இரண்டே வார்த்தை நிறைய வெற்றி அவர்தான் தர்ஷினி.
இரண்டே வார்த்தை நிறைய வெற்றி அவர்தான் தர்ஷினி.

இரண்டே வார்த்தை நிறைய வெற்றி அவர்தான் தர்ஷினி.

Updated : பிப் 09, 2016 | Added : பிப் 09, 2016 | கருத்துகள் (6) | |
Advertisement
இரண்டே வார்த்தை நிறைய வெற்றி அவர்தான் தர்ஷினி.அது ஒரு பெண்களுக்கான கபடி விளையாட்டின் போட்டியில் இறுதிச்சுற்றுபோட்டியின் ஆரம்பம் முதலே 'மதர்லேண்ட் கிளப்' அணியை தனது தோளில் சுமந்து, அணியை இறுதிவரை கொண்டு வந்த இளம் வீராங்கனை 'டயானா' என்ற தர்ஷினி மீதுதான் மொத்த பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் குவிந்திருந்தது.அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டிய
இரண்டே வார்த்தை நிறைய வெற்றி அவர்தான் தர்ஷினி.இரண்டே வார்த்தை நிறைய வெற்றி அவர்தான் தர்ஷினி.

அது ஒரு பெண்களுக்கான கபடி விளையாட்டின் போட்டியில் இறுதிச்சுற்று

போட்டியின் ஆரம்பம் முதலே 'மதர்லேண்ட் கிளப்' அணியை தனது தோளில் சுமந்து, அணியை இறுதிவரை கொண்டு வந்த இளம் வீராங்கனை 'டயானா' என்ற தர்ஷினி மீதுதான் மொத்த பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் குவிந்திருந்தது.

அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டிய பரபரப்பான 'பைனல் ரைடு' , எதிரணி களத்தில் கபடி பாடிச்சென்ற தர்ஷினி ஒரு சிறுத்தை சீறுவது போல பாய்ந்து எதிரணி களத்தை கலக்கி எடுத்து, தன்னை பிடிக்கவந்த இருவரிடமும் பிடிபடாமல் துள்ளி குதித்து பாய்ந்து பறந்து வந்த எல்லைக்கோட்டை தொட்டு அணிக்கு வெற்றி தேடித்தந்த போது எழுந்த கையொலி அரங்கத்தையே அதிரச்செய்தது.

ஆனால் அரங்கத்தை அதிரச்செய்த அந்த கைதட்டல் ஒசையை வீராங்கனை தர்ஷினியால் மட்டும் கேட்கஇயலாது.

காரணம் பிறந்த போதிருந்தே காது கேட்காது பேச்சும் வராது.

தனது இந்த குறைகளை தாண்டி கபடி விளையாட்டில் மாநிலம் அறிந்த வீராங்கனையாக சாதித்துவரும் தர்ஷினி யார்?

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பாலகிருஷ்ணன்-ஜெயந்தி தம்பதியினரின் மகள்தான் தர்ஷினி

பெண் குழந்தை வேண்டும் என்று வேண்டி பெற்ற பெண் பேசும்,கேட்கும் திறனில்லாமல் போனது குறி்த்து மிகுந்த மனவேதனை அடைந்தாலும், அதை குழந்தையிடம் காட்டிக்கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் வளர்த்தனர்.காது கேட்காத வாய் பேசாத சிறப்பு பள்ளியில் சேர்த்தால் கூட எங்கே வேதனைப்படுவாளோ? என நினைத்து அனைத்து பிள்ளைகளும் படிக்ககூடிய பள்ளியிலேயே படிக்கவைத்தனர்.

தர்ஷினிக்கு படிப்பைவிட விளையாட்டின் மீது அதீத ஈடுபாடு, அதிலும் கபடி விளையாட்டை பார்த்ததில் இருந்து அந்த விளையாட்டின் மீது பெருத்த ஆர்வம்.

பள்ளிகளுக்குள் நடைபெற்ற கபடி விளையாட்டில் தனி ஒருத்தியாய் தர்ஷினி காட்டிய பாய்ச்சலையும் வேகத்தையும் விவேகத்தையும் துறுதுறுப்பையும் பார்த்தவர்கள் கோவை மகேந்திரா கபடி கிளப் நிர்வாகியும் பயிற்சியாளருமான வி்ஸ்வநாதனிடம் கொண்டு போய் சேர்த்தனர்.அப்போது தர்ஷினி ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் வயது பதினொன்றுதான்.

கபடி விளையாட்டிற்கு முக்கிய தேவையே 'கபடி கபடி' என மூச்சு விடாமல் பாடியபடி விளையாடவேண்டும்.வாய் பேசவராத தர்ஷினியால் எப்படி கபடி பாடமுடியும் என யோசித்த போது, இரண்டு மாதம் அவகாசம் கொடுங்கள் உங்களுக்கு மட்டுமல்ல களத்தில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும்படி உரக்கவே கபடி பாடி காட்டுகிறேன் என்று வேண்டுகோளாகக் கேட்டு கடுமையாக பயிற்சி எடுத்து கபடி கபடி என்ற வார்த்தையை உச்சரிக்க கற்றுக்கொண்டார்.

அதன் பிறகு பல்வேறு போட்டிகள் பரிசுகள் பாராட்டுக்கள் பதக்கங்கள் கோப்பைகள்

இப்போது பத்தாம் வகுப்பு படிக்கும் தர்ஷினிக்கு தெரியாத கபடி களமே கிடையாது,தர்ஷினியை தெரியாத கபடி களங்களும் கிடையாது.மாநிலத்தை தாண்டி மத்திய பிரதேசம் வரை போய் விளையாடிவிட்டு வந்துவிட்டார்.

பள்ளி மாணவி என்றாலும் கல்லுாரி மாணவியருக்கு சவால்விடும் வீராங்கனை இவர்.. கேட்சர்,ரைடர் என்று இவர் ஒரு ஆல்ரவுண்டர்.ஏழு பேர் கொண்ட அணியில் இவர் விழாத வரை அணியும் விழாது.ஆறு பேரை அவுட் செய்து தர்ஷினி மட்டுமே மிஞ்சியிருந்தால் கூட அவுட்டான ஆறு பேரையும் மீட்டு விடுவார் அணியையும் தோல்விபாதையில் இருந்து மீண்டுவரச்செய்துவிடுவார்.ஒரு வேளை அணி தவிர்க்கமுடியாமல் தோற்றாலும் கூட 'வுமன் ஆப் த சீரிஸ்','வுமன் ஆப் தி மேட்ச்' என்று ஏதாவது ஒரு கோப்பையை தட்டிவந்துவிடுவார்.

இப்படி கபடியை உயிராக நேசிக்கும் தர்ஷினியை உயிருக்கும் மேலாக நேசிக்கின்றனர் பெற்றோர்.தன் மகள் வீராங்கனையாக வளர்கிறார் என்பதை விட விளையாடிவிட்டு வரும்போது தங்கள் செல்ல பாப்பாவிற்கு அடிபடாமல் இருக்கவேண்டுமே என்பதுதான் பெரும் கவலையாக இருக்கும்.

தர்ஷினி விளையாடப்போகும் இடத்திற்கு எல்லாம் அவரது தாயார் ஜெயந்தியும் கூட சென்றால் அது தர்ஷினிக்கு யானை பலம் கொடுக்கும் ஆனால் வீட்டின் பொருளாதார சூழ்நிலை அம்மாவும் வேலைக்கு போயாகவேண்டும்,.காது கேட்கும் கருவி பொருத்தினால் காது கேட்கும் என்ற சூழ்நிலை ஆனால் பதினைந்தாயிரம் இருந்தால்தான் அந்த கருவி வாங்கமுடியும் என்பது யதார்த்தநிலை.

தர்ஷினியின் இந்த நிலையைப்பார்த்து இரக்கப்பட நுாறு பேர் இருந்தார்கள் ஆனால் பணம் கொடுத்து வாங்கித்தர ஈரநெஞ்சம் மகேந்திரன் ஒருவர் மட்டுமே இருந்தார்.காது கேட்கும் கருவி பொருத்தப்பட்ட நிலையில் தர்ஷினியின் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம்,கொஞ்சம் கொஞ்சமாய் வார்த்தைகள் வந்துவிழுகின்றன.

இதே போல இன்னோரு காதிலும் காது கேட்கும் கருவியை மாட்டிவிட்டால் இன்னும் முன்னேற்றம் உண்டு என்கிறது மருத்துவம் இன்னோரு மகேந்திரனாக இருக்க விரும்புகிறவர்கள் தர்ஷினியின் தந்தை பாலகிருஷ்ணனிடம் தொடர்பு கொள்ளலாம் எண்:9944993804.(அவர் வேலை பார்க்கும் இடத்தில் போன் பேசமுடியாது ஆகவே இரவு 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பேசினால் நல்லது.)
.
நாளை நாட்டிற்கு பெருமை தேடித்தரப்பபோகும் தேசிய வீராங்கனையாக தர்ஷினி நிச்சயம் வருவார் அவருக்கும் இப்போதே வாழ்த்துக்களை பகிர்வோம்.

-எல்.முருகராஜ்.
murugaraj@dinamalar.in

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (6)

இந்தியன் kumar - chennai,இந்தியா
11-பிப்-201614:37:17 IST Report Abuse
இந்தியன் kumar ஊனம் ஒரு குறை அல்ல என்று நிருபித்த தர்ஷினிக்கு வாழ்த்துக்கள் . மென் மேலும் சாதனை புரிய வாழ்த்து கிரைய்ன் .
Rate this:
Yuvi - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
08-மார்-201617:04:07 IST Report Abuse
Yuviஊனம் என்று எதுவும் கிடையாது. இது ஒரு மாற்றுத்திறன். கடவுள், நம்மால் எவ்வளவு கஷ்டத்தை தாங்க முடியுமோ அதை மட்டுமே கொடுப்பார். தர்ஷினியின் தனித்திறமைக்கு தலை வணங்குகிறேன்....
Rate this:
Cancel
Mohamed Farook Basha (Barry) - Trichy-2,இந்தியா
11-பிப்-201607:11:22 IST Report Abuse
Mohamed Farook Basha (Barry) அம்மா தர்ஷினி நீங்கள் இந்தியாவின் தங்க மங்கையாக வளர வேண்டும், சாதனைகள் பல கண்டு வாழ்வில் புகழின் சிகரத்தில் இருக்க வேண்டும். அதைகண்டு உங்கள் தாய் தந்தை பெருமகிழ்ச்சி அடையவேண்டும் என்று மனதார வாழ்துகிறேன் அம்மா
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
10-பிப்-201617:39:39 IST Report Abuse
ravi அரசு எவ்வளவோ தேவையில்லாத தர்மங்களை செய்கிறது - இதை செய்யலாமே - நாமும் செய்யணும் - ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X