பொழியப்போகுது தங்க மழை!| Dinamalar

பொழியப்போகுது தங்க மழை!

Added : பிப் 12, 2016
Share
அன்றை தினம் சித்ராவும் மித்ராவும் நாளிதழ்களில் வந்திருந்த, தேர்தல் செய்திகளை படித்துக் கொண்டிருந்தனர்.'பல்லடம் தொகுதிக்கு போட்டியிட பணம் கட்டிட்டு வந்திருக்கலாம் போலிருக்கு' என பேச்சை துவக்கினாள் மித்ரா.'என்னாச்சுப்பா? ஒனக்கும் எம்.எல்.ஏ., ஆசை வந்துருச்சா?' என கிண்டலடித்தாள் சித்ரா.'இப்படித்தான் ஏகப்பட்ட பேருக்கு ஆசை வந்திருக்கு. ஆளும் கட்சிக்காரங்க
பொழியப்போகுது தங்க மழை!

அன்றை தினம் சித்ராவும் மித்ராவும் நாளிதழ்களில் வந்திருந்த, தேர்தல் செய்திகளை படித்துக் கொண்டிருந்தனர்.
'பல்லடம் தொகுதிக்கு போட்டியிட பணம் கட்டிட்டு வந்திருக்கலாம் போலிருக்கு' என பேச்சை துவக்கினாள் மித்ரா.
'என்னாச்சுப்பா? ஒனக்கும் எம்.எல்.ஏ., ஆசை வந்துருச்சா?' என கிண்டலடித்தாள் சித்ரா.
'இப்படித்தான் ஏகப்பட்ட பேருக்கு ஆசை வந்திருக்கு. ஆளும் கட்சிக்காரங்க மட்டுமல்ல, எல்லா எதிர்க்கட்சிகளும், பல்லடத்துல மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தி, தேர்தல் வரப்போகுதுங்கறத மக்களுக்கு ஞாபகப்படுத்துனாங்க. ஆளும் கட்சியில, பல்லடம் தொகுதிக்கு ஏகப்பட்ட 'கிராக்கி', 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வுக்கு மீண்டும் 'சீட்' கிடைக்குமான்னு தெரியலை. புதுமுகத்துக்கு வாய்ப்பு இருக்குனு தெரிஞ்சதும், 150 பேருக்கு மேல, பல்லடம் தொகுதிக்கு பணம் கட்டியிருக்காங்க.'
'தனி தொகுதியா இருக்கறதால, எப்படியாவது வாய்ப்பு கிடைக்கும்னு அவிநாசி தொகுதியை சேர்ந்தவங்களும், 110 பேர் வரைக்கும் பணம் கட்டிட்டு காத்திருக்காங்க. திருப்பூர் வடக்கு தொகுதியில, அமைச்சரே மீண்டும் நிக்கணும்னு, அடக்கி வச்சிருக்காங்க. இருந்தாலும், சிட்டி மம், சிட்டியில எலக்ட்ரிக்கல் கடை வச்சிருக்கும், எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி, முன்னாள் குறைவானவங்களே பணம் கட்டியிருக்காங்க. தெற்கு தொகுதிக்கு, மாமன்ற கவுன்சிலர்கள், கட்சி மாவட்ட நிர்வாகிகன்னு, 82 பேர் பணம் கட்டியிருக்காங்க. யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்குமோ தெரியலை' என, முடித்தாள் மித்ரா.
'அதெல்லாம் சரி, 'கேப்டன்' கட்சியில, ரொம்ப குஷியா இருக்காங்களாமே,' என, கேட்டாள் சித்ரா.
'ஆமாக்கா, தெற்கு தொகுதி முழுக்க முழுக்க மாநகராட்சி பகுதிக்குள் வருது. உள்ளாட்சி பிரதிநிதிகளால, மக்கள் மத்தியில அதிருப்தி நிலவுது. அதனால, எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அதிகம்னு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியிருக்கு. எந்த கூட்டணி அமைஞ்சாலும், தெற்கு தொகுதியில களமிறங்குதுன்னு, கேப்டன் கட்சிக்காரங்க முடிவு செஞ்சிருக்காங்க' என்றாள் மித்ரா.
'இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன். மக்கள் அதிருப்தி அதிகமா இருக்கற வார்டுல, ரோடு, டிச்சு வேலை செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. கவுன்சிலர்களை கூப்பிட்டு, லிஸ்ட் வாங்கியிருக்காங்க. மாநகராட்சிக்கு லம்ப்பா ஒரு நிதித வரப்போறதால, ரோடு, டிச்சு வேலை ஆரம்பிச்சா. மக்கள் அதிருப்தி குறைஞ்சிடும்னு, ஐடியா பண்ணியிரக்காங்க' என்றாள் சித்ரா.
'பெண்களை கவர்வதற்காக, தங்க காசு பரிசு திட்டத்தையும் ஆளும் கட்சி றிவிச்சிரக்கு,' என, பேச்சை நிறுத்தினாள் மித்ரா.
'என்ன, தங்க காசு பரிசு திட்டமா,' என சித்ரா வாயை பிளக்க, 'ஆமாக்கா, வர்டு வாரியா பெண்களுக்கு விளையாட்டு போட்டி நடத்த ஆரம்பிச்சிருக்காங்க. நான்காவது வாரத்துல, மாவட்ட அளவில், மிகப்பெரிய அளவுல போட்டி நடக்கப்போகுது. வெற்றி பெறும் பெண்களுக்கு, தங்க காசு பரிசு கொடுக்க முடிவு பண்ணியிருக்காங்க. தேர்தல் அறிவிக்கிறதுக்கு முன்னாடியே, தாஜா பண்ணிட்டா, பாதி வேலை மடிஞ்ச மாதிரி தானே?' என்றாள் மித்ரா.
'இந்த முறை, தேர்தல்ல, வெற்றியை நிர்ணயிக்கப் போற 'சக்தி'யா பெண் வாக்காளர்களே இருக்கப் போறாங்க. அந்தளவுக்கு, பெண் வாக்காளர்கள் ஓடடு ஜாஸ்தியாகிருக்கு. இதை தெரிஞ்சுக்கிட்டு, முதல்வர் பிறந்த நாளை காரணமா வச்சு, விளையாட்டு போட்டி நடத்தி, 'விளையாட்டு' காட்ட ஆரம்பிச்சிருக்காங்க போலிருக்கு' என்றாள் சித்ரா.
'எதிர்க்கட்சிக்காரங்க முகாமில் சத்தத்தையே காணோமே' என, மித்ரா கேட்க, 'ஆசிரியர்கள் சங்க கூட்டுக்கமிட்டியினர் மறியல் போராட்டம் செஞ்சதால கைதாகி, திருமண மண்டபத்தில இருந்தாங்க. அவுங்கள, தி.மு.க. மாஜி அமைச்சரும், மாஜி மேயரும் சந்தித்து, ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. ஓட்டுச்சாவடியில, ஆசிரியர்கள் தானே உட்கார்ந்திருப்பாங்க. அதனால், ஆசிரியர்கள் இயக்கங்களை தங்கள் பக்கம் இழுக்க, காய் நகர்த்த ஆரம்பிச்சிருக்காங்க' என்றாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X