மயிலாப்பூர்:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், ஏப்., 3ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், 2004ம் ஆண்டு, ஆகஸ்டில் கும்பாபிஷேகம் நடந்தது. ௧௨ ஆண்டுகள் ஆகிவிட்டதால், திருப்பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
இந்த நிலையில், வரும், ஏப்., ௩ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் நேற்று அறிவித்தனர். அதை முன்னிட்டு, மயிலாப்பூர் கிராம தேவதை, கோலவிழியம்மனுக்கு, மார்ச், ௧1ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அந்த கோவிலில், ௫௦ லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.