மதுரை: மதுரையில் ரூ.1.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள, உலக தமிழ் சங்கத்தின் சங்கத் தமிழ் காட்சிக் கூடத்தை, முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து காணொளி (வீடியோகான்பரன்ஸ்) மூலம் நேற்று திறந்தார்.இக்கூடத்தில் புறநானுாறு, தொல்காப்பியம், சங்க கால மன்னர்கள் அதியமான், பாரி போன்றோர் சிற்பங்கள், சுவர் ஓவியங்கள், வரைபடங்கள் உள்ளன.
முதல்வர் ஜெ., திறந்து வைத்த பின், கலெக்டர் கே.வீரராகவ ராவ், மேயர், கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் முத்துராமலிங்கம், சுந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி காட்சிக் கூடத்தை பார்வையிட்டனர்.வளாகத்தில் 'தாய்க்கூடு குறுநீர் பாசன முறை'யில் நடப்பட்ட மரக்கன்றுகளை ஆய்வு செய்தனர். ஒரு வாரம் வரை காட்சி கூடத்தை இலவசமாக பார்வை
யிடலாம்.ரூ.100 கோடியில் உலக தமிழ்ச் சங்கம் 87 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக ரூ.25 கோடியில் சங்க கட்டடம் முடியும் நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் கருத்தரங்கு கூடங்கள், நுாலகம், பார்வையாளர் அரங்கம் இதில் இடம் பெற்றுள்ளன. காம்பவுண்ட் சுவர்களில் 1330 திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது.
இதை திறப்பது குறித்து இன்று சென்னையில் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் உதயசந்திரன், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார். முதல்வர் ஜெ., மூலம் திறக்க அதிகாரிகள்
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.