசி மீன் உணவு, சாசிமீ(பச்சை மீன்), மீன் குழம்பு மற்றும் பழவேற்காடு நண்டு பிடிக்கும். சைவத்தில் வெந்தய காரக் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு, வாழைக்காய் பொரியல் பிடிக்கும்.தொடர்புக்கு: anbumaniinforchange@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - trichy,இந்தியா
23-பிப்-201602:23:05 IST Report Abuse
sankar இருப்பவர்களில் இவர் சிறப்பாக தெரிகிறார். இந்த முறை முயலுங்கள், வெற்றிக்கு வாழ்த்துக்கள்.பதவிக்கு வந்தால் தயவு செய்து ஊழல் செய்யாதீர்கள். பெற்றவர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும். இன்னும் அதிகமாக மக்களை சந்தியுங்கள். ஸ்டாலினை விட மக்கள் உங்களை நம்புவார்கள்
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
14-பிப்-201618:06:55 IST Report Abuse
அம்பி ஐயர் தமிழ்ப் பள்ளிகளில் படிக்காமல் ஏன் ஏற்காடு மாண்ட்ஃபோர்ட் பள்ளிகளில் படித்தீர்....? நீங்களும் உங்க அப்பாரும் அரசு ஊழியர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்று பிலாக்கணம் பாடுகிறீர்....?? ஊருக்குத்தான் உபதேசமா...??
Rate this:
Cancel
JAIRAJ - CHENNAI,இந்தியா
14-பிப்-201612:57:18 IST Report Abuse
JAIRAJ அன்புமணி ..........இதே மாதிரி இருந்து விடுங்கள். உங்களின் இந்த முகம் நன்றாக இருக்கிறது.அரசியல் வேண்டாம். அங்குதான், அதன் செயலால் வெறுப்பு உண்டாகிறது. 60 வயதை நெருங்குபவரெல்லாம் இளைNரணி தலைவர் என்று சொல்வதை கேட்டு எரிச்சலாகத்தான் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X