தமிழக கட்சிகளால் தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

Election 2016

பதிவு செய்த நாள் :
தமிழக கட்சிகளால் தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி

'தமிழக வாக்காளர் பட்டியலில், 40 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு முன், அவர்களின் பெயர்களை நீக்க வேண்டும்' என, ஆளும் கட்சி தவிர, அனைத்து கட்சிகளும் வலியுறுத்துவதால், தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஜன., 20ல், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது; அதன்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2011 சட்டசபை தேர்தலின் போது, தமிழகத்தில், 4.75 கோடிவாக்காளர்கள் இருந்தனர். தற்போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.'ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால், வாக்காளர் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்' என, தி.மு.க., வலியுறுத்தியது.

சென்னை வந்த, தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை சந்தித்த, பா.ஜ., - காங்., - தே.மு.தி.க., - தி.மு.க., - இந்திய கம்யூ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ., பிரதிநிதிகள், 'போலி வாக்காளர்களை நீக்கிவிட்டு, புதிய பட்டியலை வெளியிட வேண்டும்; போலி வாக்காளர்களை நீக்கிய பின்னரே, தேர்தலை நடத்த வேண்டும்' என, கோரிக்கை விடுத்தன. தி.மு.க., சார்பில், முதல் கட்டமாக, 51 சட்டசபை தொகுதிகளில் உள்ள, இரண்டு லட்சம் போலி வாக்காளர் விவரங்கள், ஆதாரத்துடன் சமர்ப்பிக்கப்பட்டன. மீதமுள்ள சட்டசபை தொகுதிகளில், போலி வாக்காளர் விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.'அவை வந்ததும், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்' என, தி.மு.க., வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னையால், தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.

தமிழக கட்சிகளால் தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி


எவ்வளவு பேர் நீக்கப்படுவர்?

இது தொடர்பாக, தமிழக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக, அனைத்துக் கட்சிகளும் கூறியது, தேர்தல் கமிஷனர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் பலர், இடம் மாறி செல்லும் போது, புதிய இடத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர். ஆனால், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரைநீக்குவதில்லை.இதனால், ஏராளமானவர்களின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றுள்ளது. அதேபோல, இறந்தவர்களின் பெயர்களும் நீக்கப்படாமல் உள்ளது. இந்த விவரத்தை ஏற்றுக் கொண்ட தேர்தல் கமிஷனர்கள், பிப்., 15 முதல், 29ம் தேதி வரை, இரண்டு வாரங்களுக்கு, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர். பொதுவாக, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், யாருடைய பெயரையும் நீக்குவதில்லை. புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் பெயர்களை மட்டும் சேர்த்து, துணை வாக்காளர் பட்டியல் வெளியிடுவர்.

தற்போது, அரசியல்கட்சிகள் நெருக்கடி காரணமாகவும், தி.மு.க., சார்பில், ஒவ்வொரு சட்ட சபை தொகுதியிலும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்களை நீக்கும்படி, மனு கொடுக்கப்பட்டுள்ளதாலும், பட்டியலை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தி.மு.க.,வினர் கொடுத்ததற்காக, சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயரை நீக்க முடியாது. வீடு, வீடாக சென்று சோதனை

Advertisement

செய்த பிறகே, அவர்கள் கொடுத்த விவரம் சரியானதே என்பதை அறிந்த பிறகே நீக்க முடியும். இதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்களை, வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.இது தவிர, புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவற்றையும் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. முறையாக ஆய்வு செய்யாமல், பெயர்களை நீக்கினால், சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் போராட்டத்தில் குதிக்கும் நிலை ஏற்படும்.

எனவே, குறைந்த காலத்திற்குள், அனைத்து வீடுகளுக்கும் சென்று ஆய்வு செய்து, நீக்கப்பட வேண்டியவர்களுக்கு, உரிய முறையில் தகவல் தெரிவித்து, அவர்கள் பெயரை நீக்க வேண்டும் என்பதால், தேர்தல் கமிஷனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், புதிய சாப்ட்வேரை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பெயர்களின் பட்டியலை தயார் செய்துள்ளனர். அதில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, தகவல் தெரிவித்து நீக்க முடிவு செய்துள்ளனர். எனவே, எவ்வளவு வாக்காளர்களின் பெயர்களை, தேர்தல் கமிஷன் நீக்கப் போகிறது என்பது, அடுத்த வாரம் தெரியும்.இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
15-பிப்-201603:07:59 IST Report Abuse

ezhumalaiyaanஇது ஆளும் கட்சியின் மீதுள்ள காழ்புணர்ச்சியின் காரணம்.மேலும் இரண்டு இடத்தில் இருந்தாலும் எப்படி எல்லாருமே எல்லா இடத்திலும் வோட்டு போடுவார்களா.அவர்களில் மற்ற கட்சிகளுக்கு ஆதரவானவர்களும் இருப்பார்களே.எப்படி ஆளும் கட்சி ஒன்றுக்கே சாதகமாக இருக்ககூடும் ..இது திசை திருப்பும் செயலாக தெரிகிறது.தமிழகத்தில் அந்தக்காலத்தில் வீராணம் திட்டத்தை அமுல்படுத்த ஆரம்பித்தபோது சைதாபேட்டையில் மிக அதிகமான சேர்க்கை இருந்தது அந்த காலகட்டத்தில் சென்னையில் இருந்தவர்களுக்கு தெரியும்.சென்னைக்கும் ,தமிழகத்திற்கும் இது புதிதல்ல.

Rate this:
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-பிப்-201618:13:12 IST Report Abuse

P R Srinivasanவாக்காளர் பட்டியலில் நிறைய தவறுகள் இருக்கிறது. பெயர், விலாசம் முதலிவைகளை சரிசெய்ய வெப்சைட் இல் சரிசெய்ய எல்லோருக்கும் அனுமதி அள்ளிக்கவேண்டும். நான் எனது பெயரில் உள்ள தவறுகளை சரிசெய்ய முயற்சி செய்தேன் முடியவில்லை. ஆதார் என்னை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
14-பிப்-201617:51:03 IST Report Abuse

Balajiஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வாக்காளர்களின் பெயரை பழைய இடத்தில் நீக்க தேர்தல் ஆணையமே நேரடியாக நடவடிக்கை எடுத்து நீக்கவேண்டும்..... இல்லையென்றால் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.... அவ்வாறு மாறும் வாக்காளர்களும் புதியதாக வந்த இடத்தில் தான் வாக்களிப்பார்... பழைய இடத்தில் அவருக்கு பதிலாக வேறு யாரும் வாக்களித்து விடுவர் என்பதை எப்படி நம்புவது என்று தெரியவில்லை.... தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகள் அந்த நபரின் அடையாள அட்டையை பார்க்காமலா வாக்களிக்க அனுமதிப்பார்......

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X