இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.1.14 லட்சம் கோடி: ரிசர்வ் வங்கி தகவல்

Updated : பிப் 08, 2016 | Added : பிப் 08, 2016 | கருத்துகள் (28) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் உள்ள 29 பொதுத்துறை வங்கிகளில், கடந்த 2013- 15ம் நிதியாண்டில், வாராக் கடன் என அறிவிக்கப்பட்ட தொகை ரூ.1.14 லட்சம் கோடி என தெரியவந்துள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ரிசர்வ் வங்கி அளித்த பதில் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட தொகையை விட, கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 2012ம்
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.1.14 லட்சம் கோடி: ரிசர்வ் வங்கி தகவல்

புதுடில்லி: இந்தியாவில் உள்ள 29 பொதுத்துறை வங்கிகளில், கடந்த 2013- 15ம் நிதியாண்டில், வாராக் கடன் என அறிவிக்கப்பட்ட தொகை ரூ.1.14 லட்சம் கோடி என தெரியவந்துள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ரிசர்வ் வங்கி அளித்த பதில் மூலம் தெரியவந்துள்ளது.


கடந்த 9 ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட தொகையை விட, கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 2012ம் நிதியாண்டில் , வாராக்கடன் என அறிவிக்கப்பட்ட தொகையான ரூ.15,551 கோடி என அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுத்துறை வங்கிகளில் அதிகமாக கடன் வாங்கியவர்கள் குறித்தும், ரூ.100 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்கள் குறித்த விபரம் தங்களிடம் இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் மட்டும் கடந்த மூன்று நிதியாண்டுகளில், அதிகளவில், வாராக்கடன் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கடந்த 2013ல் ரூ.5,594 கோடியாக இருந்த வாராக்கடன், 2015ல் ரூ.21,313 கோடியாக அதிகரித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2014ல் ரூ.1947 கோடி என்ற வாராக்கடனிலிருந்து 2015ல் ரூ,6,587 கோடியாக அதிகரித்துள்ளது.


அதேநேரத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிரா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தூர் ஆகிய இரண்டு வங்கிகளில், கடந்த 5 ஆண்டுகளில் வாராக்கடன் இல்லை என தெரியவந்துள்ளது. கடந்த 2004 முதல் 2012 வரையிலான காலக்கட்டத்தில்,பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் 4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வந்தது. 2013- 15 நிதியாண்டில் வாராக்கடன் 60 சதவீதம் அதிகரித்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Balasubramanian - Lusaka,ஜாம்பியா
10-பிப்-201615:30:37 IST Report Abuse
R.Balasubramanian சுமார் 40 வருடங்கள் வங்கி பணியில் உள்ளேன். என்றுமே காணாத அளவுக்கு வங்கியில் பணிபுரிவோறது செயல் திறம் மற்றும் தரம் குறைந்துள்ளது இதற்கு முக்கிய காரணம், எந்தவிதமான பயிற்சி யும் இல்லாமல் அல்லது கொடுத்த பயிற்சியை சரியாக பயன்படுதிக் கொள்ளாமல் அலட்சிய போக்கில் செயல் படுவோர் மிக அதிகம். மண்டல மற்றும் மேல் அலுவலகங்களில் உள்ள உயரதிகாரி அநேகர், குமாஸ்த வேலைக்கு கூட லாயக்கு இல்லாதவர்கள். மேல் அதிகாரிகளை காக்கை பிடித்தே முன்னுக்கு வந்தவர்களை வைத்து என்ன செய்யமுடியும். இவர்களது குறிக்கோள், தங்களது அதிகாரிகளை குஷி படுத்துவது தான். குஷியான அதிகாரிகளை வைத்து மேலே வருவது. மற்றும் எப்பாடு பட்டாவது டார்கெட் முடிக்கணும். வராத கடன் என தெரிந்தும், கண்டபடி கடன் கொடுத்து டார்கெட் இ பூர்த்தி பண்ணுவதும் ஒரு முக்கிய காரணம். இன்றைக்கு வெளியில் தெரிந்த வராத கடனைப்போல் பலமடங்கு வெளியில் தெரியாமல் உள்ளது. மிகவும் பிரமிப்பான விஷயம், இந்த கடனெல்லாம் எப்படி வசூல் ஆஹும் என்பது தான். R.பாலசுப்ரமணியன்
Rate this:
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
10-பிப்-201610:04:12 IST Report Abuse
Divaharan கடன் கொடுkfபதற்கு ஒரு கமிசன். தள்ளுபடி செய்ய ஒரு கமிசன். செக்யூரிட்டி இல்லாமலா கொடுத்திருப்பார்கள். வசதியனவர்களுக்கு எதற்கு இதுமாதிரி கடன். வசதி குறைந்த எல்லோருக்கும் இதுமாதிரி கடன் கொடுத்தால் நல்லது ?
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
09-பிப்-201617:52:35 IST Report Abuse
JeevaKiran அதெப்படி கடன் கொடுத்த மறுவருடமே அது வாராக்கடனாகி விடுகிறது? எங்கேயோ கணக்கு உதைக்கிறதே? யாருடைய பையோ / பாக்கெட்டோ நிரம்புகிறது? மக்கள் வரிப்பணம். 100 கோடிக்கு மேல் கடன் வாங்கியவரின் விவரம் RBI யிடம் இல்லை என்றால் எப்படி? நாடு உருப்பறடமாதிரி தெரியவில்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X