170 டன் ராட்சத பாறாங்கல்லை ஏற்றி சென்ற 'ஹைட்ராலிக் ட்ரைலர்' நடுவழியில் 'மக்கர்' | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

170 டன் ராட்சத பாறாங்கல்லை ஏற்றி சென்ற 'ஹைட்ராலிக் ட்ரைலர்' நடுவழியில் 'மக்கர்'

Added : பிப் 12, 2016 | கருத்துகள் (5)
Advertisement
 170 டன் ராட்சத பாறாங்கல்லை ஏற்றி சென்ற 'ஹைட்ராலிக் ட்ரைலர்' நடுவழியில் 'மக்கர்'


திருவண்ணாமலை :திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதி மலையிலிருந்து, 15 அடி அகலம், 30 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட, 170 டன் எடையுள்ள ராட்சத பாறாங்கல்லை, கோவை ஈஷா மையத்திற்கு எடுத்துச் செல்ல, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறப்பட்டது. இந்த கல் பார்ப்பதற்கு, ஒருபுறம் லிங்கம் போன்றும், மறுபுறம் யானை போன்றும் காணப்படுகிறது. இந்த கல்லை ஏற்றிச் செல்ல, சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணியை செய்து வரும் நிறுவனம் மூலம், ஹரியானா மாநிலத்தில் இருந்து, 122 டயர் கொண்ட 'ைஹட்ராலிக் ட்ரைலர்' வரவழைக்கப்பட்டது. இந்த ட்ரைலரில், ராட்சத பாறாங்கல்லை ஏற்றும் பணி, கடந்த 30 நாட்களாக நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், இந்த பணியில் ஈடுபட்டனர்.
பணி முடிந்த நிலையில், நள்ளிரவு ராட்சத ட்ரைலர் கோவைக்கு புறப்பட்டது. அப்போது, மலையடிவாரத்திலிருந்து, 5 கி.மீ., துாரம் சென்றவுடன், ராட்சத கல்லின் எடை தாங்காமல், ைஹட்ராலிக் ட்ரைலர் பழுது ஏற்பட்டு, நடு சாலையில் நின்று விட்டது. சுதாரித்த டிரைவர், இதை சிரமமப்பட்டு ஓரம் கட்டி நிறுத்தினார். இதனால், விபத்து எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொங்குநாடு - பொள்ளாச்சி,இந்தியா
12-பிப்-201615:20:53 IST Report Abuse
கொங்குநாடு இத வச்சு ஈஷா மையம் காசு பார்க்கும், இது எல்லாம் இருக்கும் இடத்தில இருந்தால் தான் நலம் . தெய்வம் நின்று கொல்லும் பாருங்க
Rate this:
Share this comment
Cancel
ram - vlr  ( Posted via: Dinamalar Android App )
12-பிப்-201614:38:19 IST Report Abuse
ram ஏன், கோவையில் பாறாங்கல்லே கிடையாதா? திருவண்ணாமலையில் இருந்து தான் கொண்டு போகனுமா?
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
12-பிப்-201614:09:19 IST Report Abuse
Girija ஈஷாவினால் கோயம்பத்தூர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, வனத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டியதால் யானைகளும் சிறுத்தைகளும் ஊருக்குள் வந்து மக்களை கொல்கிறது, இதுவரை இறந்த மக்களின் எண்ணிக்கை லே, சியாசின் பகுதியில் இறந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை விட அதிகம். ஈஷாவினால் நொய்யாறு நொந்து போய் கிடக்கிறது, நீர் வரத்து வழிகளை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டியுள்ளனர். இப்போது அபாயகரமாக பாறாங்கல்லை லாரியில் எடுத்து செல்கின்றனர், சாலைகளை பயன்படுத்தும் மக்கள் பாதுகாப்பை பற்றி சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை, இதற்க்கு யார் அனுமதி கொடுத்தனர் என்றும் தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X